296 ஆளிகள்
296 ஆளிகள் யானவை கிரசாஸ்ட்ரியா மெட்ராசென்சிஸ் (Crassostrea madrasensis), கி.குக்குலேட்டா (C. Cucullata) கி.கிரை பாய்கள் (C.gryphotdes) கி.டிஸ்காய்டியா (C.discoidea) போன்றவையாகும். கிரசாஸ்ட்ரியா மெட்ராசென்சிஸ் எனும் உலர்நீர் ஆளி அல்லது சென்னை ஆளி உப்பங்கழிகளிலும், கடல் நீரிலும், பாறைகளின் மேற்பகுதிகளில் காணப்படும். எண்ணூர், தூத்துக் குடி போன்ற பகுதிகளில் சேற்றிலும் காணப்படு வதுண்டு. இந்த ஆளி இனம், நமது நாட்டின் சோனாபூர், கோதாவரி டெல்டாப்பகுதி கோகுலா பள்ளி, புலிக்காடு, எண்ணூர், சென்னை, கடலூர், ஆத்தங்கரை, தூத்துக்குடி, கேரளக் கடற்கரை ஆகிய இடங்களில் அதிகம் பரவியுள்ளது. கிரசாஸ்ட்ரியா ருக்குலேட்டா என்னும் ஆளி, பரவலாக இந்தியக் கடற் கரை முழுவதும் காணப்படுகிறது. கடல் நீரில் மட்டு மின்றி உப்புத்திறன் மாறுபட்டுக் கொண்டிருக்கும் உவர்நீரிலும் ஆளிகள் வளரக்கூடியவை. முதன் முதலில், ஆர்னல் என்ற ஆய்வாளர் ஆளி வளர்ப்பைச் செங்கல்பட்டு மாவட்டத் திலுள்ள எண்ணூரில் 1910 ஆம் ஆண்டு தொடங் கினார். இதற்கு முன்னர், ஆளி வளர்ப்பைப் பற்றி நாம் அறிந்ததில்லை. வளர்ப்புக்கேற்ற இளம் ஆளி திரட்டல் போன்றவற்றில் அவர் வெற்றி கண்ட போதிலும் ஆளி வளர்ப்பு, பின்னர் தொய்வுற்றுத் தோல்வியுற்றுக் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், மீண்டும் ஆளி வளர்ப்பை மேற்கொள்ள மைய மீன் வள ஆய்வுக் கழகம், திட்டமொன்றை 1970 இல் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் செயல்படுத்தத் தொடங்கியது. இப்பகுதியில் தேவையான இளம் ஆளிகள் கிடைக்கின்றன. இவற்றைத் திரட்டி, கட்டப் பட்டுள்ள சாரங்களில் வைக்கப்பட்டுள்ள கூண்டு களில் திரட்டிவைத்து வளர்க்கின்றனர். கூண்டு ஒவ்வொன்றும் 90×60×15 செ.மீ. அளவுடையது. இக்கூண்டு 6 மி.மீ. பருமனனுள்ள கம்பியாலான சட்டத்தைக் கொண்டது. இது 2 மி.மீ பருமனுடைய நைலான் கயிற்றால் 20 மி.மீ. வலைத்துளைகள் உள்ளவாறு பின்னப்பட்ட வலையால் சுற்றப்பட்டி ருக்கும். இக்கூண்டினுள் வலைத் துளைகளினுள் நீர் போதுமானபடிச் செல்ல முடியும். மேலும் ஆளி களுக்கு வேண்டிய உணவும் ஆக்சிஜனும் கிடைக் கும். எனினும், பாசிகளோ மற்ற உயிர்களோ இவ் வலைத் துளைகளில் வளர்ந்து அடைத்து விட்டால் நீர்ப்போக்குவரத்து தடைப்படும். இந்நிலை ஏற் படாதிருக்க, அவ்வப்போது வளர்ப்புத் தட்டுகளைத் (கூண்டுகளை) தேவையுறும் போது தூய்மை செய்ய வேண்டும். கூண்டுகளில் இளம் ஆளிகளில் வளர்ச்சி முதலில் மாதத்துக்கு 12முதல் 15மி.மீ. என்ற அளவில் இருக்கும். மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் 40 மி.மீ. நீளம் வரை வளரக்கூடிய இத்தகைய ஆளி கள் ஒரு வருடத்தில் 17 செ.