உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரை நரம்பு 163

ஆரை நரம்பு 163 அதிகமாக மலபார்க் கடற்கரையிலுள்ள எடகாட்டிற் கும் கடற்புரத்திற்கும் இடையில் கிடைக்கின்றன. படம் 8. ஒட்டு மீன் வரிசை XI - எக்கெனிஃபார்மிஸ் (Echeneiformes). இந்த வரிசையில் ஒட்டு மீன்கள் (sucker fishes) அடங்கும். இவை சுறா மீன்களின் மேலும், துள்ளி (tunney) மீன்களின் அடியிலும், கப்பல்களுக்கு அடி யிலும், திமிங்கிலம், டால்ஃபின் ஆகியவற்றின் வயிற் றுப் பகுதியிலும் ஒட்டிக்கொண்டு புற ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. இந்தியக் கடலில் எக்கெனிஸ் நாக்டேரஸ் (Echeneis naucrates), ரிமோரா ரிமோரா (Remora remira), ஆகிய இரண்டு ஒட்டும் மீன்கள் வாழ்கின்றன. இவை நீண்ட உடலும், தட்டையான தலையும் கொண்டவை. முதல் முதுகுத் துடுப்பு ஒட் டிக் கொள்வதற்கு ஏற்ப இரு வரிசைத் தகடுகள் கொண்ட ஒட்டுறுப்பாக இவை மாற்றமடைந் துள்ளன. இவை மிகச் சிறந்த உணவு மீன்கள். நூலோதி எஸ்.வி.எம்.அப்துல் ரஹீம் 1. இராணி கந்தசுவாமி, தென்னிந்திய மீன்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. 2. சந்திரன், இரா., கல்தூரி சந்திரன், மீன்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974. 3. Chandy, M., Fishes, National Book Trust, India, New Delhi, 1970. 4. Day, F., The Fishes of India, Vol. I & II, William Dawson & Sons Ltd., London, 1958. 5. Young, J.Z., The Life of the Vertebrates, Oxford University Press, London, 1950. அ. க. 3-11அ ஆரை நரம்பு ஆரை நரம்பு (radial nerve) மேற்கைப் பின்னலின் பிற்பக்க நாணின் முக்கிய கிளையாகும். ஆரை நரம்பு 5 ஆவது, 6ஆவது, 7ஆவது, 8ஆவது கழுத்துத் தண்டு நரம்புகளின் முன்கிளைகளில் இருந்தும், முதலாவது நெஞ்சுத் தண்டு நரம்பின் முன்கிளை யில் இருந்தும் உருவாகும் நரம்பு நார்களைக் கொண் டுள்ளது. இது இயக்கு நரம்பு நார்களையும் உணர்வு நரம்பு நார்களையும் கொண்ட ஒரு கலப்பு நரம்பா கும். இந்நரம்பு புயத்தின் பிற்பாகத்திலுள்ள தசை கள். தோல் ஆகியவற்றிற்கு நரம்பு நார்களை வழங்கும். இந்த நரம்பு அக்குள் தமனியின் இறுதிப் பகு திக்கும், மேல்கைத் தமனியின் தொடக்கத்திற்கும் பிற் பக்கமாகக் கீழ்நோக்கி முத்தலைத் தசையின் (triceps), நீள் தலைக்கும் (long head), உட்புறத் தலைக்கும் இடையே சென்று, பின்பு இங்கிருந்து சரிவாக மேற் கை எலும்பிற்குக் (humerus) குறுக்காக முதலில் முத் தலைத் தசையின் உட்புறத் தலைக்கும் (medial head), வெளிப்புறத் (lateral) தலைக்கும் ஊடாக வந்து பின்பு வெளிப்புறத் தலைக்கு உள் பக்கத்திலுள்ள சிறிய பள்ளத்தினுள் சென்று மேற்கை எலும்பின் வெளிப்பக்கத்தை அடையும். பின்பு அங்குள்ள தசை களுக்கு இடையிலான மென்சவ்வுத் தடுப்பை ஊடுரு விச் சென்று மேற்கை எலும்பின் முற்பக்கமாயுள்ள தசைகளை அடையும். இங்கிருந்து மேற்கைத் தசை (brachialis), மேற்கை ஆரைத்தசை (brachioradialis) கையைப் பின்பக்கமாக விரிக்க உதவும் நெடிய ஆரை மணிக்கட்டு நீள் தசை (extensor carpi radial longus) என்ற மூன்று தசைகளுக்கு இடையில் உள்ள சிறிய கால்வாயினூடு கீழ் நோக்கிச் சென்று முழங்கை மூட்டிற்கு மேல் பாகத்தில் இருகிளைகளாகப் பிரியும். இவ்விரு கிளைகளில் ஒன்று தசைக்குள் ஆழமாகவும் (deep terminal branch) மற்றது மேலாகவும் (super- ficial) செல்லும். தசைக்கு மேலாகச் செல்லும் இறுதி நரம்புக் கிளை தொடங்கும் இடத்தில் இருந்து ஆரை எலும் பிற்கு வெளிப்பக்கமாயுள்ள தசைக்கு மேலாகக்கீழ்க் கை (forearm) அண்மை (proximal 2/3 பாகம் வரைச் செல்லும். அப்பொழுது மேற்கை ஆரைத் தசைக்குப் பின்புறமாகவும், ஆரைத் தமனிக்கு வெளிப் புறமாக வும் (lateral to radial artery) அதனுடன் சேர்ந்து கீழ்நோக்கிச் செல்லும். பின்பு மணிக்கட்டிலிருந்து 7 செ. மீ. மேலே இந்நரம்புக் கிளை ஆரைத் தமனியை விட்டு விலகி மேற்கை ஆரைத்தசை நாணிற்கு ஆழ மாக (deep to the tendons of brachior adialis) ஆரை எலும்பிற்கு வெளிப்புறமாகக் கீழ் நோக்கிச் சென்று அங்குள்ள தசைக்கு இடையிலான ஆழ்நிலை இழைமத்தை (deep fascia) ஊடுருவிச் சென்று கீழ்க்