உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஆலிவ்‌ மரம்‌

218 ஆலிவ் மரம் களான ஹைட்ரோக்காய்டுகள் (hydrocoids) இந்தக் காலத்தில் தோன்றி வளர்ந்தன. தனித்து நின்ற மட காஸ்க்கர் நிலப்பரப்பில் லெமூர்கள் (lemurs), பாலூட்டிகளின் முன்னோடியான பூச்சியுண்ணிகள் (insectivores) ஆகியவை வாழ்ந்தன. புத்துலக, பழைய உலகக் குரங்குகள் இந்தக் காலக்கட்டத்தில் தான் தோன்ற ஆரம்பித்தன. ஊனுண்ணிப் பாலூட்டி களின் (carnivores ) முதாதைகள் அற்றுப்போதலும், இன்றைய ஊனுண்ணிகளின் படிமலர்ச்சித் தொடக்க மும் நிகழ்ந்தன. நிலத்தில் வாழும், வாழ்ந்த பாலூட் டி டிகளில் மிகப் பெரியவையான பலூச்சிதீரியன்கள் (baluchitherians) என்னும் நிலப்பாலூட்டிகள் இந்தக் காலக்கட்டத்தில் தான் வாழ்ந்தன. யானைகளின் முன்னோடியான மாமதங்கள் (mammoths) இந்த காலக்கட்டத்தில் முதன்முதலாகக் காணப்பட்டன. ஆலிவ் மரம் ந.மு. கௌ.ஜெ. ஆலிவ் மரத்திற்குத் தாவரவியலில் ஒலியா யூரோப் பியா ( Olea europaea Linn.) என்று பெயர். இது அல்லி இணைந்த (Gamopetalous) இருவிதையிலைத் தாவரக் குடும்பமாகிய ஒலியேசியைச் (Oleaceae) சார்ந்தது. ஓலியா (Olea) பேரினத்தில் உலகில் மொத்தம் 35 முதல் 40 சிற்றினங்களும் இந்தியாவில் 6 சிற்றினங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் ஆலிவ்கள் (Olives) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவை வெப்ப, மித வெப்ப அல்லது ஐரோப்பாவின் வெப்பத் தெற்குப் பகுதி களையும், குறிப்பாக மத்தியதரைக்கடல் பகுதிகளை யும், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆஸ்த்தி ரேலியா, நியூ கலிடோனியா (New Caledonia) நியூசி லாந்து ஆகிய நாடுகளையும் தாயகமாகக் கொண் டிருக்கின்றன. உண்மையான ஆலிவ் என்பது பயி ரிடப்படுகின்ற ஓலியா யூரொப்பியாவைக் குறிக்கும். சிறப்புப் பண்புகள். இது 8 முதல் 10 மீ. உயரம் வரை வளரக் கூடிய சிறிய மரம் ஆகும். இலைகள் தனித்தவை; எதிரமைவிலமைந்தவை (opposite phyllotaxy); இலையடிச் சிதல்களற்றவை. பூக்கள் வெண்மையானவை; பெரும்பாலும் இருபாலானவை; ஆரச்சமச்சீரானவை. இவை இலைக்கோணங்களில் கிளைக்கூட்டு (panicle) அல்லது அல்லது குறுங்கொத்து (fascicle) மஞ்சரி வகையிலமைந்தவை. புல்லி, அல்லி வட்டம் ஒவ்வொன்றும் நான்கு பிளவுகளைக் கொண்டவை; சில சமயங்களில் அல்லி வட்டம் உண் டாவதில்லை; அல்லி இதழ்கள் தொடு இதழ் அமைவு முறையில் (valvate aestivation) அமைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் இரண்டு. கனிகள் ஏறக்குறைய நீள்சதுர அல்லது முட்டை வடிவான கற்கனி (drupe) வகையைச் சார்ந்தவை, கசப்புத் தன்மையுடையவை; பளபளப்புடன் கூடியவை; நன்கு முதிர்ந்த பிறகு இவை 2 முதல் 3 செ.மீ.நீளத்தையும், கருநீலம் அல் லது கருமை நிறத்தையும் அடைகின்றன; ஒரு விதை கொண்டவை; இது தொன்று தொட்டு மத்திய தரைக் கடல நாடுகளில் பயிராக்கப்பட்டு வருகின் றது. வெண்மை கலந்த பசுந்தழைகளாலும், நெளிவு களையுடைய (gnarled) அடிமரப் பாகங்களாலும் இதற்கெனவே குறிப்பிடத்தக்க தோற்றமும், மத்திய தரைக்கடல் தாவரங்களுக்கே உரிய பண்புகளும் உள்ளன. ஆலிவ் மரங்கள் 1500 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகவும் வாழக்கூடியவை. அடிமரப் பாகங்களிலிருந்து பக்கக்கன்றுகள் தோன்றி மேன் மேலும் வளரக் கூடியவை. பயிரிடும் முறை. ஆலிவில் நூற்றுக்கணக்கான பயிரீட்டு வகைகள் (cultivars) இருக்கின்றன. இவை ஒட்டுதல், மொட்டு ஒட்டுதல் பதியன்கள் மூலம் பரப்பப்பட்டுப் பயிராக்கப்படுகின்றன. பெரும்பாலும் அடிமரத்தின் தண்டில் ஒட்டுதல் செய்யப்படுகின்றது. மரத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக ஏற்படுகின்றது. ஆதலால் மரம் முதிர்ச்சியடைந்து, பலன் தருவதற்குப் பல ஆண்டு கள் ஆகின்றன. வெவ்வேறு மத்தியதரைக் கடல் நாடுகளில் வெவ்வேறு பயிரிடும் முறைகள் கையா ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஸ்பெயின் நாட் டில் மரத்தின் நுனியைப் பிளந்தோ வெவ்வேறாக நடுதல் செய்தோ மூன்று தண்டுகளாக ஒன்றன் பக் கத்திலொன்றாகவோ வளரவிடுகின்றார்கள். ஆனால் கிரீஸ் போன்ற நாடுகளில் நேராகவும், உயரமாக வும், ஒரே ஒரு தண்டு உடையதாகவும் வளரும்படி யாகச் செய்கின்றார்கள். ஆலிவ் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பலன் நிலையானதும் உறுதியானது மல்ல. ஏனெனில் ஓர் ஆண்டில் நல்ல பலன் கிடைக்கு மேயானால், அடுத்த ஆண்டில் பலன் மிகவும் குறைந்துவிடும். மேலும் காற்றினாலும், மழையினா லும் ஆலிவ் மரத்தின் காய்ப்பு பாதிக்கப்படுகின்றது. உறைபனி பூக்களைக் கெடுக்கின்றது. பொருளாதாரச் சிறப்பு. மத்தியதரைக்கடல் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆலிவ் மிகச் சிறப்பு வாய்ந்தது. இதன் முற்றிய கனிகளிலிருந்து உண்ணக்கூடிய ஆலிவ் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிப்பதற்கும். சமைப்பதற்கும், மதச்சடங்கு களின் பொழுது உடம்பில் தடவிக் கொள்வதற்கும் பயன்படுகின்றது. ஆலிவ் மரத்தைப் பற்றிய குறிப் புக்கள், கிரேக்க, உரோமானிய நூல்களில் ஏராள மாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆலிவ் கிளை சமாதானத்தின் அறிகுறியாகவும் கருதப்பட்டு வருகின்றது. மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், இளக்குமருந்தாகவும் (Emollient) பயன்படுவதோடு