மீ. நீளம் வரை வளரும். இதன் அடிப்படையில் ஆண்டொன்றில் ஹெக்டேருக் 120 முதல் 150 டன்கள் மட்டும் 12 டன்களாகும். குக் கிடைக்கும் உற்பத்தி ஆகும். ஓடு நீக்கிய சதை இத்தகைய உற்பத்தி, கியூபா, ஆஸ்த்திரேலியா, பிரான்சு, போன்ற நாடுகளின் உற்பத்தித் திறனை விடப் பன்மடங்கு அதிகமானது. நன்கு வளர்ந்து இனமுதிர்ச்சியடைந்த ஒவ்வோர் ஆளியும் பல இலட்சக்கணக்கில் முட்டையிடும். தாயிடமிருந்து வெளியேற்றப்பட்ட முட்டைகள் கேஸ்ட்ரூலா (gastrula), ட்ரோக்கோபோர் (trocho- phore) போன்ற பருவங்களைக் கடந்து பதினொரு நாள்களில் இளம் ஆளிகளாகிப் பாறை, தூண் போன்றவற்றில் ஒட்டி வளரத் தொடங்குகின்றன. இந்நிலை அடையும் வரை இவை நீர் செல்லும் திசை யில் நீரோடு சென்று மிதவையாக மட்டும் இருப்ப தால், இவற்றின் வளர்ச்சியும், வாழ்க்கையும் நீரின் தட்ப வெப்ப நிலை, நீரோட்டம் மற்ற உயிர்களால் உண்ணப்படாதிருத்தல் முதலியவற்றைப் பொறுத் திருக்கும். எனவே, பெருமளவு முட்டைகள், மிகச்சில நாள்களில் மடியவோ, இரையாகவோ நேரிடுகின் றன. ஆகையால் அதிக அளவு முட்டைகள் உற்பத்தி யாதல் இயற்கையின் வரமே எனலாம். இன முதிர்ச் சிக்குப் பின்னர் வெளியாகும் இளவுயிரிகளைத் தக்க திரட்டல் முறையில் திரட்டி வளர்க்க வேண்டும். ஆளி வளர்ப்பில் அவ்வப்போது கவனிக்க வேண்டிய வேலைகள். வளர்ப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து, வளர்ப்பினங்களை வளர விட்ட பின்னர், இனி அறு வடையின் போது பார்த்தால் போதும், என்றிருக்கக் கூடாது. ஆளிகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது. அவற்றின் உடல்நலம் எவ்வாறு உள்ளது, ஒட்டுண் ணிகள் பாதிக்கின்றனவா என்பனவற்றையெல்லாம் கவனித்துத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வளரும் ஆளிகளின் மீது, இடருயிரிகளான அலசி {barnades) பாசிகள் போன்றவையும் ஒட்டி வளரும். இவற்றால் ஆளிகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படும். எனவே அவற்றை ஆளிகளின்று அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். இவை ஆளி வளர்ப்புத் தட்டுகளிலும் காணப்படுவதால் அவற்றையும் தூய் மை செய்யவேண்டும். அவ்வப்போது ஆளிகளின் வளர்ச்சியை அளவெடுத்துக் கண்டறிய வேண்டும். அடையும் வளர்ச்சியைப் பொறுத்து ஆளிகளின் எண்ணிக்கையை வளர்ப்பிடத்தில் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனைச் செய்யவேண்டும். பகையினங்களினாலும் ஆளிகளுக்கு ஆபத்துவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில வேளைகளில் நீர் மட்டம் குறைந்து, ஆளிகள் அதிக நேரம் நீருக்கு வெளியிலிருக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கேற்ப வளர்ச்சி குறைந்து, உற்பத்தியும் குறையும். எனவே வளர்ப்புத் தட்டுகள் நீரில் மூழ்கியிருக்கும்படி மாற்றி யமைத்துக் கொள்ளவேண்டும். வளர்ப்புத் தட்டுக் கள், முழு நேரமும் நீரில் மூழ்கியிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. சிறிது நேரம் வெளியில்