உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்கூள முறையில்‌ வாத்து வளர்ப்பு 275

மாகக் கருதப்படுவதில்லை ஆகவே இவை மற்ற வகை வாத்துகளோடு சேரும்போது முட்டை தரிப் பதில்லை. இவை அன்னம் போன்ற நடையுடையவை. முட்டையிடும் இனங்கள் - காக்கி கேம்பல். கரும் பச்சை நிற அலகுடன் உடல் முழுதும் காக்கி நிறம் கொண்டவை. இனச் சேர்க்கைக் காலத்தில் ஆண் வாத்தின் தலை அழுத்தமான நிறமாக மாறும். ஆண் வாத்து 2.3 கிலோவும், பெண் வாத்து 2 கிலோவும் இருக்கும். இவ்லினம் 47 கிராம் எடையுள்ள வெள்ளை நிற முட்டைகளை இடும். ஓர் ஆண்டிற் குச் சராசரி 300 முட்டைகள் க் கூடியவை. வை 2 முதல் 2.4 கி. எடையுடன், உண்ணச் சுவை யாக இருக்கும். வெள்ளைக் கேம்பல். இது ஆரஞ்சு நிற அலகும், வெளிறிய உடல் நிறமும் கொண்டது. உண்ணச் சுவையாக இருக்கும். இந்தியன் ரன்னர், இவை சிறிய உடல்கட்டு உடையவை. இவை வாத்து நடை போடாமல் மற்ற பறவைகளைப் போல ஓடும் தன்மையுடையவை என்பதை இவற்றின் பெயரிலிருந்தே அறியலாம். இவற்றிற்குப் பல நிறங்கள் உண்டு. ஆனால் வெள்ளையும், வெளிறிய நிறமும் அதிகம் காணப் படும். பெண் வாத்துகள் நல்ல முட்டைகளை இடும் தன்மை உடையவை. வாத்துகளில் கலப்பினங்கள் உண்டு. மற்ற பறவை இனங்களைப் போலவே அவை செயல்படும். தீவனம். லாத்துக்களுக்கு மூன்று வகையான தீவனம் தயாரிக்கப்படுகிறது. அவை, தொடக்க நிலைத் தீவனம், வளர்நிலைத் தீவனம், வளர்ந்த வாத்துத் தீவனம் என்பனவாகும். இவற்றில் வளர்நிலைத் தீவனத்தில் 18 முதல் 20 விழுக்காடு புரதம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும். தீனி வைக்கும் பெட்டிகள் வாத் தீன் அலகிற்கு ஏற்றாற்போல் அகலமாக இருத்தல் அவசியம். வாத்துகள் அதிகமான நீர் பருகுவதால் கவனமாகப் பார்த்துத் தூய்மையான நீரை அளிக்க வேண்டும். வீடு. வாத்துக் குஞ்சுகளைக் கோழிக் குஞ்சுகள் போலவே தரையில் வளர்க்கலாம். தொடக்க வெப்ப நிலை சற்றுக் குறைவாக இருத்தல் நலம். அதாவது 30° முதல் 37° Cஇருந்தால் நல்லது. நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட இரு தட்டுகளில் 25, 25 வாத்துக் குஞ்சு களை மூன்று வாரம் வரை வளர்க்கலாம். அல்லது மூன்று அடி நீளம், ஏழு அடி அகலம், 6 அங்குலம் உயரம் கொண்ட ஒரு தட்டுச் சிறந்தது. இதில் 100 வாத்துக் குஞ்சுகள் ஒரு வாரம் வரை படலாம். தொன்றுதொட்டு வரும் ஆழ்கூள முறைப் படி (deep litter system) நீண்ட நடுப்பாதையும், அ.