ஆவியழுத்தம் 241
ஆவி அழுத்தம் நீர்மம் தெவிட்டிய ஆளி நீர்மம் பருமன் தெவிட்டா ஆவி தெவிட்டிய ஆவி அழுத்தம் வெப்பநிலை ஆவியழுத்தம் 241 மாறாமலிருக்கும். தெவிட்டிய ஆவியழுத்தம் வெப்ப நிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கும். கொதிநிலை அடையும்போது தெவிட்டிய ஆவியின் அழுத்தம் அந்த நீர்மத்தின் மேலுள்ள புற அழுத்தத்திற்குச் சம மாகும். கடல் மட்டத்தில் தண்ணீர் திறந்த பாத்தி ரத்தில் கொதிக்கும்போது அதன் வெப்பநிலை 100°C ஆகவும் அதன் தெவிட்டிய ஆவியழுத்தம் காற்றின் அழுத்தத்திற்குச் சமமாகவும் இருக்கும் (75 சென்டி மீட்டர் பாதரசம்). தெவிட்டா ஆவி வளிமங்களின் விதிகளான பாயில்விதி (Boyle's Law), சார்லஸ் விதி (Charles Law) முதலியவற்றிற்குட்படும். வெப்பநிலை உயர்ந்தால் ஆவியழுத்தம் உயரும். ஒரே வெப்ப நிலையில் அழுத்தம் அதிகரித்தால் பருமன் (volume) குறையும். தெவிட்டிய ஆவி இந்த விதிகளுக்கு உட்படாது. தெவிட்டிய ஆவி நீர்மத்தோடு சமநிலையில் இருக்கும். அதாவது எந்த அளவு நீர்மம் ஆவியாக மாறுகிறதோ அதே அளவு ஆவி குளிர்ந்து நீர்மமா கும். இவ்விரண்டும் தொடர்ந்து நடந்து கொண்டே யிருப்பதால் தெவிட்டிய ஆவியின் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒன்றாகவே இருக்கும். வெப்பநிலை அதிகரிததால் தெவிட்டிய ஆவியழுத் தம் அதிகரித்துக் கொண்டே போய்க் கொதிநிலையை வேகமாய் அடையுமுன் மிக அதிகரிக்கும். நீர் மத்தோடு சேர்ந்து இருக்கும் ஆவி ஈரமான ஆவி (wet steam) என்றும், நீரின் மேலிருக்கும் நீராவி ஈரமான நீராவி என்றும் கூறப்படும். அந்த ஆவியை மேலும் சூடேற்றிக் கொதிநிலையைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றால் அது வெப்ப அ.க. 3-16 படம் 2 உலர்ந்த ஆவி ஆகும். இம்மாதிரி சூடேற்றிய நீரா வியைத் தான் நீராவி எந்திரத்தில் பயன்படுத்து கிறார்கள். ஒவ்வொரு நீர்மமும் அதன் மாறுநிலை வெப்ப நிலையை (critical temperature) விடக் குறைந்த வெப்பநிலையில் உள்ளபோது ஆவி எனப்படும். அப் போது அழுத்தத்தை அதிகரிப்பதால் மட்டுமே அதை நீர்ம நிலைக்கு மாற்றலாம். மாறுநிலை வெப்ப நிலைக்கு மேலுள்ள ஆவி வளிமம் எனப்படும். வளிம நிலையிலுள்ள ஆவியை அழுத்தத்தினால் மட்டும் நீர்மமாக்க முடியாது. முன்னால் குளிர்வித்த பின்னர் அழுத்தத்தை அதிகரித்து நீர்மமாக்க வேண்டும். ஆவி அழுத்தம் சமதளப் பரப்பின் மீது அதிக து மாகவும், குவிந்த பரப்பின்மீது குறைவாகவும் இருக் கும். எனவே, ஆவியழுத்தம் பரப்பு இழுவிசையைப் (surface tension) பொறுத்து மாறும். மேலும் ஓர் உப்பை நீர்மத்தில் கரைத்தால் அக்கரைசலின் மேலுள்ள ஆவியின் அழுத்த நீர்மத்தின் மேலுள்ள ஆவியின் அழுத்தத்தைவிடக் குறைந்திருக்கும். இதனால் கரைசலின் கொதிநிலை நீர்மத்தின் கொதி நிலையைவிட அதிகமாகும். நூலோதி ருக்மணி தாமரை நங்கை, இரா., வெப்பவியல், தமிழ்நாட் டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1972. 2. Mathur, D.S., Heat and Thermodynamics Sultan & Sons, New Delhi, 1983.