உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்‌ஃபாச்‌ சிதைவு 199

Em 10.543 mev E₁₁ 10.422 mev 9.492 mev E2 8.780 mev E படம் 5. அணுக்கருவில் உள்ள & துகளின் ஆற்றல் மட்டங்கள் 3 சிதையும்பொழுது ஆல்ஃபாத் துகள்கள் காற்றில் நேர்கோட்டில் செல்கின்றன. அப்பொழுது அவை காற்றின் மூலக்கூறுகளுடன் மோதி, தங்களது ஆற்றலை இழந்து மிகத் தொலைவிற்குள்ளேயே தடைசெய்து நிறுத்தப்பட்டு, மறைந்தும் விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஓரிடத்தனிமத்தின் எல்லா ஆல்ஃ பாத் துகள்களும் சம ஆற்றலுடையவையாக இருப் பதால், சம தொலைவே செல்கின்றன. வேறு ஓரிடத் தனிமத்தின் ஆல்ஃபாத் துகள்கள் வேறு சமதொலைவு சென்று மறையும் (படம் 6). இதுபோல் ஒவ்வொரு நொடியும் 370 கோடி ரேடியம் அணுக்கள் ஆல்ஃ பாத் துகள்களாகவும், ரேடான் ஆவியாகவும் சிதை வுறுகின்றன! யுரேனியம் அணுவிலிருந்து ஒரு ஆல்ஃ பாத் துகள் சிதைய 10 கோடி ஆண்டுகள் ஆகும் போது எப்படி ரேடியம் அணுவிலிருந்து ஒவ்வொரு படம் 6. காற்றில் ஊடுருவும் திறன் ஆல்ஃபாச் சிதைவு 199 நொடியும் 370 கோடி ஆல்ஃபாத் துகள்கள் சிதைய முடியுமென்பது மிகவும் வியப்பானது. 10 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆல்ஃபாத் துகள்கள் சிதையத் தொடங்கியிருக்கின்றன. பல இடையூறுகளை எதிர்த்து ஒன்றன்பின் ஒன்றாக நொடிக்கு 370 கோடி ஆல்ஃபாத் துகள்கள் சிதைவுறுகின்றன. ஆகையால் அந்தத் துகள்கள் எல்லாம் இப்பொழுது அதே இடைவெளியில் வெளியில் வந்து கொண்டிருக் கின்றன. ஒரு கிராம் ரேடியத்தில் இரண்டரை இலட்சம் கோடி அணுக்கள் உள்ளன. அவற்றின் அரைப்பகுதி, அதாவது ஒண்ணேகால் இலட்சம் கோடி அணுக்கள் கதிரியக்கத்திற்குள்ளாகி 3690 ஆண்டுகளில் சிதைவுறுகின்றன. மேலும் ஒரு 1690 ஆண்டுகளில் எஞ்சியுள்ள சரிபாதி சிதைவுறும். இது போலவே சிதைவு நிகழ்ந்துகொண்டு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு தனிமத்திலிருந்து அரைப்பங்கு சிதைய எடுக்கும் காலத்திற்கு, அரை ஆயுள்காலம் என்று பெயர். இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் சிலவற்றின் அரை ஆயுள்காலம் ஒரு நொடியில் 6 10 ஆயிரம் கோடியில் ஒரு பங்கு; ஆனால் சில தனி மங்களின் அரை ஆயுள்காலமோ பல நூறு கோடி ஆண்டுகள் ஆகும். சிதைவால் ஏற்படும் பலனும் விளைவும்: சூரியனில் ஆல்ஃபாச் சிதைவு தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கரி, நைட்ரஜன், முதலியன வினையூக்கிகளாக இயங்கி, ஹ்ைட்ரஜன் அணுக்களை மோதவிடுகின்றன. அப்போது நான்கு, நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து உருகி ஹீலியம் அணுக்கரு அல்லது ஆல்ஃபாத் துக ளாக மாறுகின்றன. இந்த உருகும் நிகழ்ச்சியில் சிறிது பொருண்மை, ஆற்றலாக மாறி, அதில் ஒரு சிறுபகுதி மட்டும் கிடைப்பதால் உயிரினங்களுக்கு வாழ்வளிக்கின்றது. இந்நிகழ்ச்சி ஏற்படாவிட்டால் சூரிய ஆற்றலும் கிடைக்காது. உலகில் உயிரினங் களும் வாழ முடியாது. ஆனால் இந்நிகழ்ச்சியில் சூரியனின் பொருண்மை சிறிது சிறிதாகக் குறைந்து ஒரு காலத்தில் சூரியனே இல்லாமல் போய்விடும். மேலும் சூரியனிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் எல்லாம் செலவானவுடன், அண்டத்தில் பல எதிர் வினைகள் ஏற்பட்டு அனல் கக்கும்; கண் கூசும் ஒளி யுடன் கூடிய பேரிழப்பைத் தரவல்ல விளைவுகள் ஏற்படலாம். சூரியனும் உருக்குலைந்து குளிர்ந்து விடும். பூமி சூரியனுக்கு அருகில் இருப்பதால் நமக் கும் கேடுதரும் விளைவுகள் ஏற்படும். பூமி வெண் ணெய்போல் உருகும். கடல் கொந்தளித்துப் பொங்கி ஆவியாகும். எல்லா உயிரினங்களும் அழிந்துவிடும். ஆனால் இப்படிப்பட்ட கொடிய விளைவுகள் நிகழ இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். று த.முருகையன்,