278 ஆழ்நிலச் சரிவுகள்
278 ஆழ்நிலச் சரிவுகள் ஆழமான, நீண்ட சரிவான பள்ளங்களாக இவை அமைகின்றன. 1859 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹால் (James Hall) என்பவர் வட அப்பலேச்சியப் பாறைக் கட்டமைப் பையும் அடுக்கியலையும் (stratigraphy) ஆராயும் போது தொல்பழம் உயிரூழியில் படிவுகள் (paleozoic sediment) பல, தாழ் நீரில் ஏற்பட்ட ஆழ்கடல் படிவுகளாகவும் 12 கி.மீ. தடிப்புடையனவாகவும் இருக்கக் கண்டார். இவை, அதே காலப்பழமையுள்ள மடிப்பில்லாக் கட்டமைப்புடைய நிலப்புறப் பரப்பில் உள்ள பாறைத் தடிப்பைப் போன்று 10 அல்லது 20 முறை தடிப்புக் கொண்ட அகன்ற ஆழமான சரிவுப் பள்ளங்களாக இருந்தன. இவற்றை இவர் ஆழ்நிலச் சரிவுகள் என்று பெயரிட்டு அழைத்தார். (sand மணற்பாறை stone), இத்தகைய சுண்ணாம்புப்பாறை (lime stone), களிப்பாறை (clay stone) போன்றவை வேதியியல் உட்கூறு கொண்ட தடிப்பான படிவுகளாகக் காணப்படுவ தால், அடியில் இருந்த பழைய பாறை சிறிது சிறிதாக உட்சென்று இருக்க வேண்டும். எனவே, இவ்வகை ஆழ்நிலச் சரிவுகளில் இருந்து மடிப்பு மலைகள், நீண்ட காலக் கீழ்ச்சரிவுக்கு ஆட்படும்போது படிவு கள் படிந்து அப்பாறைகள் கீழ்ச்சரிவுக்கு ஏற்றாற் போல் நீண்ட, அகன்ற ஆழமான படிவுகளாகத் சரிவகங்கள் தோன்றின. ஆழ்நிலச் இவற்றை (geosynclinals) என 1873 இல் டானா (Dana) என் பவர் பெயரிட்டு அழைத்தார். பிறகு இவற்றை ஆழ் என்றே வழங்க நிலச் சரிவுகள் (geosynclines) லாயினர். கடல் தற்பொழுது நம் நாட்டில் உள்ள இமயமலைத் தொடர் முன்பு ஒரு காலத்தில் தித்தஸ் (sea of tethys) பரப்பில் இருந்த ஓர் ஆழ்நிலச் சரிவே ஆகும். அது சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டு மடிப்பு மலையாகத் தற்காலத்தே உருவாகி உள்ளது. ஆழ்நிலச் சரிவுகளில் படிவுகள் படியப்படிய ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதாவது மிகப்பெரிய கீழ்நோக்கிச் சரிந்த பிளவு ஏற்படும். அப்படிவு மேல் உள்ள அழுத்தத்தாலும் அதிக வெப்பத்தாலும், அதில் படிந்துள்ள படிவுகள் உருகி நிலக்கிளர்ச்சி (orogeney) ஏற்பட்டு மலையாக உருவாகி மடிப்பு மலைத் தொடராக (orogenic folded mountain belt) உலகில் நிலவுகின்றன. ஆழ்நிலச் சரிவுகள் நிலையான புவிப்பரப்பிற்கு இடையில் நிலநடுக்கத்தினால் ஏற்படும் ஏற்படும் நிலக் கிளர்ச்சியால் உருவாகின்றன. கார்டில் வட அமெரிக்காவில் காணப்படும் லேரியா (cordillaria) அப்பலேச்சிய (applachia), இயு ஆழ்நிலச் சரிவுகள் கடலின் பக்கத்தில் அல்லது அருகில் ஏற்பட்டுள்ள ஆழ்நிலச் சரிவுகள் ஆகும். உள்ள மேற்கூறிய அப்பலேச்சிய இயு ஆழ்நிலச் சரிவு களும் தொடர் வரிசையாகப் பிரிட்டானியத் தீவு களருகில் ஸ்காண்டினேவியத் தொடரில் கலிடோனியத் (caledonian) தொடர்களும் அட் லாண்டின் பெருங்கடல் பரப்புப் பரவுவதற்கு முன்பு தோன்றின. இயு ஆழ்நிலச் சரிவுகளின் உருமாற்றம் அடைந்த இவ்வகைப் பாறைகள் தொல்பழங்கடலில் தோன்றியவை. ஆழ்நிலச் சரிவுகளின் பல வகைகள் உண்டு. நில அடுக்கு நகர்வியலில் (plate tectonics), இந்த ஆழ் நிலச்சரிவுகளை அடிப்படையாக வைத்து 1970க்குப் பின்பு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நில அடுக்கு நகர்வியலைப் பற்றி ஆராயும் போது ஆழ்நிலச்சரிவுகளின் வகைகளைக் காணவேண் டும். ஆழ்நிலச்சரிவுகள் அமைந்துள்ள இடங்களையும் அவற்றில் படிந்த பாறைப் படிவுகளின் வகைகளை யும் வைத்து ஆழ்நிலச் சரிவுகளைப் பல வகையாகப் பிரிவு படுத்துகின்றனர். இயு ஆழ்நிலச் சரிவுகள் (eugeo syncline). இவ் வகை ஆழ்நிலச் சரிவில் படிந்துள்ள படிவுகளின் இடையிடையே எரிமலைப் பாறைகள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும், இவை நிலையான கடினமான நிலப்பகுதியிலிருந்து (kraton) சிறிது தொலைவு தள்ளியிருக்கின்றன. மையோ ஆழ்நிலச் சரிவுகள் (miogeo syncline). இவற்றில் படிவுகள் மிகத் தடிப்பாக உருவாகி யிருக்கும். எரிமலைப் பாறை இருக்காது. இவை நிலையான கடினமான நிலப்பகுதிக்குப் பக்கத்தில் தோன்றுகின்றன. டெப்ரோ ஆழ்நிலச் சரிவுகள் (taphro geosyne- line). இவை ஒரு பாந்த நீண்ட ஆழ் பள்ளங்களை ஒத்த வடிவமுடையன. இவற்றில் பெயர்ச்சிப் பிளவு அல்லது இருக்கும். நில நடுக்கப் பள்ளங்கள் அமைந்திருக்கும். பாரா ஆழ்நிலச் சரிவுகள் (para geesyncline). இவை நிலைப்பான நிலப் பகுதியில் தோன்றியுள்ள ஆழ்நிலச் சரிவுகளாகும். ஜூ ஆழ்நிலச் சரிவுகள். (Zeu geosyncline). நிலைப்பான நிலப் பகுதியில் தோன்றிய ஆழ்நிலச் சரிவின் விளிம்புகள் உயராமலிருந்தால் அவை ஜூ ஆழ்நிலச் சரிவுகள் எனப்படுகின்றன. ஆட்டோ ஆழ்நிலச் சரிவுகள் (auto geosyncline). மேற்கூறிய நிலைக்குட்படாமல் இருக்கக்கூடிய வேறு வகை ஆழ்நிலைப் பள்ளங்களுக்கு ஆட்டோ ஆழ் நிலச்சரிவுகள் என்ற பெயர் பொருந்தும். கருப்பு நிறக் களிப்பாறை (dark shales) ஒழுங் காக அடுக்கப்படாத மணற்பாறைகள் இரண்டும் உள்ள பாறைக்குப் பெயர் கிரேவெக்கி. இவை படிப்