உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஆல்‌ஃபா நிறமாலை

204 ஆல்ஃபா நிறமாலை செல்கின்ற பாதைகள் எல்லாம் நீர்த் துளிகள் உண்டாகி ஒரு கோட்டுச் சுவட்டை உண்டாக்கு கின்றன. இத்துளிகளின்மீது செறிந்த ஒளியை விழச் செய்து ஒளிப்படக்கருவியின் (C) உதவி கொண்டு இச்சுவடுகளைப் படம் எடுக்கலாம். ரூதர்ஃபோர்டு சிதறல் வாய்பாடு அல்லது தலைகீழ் இருமடிச் சிதறல். ஆல்ஃபாத் துகள் சுற்றை ஒன்றை மெல்லிய t தடிப்புக்கொண்ட சிதறச் செய்யும் தகட் டின் மீது விழச் செய்து, அத்தகட்டின் ஓரலகு பரு மனில் இருப்பதாகக் கொள்ளப்படும் " அணுக்களின் மீது விழுகின்ற ஆல்ஃபாத் துகளின் எண்ணிக்கை X. என்று கொண்டால், அவற்றால் X ஆல்ஃபாத் துகள்கள் p கோணச் சிதறல் பெற்று [ தொலைவில் ஒளித்திரையில் (S) படுகின்றன. இயக்கக் கொள்கையின் அடிப்படையில் P என் னும் தொலைவுக்குள் வரக்கூடிய ஆல்ஃபாத்துகள் களின் எண்ணிக்கை ஈ x.91 ஆகும். எல்லாம் மோதலுக்குப் பின் இத்துகள்கள் முதல் p+dp வரையிலான கோணங்களுக்கு இடையே சிதறலுறும். எனவே, இக்கோணங்களுக்கு இடையே சிதறும் ஆல்ஃபாத் துகள்களின் எண்ணிக்கை 2£pXo tudp என்றும், இத்துகள் சிதறச் செய் பொருளிலிருந்து Y தொலைவிலுள்ள ஒளிர் திரையில் விழுவதாகக் கொண்டால், துகள் விழுகின்ற இடத்தின் பரப்பு = 2rr Sin p x d p ஆகியவற்றிலிருந்து 1 சதுர செ.மீ. பரப்பில் திரையின் மீது விழுகின்ற ஆல்ஃபாத் துகள் களின் எண்ணிக்கை X = x t n z³ 0 -Cosec* (¢/2) ஆகும். r² m² y ° இச்சமன்பாட்டிலிருந்து p அளவு கோணத்தில் சிதறலுற்றுத் திரையில் பட்டு ஒளிரும் ஆல்ஃபாத்து ¢ + d p படம் 8. தலைகீழ் இருமடிச் சிதறல் களின் எண்ணிக்கையை (x) எண்ணி அறியலாம். இதிலிருந்து இவ்வெண்ணிக்கை (x), தகட்டின் தடிப் பிற்கு (t) நேர்விகிதத்திலும் Cosec* (p/,) என்பதற்கு நேர்விகிதத்திலும் அணுக்கரு மின்னூட்டத்தின் (Ze') இருமடிக்கு நோவிகிதத்திலும் ஆல்ஃபாத் துகளின் தொடக்க இயக்க ஆற்றலின் (my'உ) இருமடிக்கு எதிர் விகிதத்திலும் உள்ளது என அறியலாம். ம. அருள் தளபதி நூலோதி Rajam J.B., Atomic Physics, S.Chand & Co, New Delhi, 1964. ஆல்ஃபா நிறமாலை கதிரியக்கமுள்ள அணுக்கரு உமிழும் ஆல்ஃபாத் துகள்களின் வெவ்வேறு ஆற்றல் தொகுப்பினை ஆல்ஃபா நிறமாலை என்றும் ஆல்ஃபாக்கதிர் மாலை என்றும் கூறுவர். இதைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள, இத்துகள்கள் உமிழப்படும் நிகழ்ச்சியாகிய இயற்கைக் கதிரியக்கம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். 1896 ஆம் ஆண்டு பெக்கரல் (Becqueral) என்ற பிரெஞ்சு அறிவியலறிஞர் X கதிர் களின் தன்மைகளைப் பற்றி அறிய நிகழ்த்திய ஆய் வின்போது து ஒரு ஒளிப்படத்தட்டின் கீழ் வைக்கப் பட்ட யுரேனியம் தாதுவால் அத்தட்டில் மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டார். வேறுபல ஆய்வுகளுக் குப்பின் யுரேனியம் தாதுவில் இருந்து உமிழப்படும் கதிரியக்கத்தால் ஒளிப்படத்தட்டில் மாறுதல் நிகழ்வ தாகக் கண்டறிந்தார். இவருக்குப்பின், மேரி கியூரி அம்மையாரும் அவது கணவர் பியரி கியூரியும் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளால் யுரேனியம், பொலோனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் ஆற்றல் மிக்க கதிர்களை உமிழ்வதைக் கண்டு அதற்குக் கதிரியக்கம் எனப் பெயரிட்டனர். கதிரியக்கததால் வெளிவரும் கதிர் கள் மூன்று வகைப்பட்டவை என்பதை எர்னஸ்ட் ரூதர்போர்டு என்பார் கண்டறிந்தார். ஈயப் பாளம் ஒன்றில், நுண்ணிய ஆழமான ஒரு துளை யிட்டு அதில் யுரேனியம் தாதுவை (அல்லது கதிரி யக்கமுள்ள தனிமத்தின் தாதுவை) வைத்தால் அதி லிருந்து கதிர்கள் மேற்புறமாக வெளிவரும். இக் கதிர்களைக் காற்று உட்கவர்ந்துவிடுமாதலால் அந்த ஈயப் பாளத்தை வேறொரு கலத்தில் வைத்து அக்கலத்தில் உள்ள காற்றை அகற்றி வெற்றிட மாக்க வேண்டும். பின்னர் கதிரியக்கக் கதிர்கள் செல்லும் திசைக்குச் செங்குத்தாகவும், தாளின் மேற் புறமிருந்து உட்புறமாகவும் செயற்படும் ஒரு காந்தப் புலம் அமைக்கப்படின், அக்கதிர்கள் படத்தில் காட் டியபடிப் பிரிவுப்படும்.