உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி செறிகலன்‌ 242

ஆவி செறிகலன் 20- பொருள் குழாய்களின் மீது வீழச் செய்யலாம். அப் போது அந்தக் குழாய்களில் உள்ள செறிபொருள் குளிர்கிறது. குழாய்களில் உள்ள செறிபொருளை மேலும் வேகமாகக் குளிரச் செய்ய வேண்டுமெனில் வெள்ளம்போன்ற விசையுடன் செறிபொருள் வீழு மாறு ஊ செறிபொருள் குழாய்களின் மேல் அதை ஊற்ற வேண்டும். இத்தகைய முறை பீச்சுக் குழல் தட்டுகள் மூலம் செய்யலாம். செறிபொருள் வடி குழாய்களைக் கண்ணி (loop) போல் இணைத்தும் இச்செயல்முறையின் விளைவை ஏற்படுத்தலாம். கிடைநிலையில் அமைத்த தொழிலகச் செயல்முறைச் செறிகலன்களில் பீச்சுக் குழல் தட்டுகள் பெரும் பயன் விளைவிப்பனவாய் அமைகின்றன. குத்து நிலையில் அமைந்த தொழிலகச் செயல்முறைச் செறி கலன்களில் கண்ணிகள் அமைத்து இவ் விளைவை உருவாக்குவது பயனுடையதாய் அமைகிறது. செறிபொருள் மீள் சூடாக்கம். தற்கால நீராவி வகைப் பரப்புச் செறிகலன்களில் செறிபொருளை மீண்டும் சூடாக்கும் அமைப்புகள் (condensate heating systems) பொருத்தப்பட்டுள்ளன. இவை பெரிதும் நீராவித் திறன் நிலையங்களில் உள்ள சுழலி களில் பயன்படுகின்றன (படம் 4). ஒரு குழலிலிருந்து அடுத்த குழலுக்கு விழும் செறிபொருள் தொடர்ச்சி வெப்ப யாகக் குளிர்ந்து செறிகலன் இயங்கும் நிலையைவிடக் குறைந்த வெப்பநிலைக்குக் குளிரும். இதை மீண்டும் சூடாக்க முடியாவிட்டால் சுழற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். எனவே, திறன் சுழற்சியின் திறமை குறையும். மிகவும் குளிர்ந்த செறி பொருள் காற்றை உறிஞ்சிக் கொதிகலன் ஊட்டு நீராகப் பயன்படும்போது ஊட்ட அமைப்பிலும், கொதிகலனிலும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே, மீள் சூடாக்கிய செறிபொருளைத் திறன் சுழற்சியில் பயன்படுத்தவேண்டும், குளிர்ந்த செறிபொருளைச் செறிகலனில் உள்ள வெந்நீர்க் கிணற்றின் வழியாகப் பாயச் செய்து சூடாக்கலாம் (படம் 5). அப்போது செறிபொருளின் விரைவு ஆற்றல் அழுத்த ஆற்றலாக மாறும். செறி பொருள் குளிர்கலனில் நுழையும் நீராவியின் ஒரு பகுதியால் மீண்டும் சூடாக்கப்படுகிறது. எனவே, அவ்விடத்தில் உள்ள நிலையாற்றல் அழுத்தமும் வெப்பநிலையும் செறிகலன் நீராவி நுழை வழியில் உள்ள நிலையாற்றல் அழுத்தத்துக்கும் வெப்பநிலைக் கும் சமமாகின்றன. குழல் தொகுதியில் இருந்து விழும் செறிபொருள் முதலில் வெந்நீர்க் கிணற்றால் சூடாக்கப்படுகிறது. இது வெந்நீர்க் கிணற்றருகே அது விழும் உயரத்தைப் பொறுத்தும் ஒற்றைப் பரப்பில நிகழும் பாய்வு விகிதத்தைப் பொறுத்தும் அமையும். குத்துநிலை உயரம் குறைவாக இருந்தால் தொகு மூடிய சூடாக்கமும் அத்துடன் நிகழ்த்தப் படும் காற்று நீக்கமும், திரள் குழல் தட்டின்மேல் விழச்செய்வதன் மூலமும் அதற்கடியில் அமைந்த 13 1Z 10 7. 11 3 படம் 5. படம் 4 இல் உள்ள செறிகலனின் ஒரு பகுதியின் விவரங்கள் 1. மடிந்த குழல் தொகுதி 2. நீராவி இருந்து 3. பக்கவாட்ட நீராலிச் சந்து ( side நுழை வழியில் stream lane) 4. காற்றுவெளியேற்றச் சந்து 5. வடிகுழாய் 6. தாங்கு தட்டு குறுக்குவெட்டு முகம் (இது நெடுக்கு வாட்டப் பாய்வைக் காட்டு கிறது) 7. செறிபொருள் ஏற்றும் உறிஞ்சல் 8. (strainer) 9. செறிபொருள் தேக்கம் 10. செறிபொருள் திரள் தொட்டி 11.குழல் தாங்கு தட்டு 12. வடிகால்கள் செறிபொருள் திரும் பச் செய்யும் அமைப்புகளும் நிரவும் இணைப்புகளும் 13 காற்று வெளியேற்று வழி