உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆப்பிள் மரம்‌

6 ஆப்பிள்மரம் 1983 செப்டம்பர் 19ஆம் நாள் வரையில் கடந்த படி நிலைகளைப் படம் 3 இல் காணலாம். ஆப்பிளின் பயணக் கட்டங்களைப் படம் 4 இல் காணலாம். ஆப்பிளின் செய்தித் தொடர்புச் செய்முறைகள், அவற் றில் பங்கேற்ற தரை நிலையங்கள் ஆகியவற்றைப் படம் 5 இல் காணலாம். ஆப்பிள் சோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிக்கப்பெற்று 1983 செப்டம்பர் 19 ஆம் நாள், ஆப்பிள் செயற்கைக்கோள் திட்டம் முற்றிலும் முடிவுபெற்றது. குஜராத் மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகள், ஹிந்து நாளிதழைச் சென்னை யிலிருந்து பெங்களூருக்குச் செயற்கைக்கோள் வழியே அனுப்பிப் பதிவுசெய்தல், நான்கு இந்திய நகரங் களுக்கு ஒரே சமயத்தில் தொழில்நுட்ப உயர்கல்வி மாணவர்களுக்குக் கல்வி ஒலிபரப்பு, கேள்விபதில் ஏற்பாடு, பல்வேறு இடங்களிலுள்ள கணிபொறி களை இணைத்து இயக்கல், உயிரியல், செய்தித் தொடர்புச் செய்முறைகள் ஆகியவை சில குறிப் பிடத்தக்க ஆப்பிளின் சாதனைகளாகும். தொலை அளவளாவலும் (teleconferencing) ஆப்பிள் வழியே செய்து காண்பிக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றாகும். மேலும் நாடுதழுவிய நாடுதழுவிய குடியரசு, விடுதலைநாள் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் பாரதப் பிரதமரின் பன்னாட்டுப் பயண நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பும் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் பணியில் ஆப்பிள் செயற்கைக்கோளின் பங்கினைத் தெளி வாகக் காட்டின. பல்நோக்குப் பயன்பாட்டுச் செயற்கைக்கோள்கள் வடிவமைப்பதற்கான சிறந்த தொழில்நுட்ப அடிப் படைக்கும் தேர்ந்த வல்லுநர்களை உருவாக்குதற் கும் ஆப்பிள் வகை செய்துள்ளது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, ஐரோப்பிய விண் வெளிக் கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாகவும் ஆப்பிள் விளங்கு கிறது. ஆர்.மணிவாசகம் ஆப்பிள் மரம் கனி தரும் மர வகைகளில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆப்பிள் மரம். இது அல்லி இணையா (Polypetalous) இரு விதையிலைக் குடும்பங் களில் ஒன்றான ரோசேசியைச் (Rosaceae) சார்ந்தது. தாவரவியலில் இதற்கு மாலுஸ் புமிலா (Malus pumila Mill.) என்பது பெயர். ஆப்பிள் பயிரிடுதல் இந்தியா வில் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேற்கு இமயமலைத் தொடருக்கும், காகசஸ் (Caucasus), ஆசியா மைனர் (Asia minor) ஆகியவற்றிற்கும் இடைப்பட்ட பகுதிகள் இதன் தாயகமாக இருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. கருங்கடல் (Black sea), துருக்கிஸ்த்தான் (Turkistan), இந்தியா ஆகிய வற்றின் மேல்நிலப் பகுதிகளில் தோன்றியிருக்கக்கூடு மென்றும் கூறப்படுகின்றது. ஆண்டு தோறும் சுமார் 230 லட்சம் டன் ஆப்பிள் பழங்கள் விளைவிக்கப் படுகின்றன. குளிர்மண்டல நாடுகள் யாவற்றிலும் ஆப்பிள் மரம் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஃபிரான்சு, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஆப்பிள் அதிக அளவில் பயிரா கிறது. இவற்றில் நீண்ட பகல் ஒளி (day light), குறைந்த காற்றின் சார்பீரப்பதம் (relative humidity), வெப்பமான பகல் நேரம், ஆனால் குளிர்ந்த இரவு நேரம் உள்ள பகுதிகளில் மிகவும் தரமான பழங்கள் அதிகப்படியான காய்ப்புடன் கிடைக்கின்றன. குளிர் காலங்களில் உறையும் தன்மையுடன் கூடிய குளிர் தேவைப்படும். அறிவியல் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆப்பிள் பழம், போம் (Pome) என்று கூறப் படுகின்ற ஒரு வகைப் போலிக் கனியாகும். ஒவ் வொரு கனியிலும் ஐந்து அறைகள் உண்டு. ஒவ்வோர் அறையிலும் பிப்ஸ் (pips) என்று கூறப்படுகின்ற இருவிதைகளுண்டு. பழமாக உண்ணத்தக்கவை, சமைத்து உண்ணத்தக்கவை, சிடர் (Cider) என்னும் மது தயாரிக்க ஏற்றவை. அழகுத் தாவரமாக (ornamental group) வளர்க்கப்படுபவை என ஆப்பிள் மரங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் உண்ணும்வகைக் கனிகள் 6 முதல் 7செ.மீ வரையுள்ள குறுக்களவையும், சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தை யும், அதிக அளவு சர்க்கரைச் சத்தையும் பெற்றிருக் கும். சமைத்து உண்ணக்கூடியவை, 10 செ.மீ. குறுக் களவையும் அதிக அளவுப் புளிப்புச் சத்தையும் பெற்றிருக்கும். இவை பச்சை நிறமுள்ளவை. வணிகத் துறையில் சிடர் என்னும் பானம் வெவ்வேறுவகை ஆப்பிள்களின் சாறுகளை வேண்டுமளவிற்குக் கலந்து தயாரிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடத்திய இனச்சேர்க்கை ஆராய்ச் சிகள். தேர்வுகள் ஆகியவற்றின் பயனாய்ப் பழங் காலத்தில் இருந்து வந்த ஏறக்குறைய 6500 வகை களிலிருந்து சுமார் 50 வகைகள் மட்டும் தேர்ந் தெடுக்கப்பட்டு அல்லது தோற்றுவிக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. அவற்றில் தேன்கனி (delicious), மஞ்சள் தேன்கனி (golden delicious), சிவப்புத் தேன்கனி (red delicious) எனப் படுபவை மிகவும் முக்கியமானவை. இவை தவிர, காக்ஸ் ஆரஞ்சு ( Cox orange), பிப்பின் (Pippin) கிரேன்னிஸ்மித் மக்கின்டோஷ் (Granny Smith Mcintosh), ஜொனாத்தன் (Jonathan)ரோம் எழில்கனி (Rome beauty) போன்றவையும் பரவலாகப் பயிரிடப் பட்டு வருகின்றன. இந்தியாவில் காஷ்மீர், இமாச் சலப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங் களில் ஆப்பிள் சுமார் 15000 ஹெக்டேர் நிலப்பரப்பில்