உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 ஆழ்நிலைப்‌ பாறை வழித்‌ தாதுவாக்கம்‌

282 ஆழ்நிலைப் பாறை வழித் தாதுவாக்கம் முன்கை நடுக்கமாகவும் இந்நோய் தொடங்கலாம். கைகள் ஒரு வேலையுமின்றிச் சும்மா இருக்கும்போது நடுக்கம் அதிகமாக இருக்கும். நடுங்கும் கைகளில் செய்தித்தாள் ஒன்றையோ குடை ஒன்றையோ கொடுத்தால் நடுக்கம் குறைந்துவிடுகின்றது. சில சம யம் மறைந்தும் விடுகின்றது. தூங்கும்போது இந் நடுக்கம் இருப்பதில்லை. பாதிக்கப்பட்ட கை கால் தசைகளில் இளகும் தன்மை மறைந்து மறைந்து இறுகும் தன்மை அதிகமாகத் தோன்றுகிறது. டோப்பமின் (dopamine) என்னும் நரம்பு வேதியியல் பொருள் ஆழ்நிலை நரம்பணுக் குழுவில் குறைவதாலும் இந் நோய் வரலாம். செம்பு உலோகத்தின் உப்புக்கள் ஆழ்நிலை நரம்பணுக் குழுவில் அதிக அளவில் படிந் தாலும் இந்நோய் தோன்றலாம். அச்சமயம் கல்லீர லும் வென்சனைய அழிவுக்கு உட்படுகிறது. (hepato lenticular degeneration). ஆழ்நிலை நரம்பணுக் குழு வின் உடல் இயங்கியல் (physiology) இன்னும் தெளி வாகத் தெரியவில்லை. நோய்க்குறிஇயல் (pathology) மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மாறுபட்டு உள்ளது. இம்முரண்பாடு ஆராய்ச்சியின் வேகத்தைத் தடை செய்கின்றது. வருங்காலத்தில் உருவாகும் புதியமுறை களால் இத்தடைகள் களையப்பட்டு ஆழ்நிலை நரம் பணுக் குழுவின் வேலைகள் தெளிவாகும் என்று நம் பலாம். நூலோதி அ.நமச்சிவாயம் John R. Brobeck, Best & Taylor's Physiological Basis of Medical Practice, Tenth Edition, 1978. ஆழ்நிலைப் பாறை வழித் தாதுவாக்கம் பெரிய, பரந்த புறப்பரப்பு அனற் பாறைகளால் (igneous rocks) அமைந்து அவ்வனற் பாறைகளின் அடித்தளம் புவியில் மிக ஆழ்ந்து, எல்லாப் பக்கங் களிலும் படிவுப்பறைகள் பக்கப்பாறைகளாக அமைந்திருந்து, மேலும் அவை உருமாறிய பாறை களின் உட்புகுந்து வினைபுரிந்து தொடுகை உருமாற் றம் (contact metamorphism) அடைந்திருந்தால், இத்தகைய அனற்பாறைகளை நிலஇயலில் ஆழ் நிலைப் பாறைகள் (batholith) என்பர். இதன் ஊடாகக் கனிமங்கள் தோன்றுவதை ஆழ்நிலைப் பாறை வழித்தாது ஆக்கம் (batholith ore formation) என்று கூறுவர். முதன்முதலில் இக்கருத்து சூயஸ் (Suess) என்பவரால் 1888 இல் நிலஇயல் துறையில் நடைமுறைக்குக் கொணரப்பட்டது. இவர் மலைக் கிளர்ச்சி இயக்கத்தால் ஏற்பட்ட வெற்றுக் குழிவு களில் சிறிதுசிறிதாகப் பாறைக்குழம்பு (magma) நிரம்புவதாகக்கருதினார். இச்செயலுக்கு முதன்முத லில் இவர் ஆழ்நிலைப் பாறை வழிக் கனிமமாதல் வரை சுவர்களாலான கவசம் (mineralisation in batnoliths) எனப் பெயரிட்டார் பின்னர், பழம்பாறைகள் உருகும் போது ஏற்படும் மேலோட்டில் காய்ச்சிய இரும்பு செருகிய தொத்த குழிவாக்கமே ஆழ்நிலைப் பாறை என முடிவு செய் தார். இவர் ஆழ்நிலைப் பாறையைப் பேராழம் ஆழ்ந்த நெடிய போன்ற அமைப்பாகும் என விவரித்தார். நிலைப் பாறையில் வழக்கமாகக் கிரானைட்டு அடங்கியிருந்தாலும் அதில் கிரானோ-டயோரைட்டு. குவார்ட்ஸ்-டயரைட்டு, மான்சோனைட்டு, டயோ ரைட்டு ஆகியனவும் சிறு ஆழ்வட்டைகளில் (stocks) சிறிதளவில் கலந்திருக்கும். ஆழ் மேலும், இவ்வகைப் பெரிய பரந்த பாறை உரு வாகும் முன்பு இப்பாறை உருவான இடம் எதனால் நிரப்பப்பட்டு இருந்தது என்பதை ஆராய்ந்து பார்த் ததில், பலவகைப் பாறை நிறைந்த வளாகத்தில் இவை ஊடுருவிய பாறைகளாக ஏற்பட்டுள்ளன என்பதையும், அதற்குச் சான்றாக இவற்றின் ஓரங் களில் தாய்ப்படிவுகளின் சிதறல்களும் தாய்ப் படி வுப் பாறைகளும் இவற்றுடன் கூர்முனைவடிவ உட் திணிப்பாக அமைந்திருப்பதையும் கண்டறிந்தனர். ஆழ்நிலை அனற்பாறையை உள்ளடக்கிய தாய்ப் பாறைகள் திண்ணியனவாக அமைந்தால் அவை அயல் அடக்கப் பாறை (xenolith) என அழைக்கப் படுகின்றன. டாலி (Daly) என்ற அறிஞர் கிரா னைட்டுப் பாறைக் குழம்பு அதிக அழுத்தத்துடன் மேலே உள்ள பாறைகளை ஊடுருவி வரும்போது துணைப் பெருவட்டைப்பாறை கூரை கூரைக்குமிழ் ஆழ்நிலைப்பாறை சுவர் வட்டாரப் பாறை உருமாற்ற வட்டார வளாகம் படம் 1. ஆழ்நிலைப் பாறையின் தோற்றம் பாறை மேல் ஓடுகள் அதிக அழுத்தத்தால் நொறுங்கி அவ்வனற் பாறைகளில் வீழ்ந்து அயல் அடக்கப் பாறைகளாகக் காணப்படுகின்றன என்றும், மேல் நோக்கி அழுத்துவதால் ஏற்படும் பிளவுகளில் கிரா னைட்டு ஊடுருவி எங்கும் கிரானைட்டுப் படிவுக ளாகப் பரந்துள்ளன என்றும் கூறுகின்றார். மேலும் இவர் ஆழ்நிலைப் பாறைகளில் உண்டாகும் ஒரு