ஆழ்கூள முறையில் கோழிவளர்ப்பு 273
1 படம் 1. குஞ்சு வளர்ப்புச் சாதனம் அதன்மேல் செய்தித் தாள்களைப் பரப்பி வளர்ப்புச் சாதனத்தை மையத்தில் வைத்து மின் விளக்குகளை எரிய விட வேண்டும். குஞ்சு வளர்ப்புச் சாதனத்திற் குள் 95°F வெப்பம் இருக்க வேண்டும். இச்சாத னத்தைச் சுற்றி மூன்றடி தள்ளி வட்டமான 18 அங் அட்டைச் சுவர்களை குல உயரப் பாதுகாப்பு வைக்கவேண்டும். இந்தத் தடுப்புச் சுவர்களுக்கு இடையே மாறி மாறித் தீவனத் தொட்டிகளையும் தண்ணீர்த் தொட்டிகளையும் வைக்கவேண்டும். கோழிக் குஞ்சுகளை முதல் எட்டு வாரம் வரை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி நோய்கள் வராமல் இருப்பதற்காகத் தடுப்பு ஊசிகள் போடவேண்டும். முதல்நாள் மாராக்ஸ் நோய்த் தடுப்பும், 4 நாள் முதல் 7 நாள் வரை இராணிகெட் நோய்த் தடுப்பும், 2 ஆம் வாரமும் 6 ஆம் வாரமும் கோழி அம்மை நோய்த் தடுப்பும், 8 ஆவது வாரம் இராணிகெட், வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பும் செய்ய வேண்டும். இவற்றைத் தவிர மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். காக்சிடியோசிஸ் என்னும் இரத்தக் கழிச்சல் நோய் வராமல் தடுக்கச் சல்ஃபாமெசத்தின் என்ற மருந்தை நீரில் கலந்து குஞ்சுகளுக்கு அளிக்க வேண்டும். ஆழ்கூள முறை. கோழி வளர்ப்பு வீடுகளில் தரையில் எளிதில் கிடைக்கக கூடிய கூளத்தை இட்டு நொய், உமி, கடலைப் பொட்டு, மரத்தூள் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றை 1 அடி வரை ஆழமாகப் பரப்பி அவ்வாறு அமைத்த தளத்தின் மீது கோழி அ.க. 3-18 ஆழ்கூள முறையில் கோழிவளர்ப்பு 273 களை நடமாடவிடலாம். நாளடைவில் கோழி வீடு களின் தரைகளில் பரப்பப்பட்ட ஆழ்கூளம் கோழிகள் கழிவுப் பொருள்கள், பாக்ட்டீரியா ஆகியவை யாவும் வேதி மாற்றங்களால் மட்கி அம்மோனியா வாயு வெப்பத்தை வெளிப்படுத்தும். பாங்காக ஆழ்கூளத் தை வாரம் இருமுறையாவது நன்கு கிளறிவிட்டுப் பாதுகாத்து வந்தால் ஆழ்கூளம் கோழிகளின் எச் சத்தின் ஈரத்தை நன்கு உறிஞ்சி ஆழ்கூளத்தில் உண் டாகும் வெப்பத்தால் நன்றாக உலர்ந்து காய்ந்த பொடியாகியிருக்கும். நாளுக்கு நாள் கூளமும் கழி வுப் பொருள்களும் நன்கு மட்கிப் பதனிடப்பட்ட ஆழ் கூளமாகும். இம்முறையால் கோழிகள் உடல்நலத் துடன் இருப்பதுடன் கோழி வீட்டைத் தூய்மை செய் யும் அவசியமும் தவிர்க்கப்படுகிறது. தவிர ஆண்டு தோறும் சுமார் 100 கோழிகளால் 21 டன்கள் சிறந்த உரம் கிடைக்கிறது. ஆழ்கூளத்தில் தண்ணீர் சிந்தி நனையவிடக் கூடாது. நனைந்த கூளம் நோய் களை வளர்க்கும்; எனவே நனைந்த கூளத்தை உடன் அப்புறப்படுத்த வேண்டும். ஆழ்கூள முறையின் பயன்கள். இம்முறையில் கோழிகளைப் பேணும் செலவு குறைகிறது. சுமார் இரண்டாயிரம் கோழிகளின் தேவையை ஒரே கோழி வீட்டில் ஓர் ஆள், ஒரு பையன் ஆகிய இருவரைக் கொண்டு பராமரிக்கலாம். கோழி வீடுகளின் காற்றின் ஈரத் தன்மையை ஆழ்கூளம் மூலமாகக் கட்டுப்படுத்த முடியும். படம் 2. ஆழ்கூள முறை வெளிக்காற்றில் ஈரத்தன்மை அதிகம் இருந்தால் அதனைக் குறைக்க ஆழ்கூளம் உதவும். ஆழ்கூளத் தின் அடியில் வெப்பம் ஏற்படுவதால் தீமை பயக்கும்