க. 3-18 வளர்க்கப் ஆழ்கூள முறையில் வாத்து வளர்ப்பு 275 . இரு பக்க வீடுகளும் உள்ள கட்டிடத்தில் தரையில் வளர்க்கலாம். மரத்தூள். வைக்கோல், மரச்சீலல், தவிடு, உமி முதலியவை தரை மேல் பரப்பி வைக்கப் படல் வேண்டும். வாத்துகள் அதிகமான நீர் அருந்தி, அதிகமாக நீர், மலம் கழிப்பதால் தரையைத் தூய்மை யாக வைத்துக் கொள்ளல் வேண்டும். அல்லது கம்பி வலை மீது வாத்துகளை விடலாம். இதற்கு 8 அளவுத் தடிப்புள்ள அரை அங்குல இடைவெளியிட்ட கம்பி வலை நல்லது. ஓர் வாத்துக் குஞ்சு வளர்ப்பும், கொழுக்க வைக்கும் முறையும். வாத்துகளை நான்கு வாரத்திற்குப் பிறகு தான் கொழுக்க வைப்பது தொடங்கும். 200, 200 வாத்துக்கொண்ட கும்பலாக, 10 கும்பல்களை ஏக்கரில் விடலாம். 2 அடி உயரமுள்ள சுற்றுத் தடுப்பு, வாத்துக் கும்பலுக்குப் பாதுகாப்பாக அமை யும். குளிர் காலத்தில வாத்துகளை வெளியே விட்டு வளர்ப்பதைக் குறித்துப் பல தவறான கருத்துக்கள் உண்டு. எனினும் எக்காலத்திலும் ஆழ்கூள அமைப் பில் வாத்துகளை வளர்க்கலாம். முன் கூறியபடியே வைக்கோல், மரத்தூள் பரப்பிய தரையிலோ வலைக் கம்பியின் மேலோ வளர்க்கலாம். இதற்கு 12 அளவுத் தடிப்புள்ள 1 அங்குலம் இடைவெளியிட்ட வலைக் கம்பியைப்பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாத்துக்கும் 1 சதுரஅடி இடம் தேவை. ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்குத் தாழ்வாரம் போன்ற திறந்தவெளி இருத்தல் அவசியம். இது உறுதியான சிமென்ட் அல்லது சாதாரண மண் தரையாக இருக் கலாம். குறைந்த செலவில் அதிக உற்பத்தி செய்ய முடியும்.இத்தகைய முறையில் தரையில் நீர் தேங் காமல் வடிந்தோடச் செய்ய வேண்டும். அல்லது தரையை அடிக்கடி நல்ல முறையில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொண்டு தூய்மை செய்ய வேண்டும். சிறிய வாத்துகளை வளர்க்கும்பொழுது குறுகிய இடத்தில் வளர்த்துப் பெரியவை ஆகும்போது அவற்றைப் பெரிய இடத்திற்கு மாற்றலாம். வளர்ந்த வாத்துகளை வளர்க்கும் முறை. வாத்து களுக்கு நீந்துவதற்குத் தண்ணீர் வசதி செய்வதனால் எப்பயனும் இல்லை, ஆனால் குடிப்பதற்குக் குளிர்ந்த நீர் அதிக அளவில் வைக்க வேண்டும். தண்ணீர் குடித்த பின் வாய்க்காலில் வாத்து, தலையை நனைத் துக் கொள்ளும். மிகவும் எளிதான முறையில் 100 வளர்ந்த வாத்துகளை ஓர் ஏக்கர் நிலப் பரப்பில் அப்படியே விட்டுவிடலாம். மற்ற கால்நடைகளுக்குப் பயன்படாத சதுப்பு நிலத்தில் வாத்து நன்றாக மேயும். ஆழ்கூள முறையில் குளிர் காலத்தில் மூங்கிலி னால் செய்த கூரையும், பக்கமும் உள்ள வீட்டில் சிமென்ட் தரை அல்லது கம்பி வலையில் விட்டுவிட லாம். இப்படிப்பட்ட இடத்தில் வாத்து ஒன்றுக்கு 2 முதல் 3 சதுர அடி இடம் தேவைப்படும். கட்டிடம்