உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்கடல்‌ வெப்பநிலைப்‌ பதிவான்‌ 271

கட இந்த ஆழ்கடல் விலங்குகள், சென்ற நூற்றாண்டில் அறிவியலார் மேற்கொண்ட சேலஞ்சர் என்ற வாய்வுப் பயணத்தின்போது, ஆழ்கடல் தூர்வாரி (dredge) போன்ற கருவிகளின் உதவியுடன், பெருமள வில் பெறப்பட்டு ஆராயப்பட்டன. அன்று தொடங் கிய ஆய்வுப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை. 1960 இல் டிரியஸ்ட் என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி ஆய் வுக்கூடத்தின் உதவியுடன் உலகிலேயே ஆழமான கடற்பகுதியான மரியானா அகழி என்ற இடத்தில் இறங்கி ஆய்வாளர்கள் அங்கு வாழும் விலங்குகளைக் கண்டறிந்தனர்; ஒளிப்படமும் பிடித்தனர். நூலோதி அ.பசுபதி ப. நடராஜன் 1. Hill, M.N. (ed) The Sea, Vols. I, II, Inter Science Publishers Wiley, New York, 1963. 2. Idyll, C.P., Abyss, the deep sea and the creatu- res that live in it, Thomas Y. Growell Com- pany, New York, 1971. 3.Marshall, N.B., Aspects of Deep Sea Biology Hutchinson, 1954. ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவான் ஆழ்கடலில் வெப்பநிலைகளைப் பதிவு செய்யும் கருவி ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவான் (bathyther- mography) ஆகும். இக்கருவி ஆழ்கடலின் வெப்ப நிலை மாறுதல்களையும் அவைகளுடன் தொடர்பு டைய அழுத்த மாறுதல்களையும் சுமார் 100,200 மீட்டர் ஆழம் வரையிலும் அதற்கு மேலும் பதிவு செய்யப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. கட vessel) (oceonography research லாய்வுக் கலம் நகர்ந்து கொண்டிருக்கும்போதே இப்பதிவானைக் கடலினுள் இறக்கி நீரின் வெப்பநிலை மாறுதல் களைக் கணிக்க இயலும். கடற்பயணத்தின் பொழுதே ஆழ்கடல் வெப்ப அழுத்த நிலை மாறு தல்களைக் குறிப்பிட்ட ஆழத்தில் மட்டுமின்றித் தொடர்ச்சியாகவும் பதிந்து கொள்ளப்பயன்படுவது இதன் சிறப்புத்தன்மையாகும். விரிவு ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவானில் கீற்றுடன் (stylus) கூடிய வெப்பநிலை நுகரும் பொருள் இருக் கிறது. வெப்பமானி பாய்மமாகப்(thermometer fluid ) பாதரசத்திற்குப் பதிலாக விரைந்து விரிவடையும் சைலீன் (xylene) பயன்படுத்தப்படுகிறது. நீளமான மெல்லிய செம்புக் குழாயிலுள்ள சைலீன் டைந்து கீற்றை நகர்த்துகிறது. இக்கீற்று வெப்ப நிலைக்கு ஏற்ப நகர்ந்து புகைபடிந்த தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடித் தகட்டில் பதிவை ஏற்படுத்து கிறது. ஆழ்கடல் வெப்ப நிலைப் பதிவான் கடலில் அழுந்திய நிலையில் அழுத்தம் அதிகரித்து, கண்ணா ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவான் 271 டித் தகட்டை ஒரு பக்கமாய் நகர்த்துகிறது. இந் நிலையில் வெப்பநிலைப் பகுதித் தகடு மறுதிசையில் நகர்ந்து அழுத்தமும், வெப்பநிலையும் ஒரே சமயத் தில் பதிவாகின்றன. இவ்வாறு அழுத்த வெப்ப நிலை வரைபடம் பெறப்படுகிறது. கடல் வெப்ப நிலை ஆழப் பதிவுகளை விளக்கித் தெளிவு பெறப் பதிவான் கண்ணாடிப் பட்டைகள் இதற்குரிய படிப் பானில் (reader) வைக்கப்படுகிறது. சாதாரண வெப்பமானியைப் பயன்படுத்திப் பெற்ற கடல் மேற்பரப்பு வெப்பநிலையுடன் ஆழ் கடல் வெப்பநிலைப்பதிலை ஒப்பிட்டுக் கணிப்புச் செய்யப்படுகிறது. ஓராண்டில் வெவ்வேறு காலநிலை களிலும் ஆய்வுக் கலங்களிலிருந்தும் கடலின் மேற் பகுதிக்கும் ஆழ்கடலுக்குமுள்ள வெப்பநிலை மாறு தல்கள் பெறப்பட்டுப் பல பதிவுகள் தயாரிக்கப்படு கின்றன. இம்மாறுதல்களைத் தொடர்பதிவாகவும் வரைபடத்தில் குறிக்கலாம். இந்த வரைபடம் ஒவ் வொரு மாதம் ஏற்படும் வெப்பநிலை மாறுதல்களை யும், வெப்பநிலையின் ஏற்றத்தாழ்விற்கான காரணங் களையும் சீரான நிலைப்பாதிப்பையும் இப்பாதிப்பு எவ்வளவு ஆழம் வரையுள்ளது என்பதையும் அறிய பயன்படுத்தப்படுகிறது. இப்பாதிப்பு கடல் மேல் மட்டத்தில் நிலநீர் கலப்பாலும், வேறு பல நில நீர் மாறுதல்களாலும் ஏற்படலாம். கடல் காற்று நிலைகளைப் பொறுத்துச் சீரான வெப்ப நிலையுள்ள கலப்புப் படிவின் ஆழம் வேறுபடலாம். 20 இலிருந்து 70 மீட்டர் வரை வெப்பம் விரைவாகக் குறைந்து வெப்பநிலைச் சரிவுப் பகுதி (thermocline) தோன்று கிறது. 70 மீட்டர் ஆழத்துக்கு மேல் படிப்படியாக வெப்ப மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்தப் பதிவு கடல் மேல்மட்ட வெப்பநிலை அளவுகளை அறியத் துணை புரிந்தாலும் கடலுக்குள் உள்ள சேர்க்கப் பட்ட வெப்ப ஆற்றலை அறியப் பயன்படாது. ஏனெனில் இந்த வெப்பக் கணக்கை அறிய வெப்ப நிலை மாறுதல்களை அதன் ஆழத்திற்கு ஏற்ப அறிதல் அவசியமாகும். ஒரே அளவுள்ள வெப்பம், குறைவான நீர்ப் படிவில் அதிக வெப்ப மாறுதல் களையும், பெரிய நீர்ப் படிவில் சிறிய மாறுதல்களை யும் ஏற்படுத்துகிறது. விரைவில் விரிவடையும் தன்மையுள்ள ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவான்களைப் பயன்படுத்தி ஆய்வு வானவூர்திகள் ஆழ்கடலின் வெப்பநிலையைச் சுமார் 2000 மீட்டர் ஆழம் வரை அளக்க வாய்ப்புள்ளது. பல நாடுகளிலும் மாறுபட்ட சிறப்புத்தன்மையுடைய ஆழ்கடல் வெப்பநிலைப் பதிவான்கள் கடல் ஆய்வுக் கலங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நூலோதி எஸ்.பி.சுப்பிரமணியன் 1. Peter, K.W., Oceanography, An Introduction to the marine environment, John Wiley & Sons, 1970.