உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஆலிவின்‌ தொகுதி

220 ஆலிவின் தொகுதி வேறு எங்கும் தனிப்பட்ட முழுப் படிகங்களாக ஆலிவின் காணப்படுவதில்லை. காண்க, ஆலிவின் தொகுதி. ஃபார்ஸ்டெரைட்டின் வேதியியல் உட்கூறு MgSiO4; அடர்த்தி எண் 3.22; கடினத் தன்மை 7. இது உருமாறிய சுண்ணப்பாறைகளிலும் கார, மற் றும் மிகுகார அனற் பாறைகளிலும் காணப்படு கிறது. ஃபேயலைட்டின் வேதியில் உட்கூறு Fe,SiO4; அடர்த்தி எண். 4.39; கடினத் தன்மை 6.5. இயற் கையில் இதைக் காணல் அரிது. இயல்பு ஆலிவின் 90% ஃபார்ஸ்டரைட்டையும், 10% ஃபேயலைட் டையும் கொண்டுள்ளது. வேதியியல் உட்கூறு (MgFe),Sio4. அடர்த்தி எண் 3.27 முதல் 3.6 வரை மாறுபடும். கடினத்தன்மை 6.5 முதல் 7 வரையிலும் மாறுபடும். இக்கனிமம் செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியில் படிசுமாகின்றது. இக்கனிமம் பளிங்கு மிளிர்வையும், சங்கு முறிவையும் கொண்டது. இதன் உராய்வுத் துகள் நிறமற்றும், அரிதாக மஞ்சள் நிறம் கொண்டும் காணப்படுகிறது. நொறுங்கும் தன்மை உடையது. ஒளியியல் பண்பு. கனிமச் சீவலில் இது நிறமற்ற தாகவும், எல்லைவரை மிகுதியாகவும் இருக்கும். ஒளி யியலாக இது நேர்மறைக் கனிமமாக இருப்பினும் இரும்பு மிகும்போது எதிர்மறைக் கனிமயாக மாறும். இதன் ஒளியியல் அச்சுத்தளம் அடிஇணை வடிவப் பக்கத்திற்கு (001) இணையாகவும், மெதுஒளி அதிர்வு அச்சுக்குச் (z) (100) செங்குத்தாகவும் இருக்கும். ஒளி யியல் அச்சுக்கோணம் (2v) 80 முதல் 90 வரை மாறு படும். ஒளியியல் அச்சுக்கோணம் இரும்பு அதிகமா கும்போது கூடும். இரும்பு கூடும்போது ஒளிவிலகல் எண்ணும் அதிகமாகும். இதன் ஒளி விலகல் எண் விரைவு ஒளி அதிர்வு அச்சில் 1.635 முதல் 1.655 வரையிலும், இடையொளி அதிர்வு அச்சில் 1.650 முதல் 1.670 வரையிலும், மெது ஒளி அதிர்வு அச்சில் 1.670 முதல் 1.690 வரையிலும் அமையும். இதன் ஒளி விலகல் எண் இடைவெளி 0.035 ஆகும். இதன் படிக அச்சுகளின் விகிதம் 0.46575:1:0.5865 ஆகும். கருநிறம் கொண்ட காப்ரோ, பசால்ட்டு, பெரி டோடைட்டு போன்ற காரப் பாறைகளில் ஆலிவின் பெரிதும் தழைத்துள்ளது. நிலக்கோள மேலோட்டுக் குத்து (35 கி.மீ தடிப்பான மேல் படலம்) கீழே யுள்ள புறணியின் (mantle) மேற்பகுதியிலுள்ள களிமங்களில் மிக முக்கியமானவை ஆலிவின் கனி மங்களே. இலை கார மற்றும் மிகு கார அனற் பாறைகளுக்குத் தகைசால்பானவை. இப்பாறைகள் உலகின் உட்புறத்தே உள்ள தாய்ப் பாறைக்குழம் பிலிருந்து (parent rock magma) படிகமாகின்றன. இவற்றில் சிலிக்கா குறைவாகவும் இரும்பும், மக்னீசியமும் மிகுதியாகவும் உள்ளன. இவை சில து. உருமாற்றப் பாறைகளிலும் (metamorphic rocks) விண்கற்களிலும் (meteorite) காணப்படுகின்றன. மக்னீசியம் மிகுந்துள்ள ஆளிவினின் தெளிவான தூய நிறமுடைய மணிக்கல் வகைகளில் (gems ) ஆழ்நிறம் உடையவைகளைப் பெரிடோட்டு (peridot) என்றும், வெளிர் நிறம் உடையவற்றைக் கிரை சோலைட்டு (chrysolite) என்றும் அழைப்பர். பெரிடோட்டு மணிக்கல் பர்மாவிலும், செங்கடலில் உள்ள செயின்ட் ஜான் தீவிலும் கிடைக்கிறது. ஆலிவினின் உருகுநிலை (melting point) மிக உயர்ந்ததாய் உள்ளதாலும் அது வேதிப் பொருள் களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை என் பதாலும் மக்னீசிய ஆவிலின் ஒரு முக்கிய பயன் தாங்கும் கல்லாகும் (refractory brick ). இது ஃபார்ஸ் டரைட்டுக் கற்கள் என்னும் பெயரில் உருக்கு உலைக்களங்களிலும் காளவாய்களிலும் உள்வேய்வுக் கற்களாகப் பயன்படுகின்றது. கனிம மாற்றுப்பொருள் மிகுகாரப் பாறைகளில் ஆலிவின் செர்ப்பென்டினாக மாற்றப்படுகிறது. இத்துடன் மேக்னசைட்டும் (magnesite) உடன்படி வாகக் காணப்படுகிறது. ஆலிவினை மட்டும் கொண்டுள்ள பாறைக்கு டூனைட்டு (dunite) என்று பெயர். சேலத்திலுள்ள வெள்ளைக்கல் அல்லது சுண்ணாம்புக்கல் நிலப்பகுதி இத்தகைய ஆழ்நிலை உள்நுழைவுப் பாறைகளால் ஆனது. இங்கு உலகப் புகழ்பெற்ற மேக்னசைட்டுக் கனிமத் திறந்தவெளிச் சுரங்கங்கள் உள்ளன.) நூலோதி ம. ச. ஆனந்த் 1. Ford, W.E., Dana's Text Book of Minealrogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell, H., Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Limi- ted, New Delhi, 1968. 3. Milovsky, A.V., Konohov, O. V., Mineralogy, Mir Publishers, Moscow, 1985. ஆலிவின் தொகுதி மக்னீசியம், கால்சியம். இரும்பு, மாங்கனீசு ஆகிய தனிமங்களை உள்ளடக்கியது. இது செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியில் (orthorhmbic) படிகமா கிறது. ஆனால் செஞ்சாய் சதுரப் படிக வகையி லிருந்து இதன் அச்சு விகிதம் (axial ratio) சிறிது மாறுபட்டுள்ளது. இந்த வகையினத்தைக் கிரை சோலைட்டு அல்லது ஆலிவின் எனக் கூறுவர்