ஆவி விளக்குகள் 251
ஆவி விளக்குகள் 251 தத்தில் (low pressure) அடைக்கப்பட்ட நிலையில், அந்த ஆவியினூடே சூடான எதிர்மின்முனைகளைக் (hot catode) கொண்டு மின்போக்கை (electric dis- charge) ஏற்படுத்த, அதனால் ஒளிரும் விளக்கு, ஆவி விளக்கு (vapour lamp) எனப்படும். இதற்கு, வளிம மின்னிறக்க விளக்கு (gasseous discharge lamp) என்ற பெயரும் உண்டு. ஆவி விளக்குகளில் முக்கியமானவை, சோடியம் ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு, வெண்சுடர் விளக்கு, நியான் சுடர் விளக்கு (neon glow lamp) என்பவை ஆகும். ஆவி விளக்குகள் எதிர்மைத் தடைச் சிறப்பியல்பு (negative resistance characteristics) உடையவை. எனவே, மின்னோட்டம் கூடும்போது இவ்விளக்கு களின் தடை குறைகிறது. இதனால் இவற்றில் எப்போ தும் ஒரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவி யமைப்பு இருக்கும்.இல்லாவிட்டால் இத்தகைய விளக் குகள் மின்னோட்டம் கூடும்போது வரம்பற்ற உயர் மின்னோட்டத்தால் எரிந்து குலைவுறும். இந்த மின் னோட்டம் கட்டுப்படுத்தும் உறுப்பு, விளக்கிற்கு வெளியில் அமையும். நேர்மின், மாறுமின் அமைப்பு களில் தடைவகை அமைப்பு பயன்படுகிறது. அதனால் இவற்றில் நிறைய ஆற்றல் வீணாகும். எனவே, ஆவி விளக்குகளில் தூண்டம் அல்லது கொண்மி அமைப்பு கள் தடையினும் மேம்பட்டன; திறமை மிக்கன. இதற்கு வெறும் மின்னடைகள் (chokes) மட்டுமோ மின்மாற்றியுடன் அமைந்த கொண்மி அணியோ பயன்படுகிறது. முன்னது போதுமான மின்னழுத்தம் உள்ள போதும், பின்னது மின்னழுத்தம் அதிகமாக வேண்டிய போதும் பயன்படும். காண்க, ஒளிர்வூட் டல் (illumination). சோடியம் ஆவி விளக்கு (sodium vapour lamp) இது சுடு எதிர்மின்முனைக்கும், நேர்மின்முனைக்கும் இடையில் நிகழும் மின்போக்கினை (electrical discha- rge) அடிப்படையாகக் கொண்ட விளக்காகும் (படம் 1). நேர்மின் கம்பம் என்பது ஆவியின் அழுத்தம் 10 மி.மீ பாதரசம் அல்லது அதற்குக் கீழுள்ளபடிக் குறைக்கப்படும்பொழுது நேர்மின்முனையிலிருந்து (anode) புறப்படும் ஒளிச்சால்வரிகளைக் (stria- tions) குறிப்பிடுகின்றது. மின்போக்கு நிகழும் ஆவி யின் தன்மையைப் பொறுத்து இக்கம்பம் வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும். படம் 1இல் குறிப்பிட்டுள்ளபடி இவ்விளக்கில் ஒரு ப வடிவ மின்போக்குக் குழாயின் இருமுனை களிலும் இரண்டு மின்முனைகள் (electrodes) பொருத்தப்பட்டிருக்கும். குழாயின் உட்சுவரில் சோடியத் துணுக்குகள் ஒட்டப்பட்டிருக்கும். 10 மி.மீ பாதரச அழுத்தத்தில் மிகக் குறைந்த அளவு நியான் வளிமமும் உள்ளே இருக்கும். இந்த வளிமம் மின் போக்கினைத் தொடங்கி மிகைநிரப்பியாகச்(booster) ♡ -5 m DECODON படம் 1. சோடிய ஆவி விளக்கு 1. மின்னோட்டம் 2, மின்கொண்மி 3. மீன்மாற்றி 4. மின் முனைகள் 5. சோடியத் துணுக்குகள் 6. நியான் ஆவி 7. இரு சுவர் வெற்றிடக் கண்ணாடிக் குழல் 8. ப-வடிவ மின்போக்குக் குழல். செயலாற்றுகிறது. இவ்விளக்கு சுமார் 300°C இல் நல்ல ஒளித்திறனைக் (luminosity) கொடுக்கிறது. 300°C க்குக் குறைவாக வெப்பநிலை செல்லுமா னால் விளக்கின் ஒளித்திறன் குறையும். ஆகவே வெப்பத்தைச் சமச்சீரான நிலையில் வைத்துக் கொள்வதற்காக மின்போக்குக் குழாயைச் சுற்றி லும் ஓர் இருசுவர் வெற்றிடக் (vacuum) கண் ணாடிக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மின்போக் கினைத் தொடங்குவதற்கு ஏறத்தாழ 400 வோல்ட் மின்னழுத்தம் தேவைப்படுகிறது. இதைக் கசிவு மின்மாற்றி (leak transformer) அளிக்கிறது. (neon) மின்போக்கு, தொடக்கத்தில் நியான் வளிமத்தின் வழியாக ஏற்படுவதால், அவ்வளிமத்தின் இயல்புக்கேற்ப விளக்கின் ஒளி சிவப்பாகவே இருக் கும். இம்மின்போக்கில் தோன்றும் வெப்பம் சோடி யம் உலோகத்தை ஆவியாக்கும், அதன் பின்னர் மின் போக்கு, சோடியம் ஆவி வழியாக நிகழ்ந்து நல்ல மஞ்சள் நிற ஒளியை அளிக்கிறது. இந்த நிலையில் விளக்கிற்கு 230 வோல்ட் மின்னழுத்தம் போதும். பயன்கள். சோடியம் ஆவி விளக்கு ஆய்வகங் களில் ஒருநிற ஒளிமூலமாகவும் (monochromatic source), கடைகளிலும் பொதுச் சதுக்கங்களிலும் காட்சி அடுக்குகளை ஒளியூட்டுவதற்காகவும், தெரு விளக்காகவும் பயன்படுகிறது.இது குறைந்த செலவில் நிறைந்த ஒளியைத் தரும் சிறந்த விளக்காகும்.