ஆளிகை 299
- * *
ஆளிகை 299 வாட் ஆளிகை (ஆ) போர்ட்டர் ஆளிகை (இ) ப்ரோயல் ஆளிகை (ஈ) ஹார்ட்னல் ஆளிகை (உ), (ஊ) விற்சுருள் விசை ஆளிகைகள் படம் 1. ஆளிகை வகைகள் பந்துகள் (அ1, அ2 என்பன) பொருத்தப்பட்டுள்ளன. தண்டின் கீழ்ப்பகுதியில் மேலும் கீழும் நகரக்கூடிய உறை (ஈ) ஒன்று உள்ளது. இந்த உரையின் கீழ்ப் பகுதியான (radius) இ1, இ2 ஆகியவை இணைப்புத் தண்டுகளால் பந்துகள் அ1, அ2, உடன் இணைக் கப்பட்டுள்ளன. தண்டின் மேற்பகுதியில், நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள உறையின் விளம்புப் பகுதியில் ஆ1,ஆ2 என்ற இணைப்பு உள்ளது. சுழற்பந்து களும், இவ்விணைப்பும் தண்டு சுற்றும் வேகத்திற் கேற்றவாறு சுற்றும் ஆரத்தினைக் (radius) குறைத்தோகூட்டியோ, இயக்கத்தில் ஆழ்த்துகின்றன. இதனால் நழுவு உறை ஈ மேலும் கீழுமாக நகரும், மடக்கு இணைப்புத் தண்டு உ ஒன்றினால் குறுவழி அடைப்பிதழ் இயக்கம் படத்தில் காட்டியபடி நழுவு இணைக்கப்பட்டுள்ளது. குறுவழி அடைப்பிதழ் செலுத்தப்படும் பாய்மத்தை (working fluid) அல்லது எரிபொருளைக் கட்டுப்படுத்துகிறது. ஆளிகையின் முதன்மைத் தண்டு படத்தில் விவரித் துள்ளபடி பொறியின் முதன்மை உருளையிலிருந்து வார்ப்பட்டை (belt), பற்சக்கர (gear) அமைப்பினால் இயக்கத்தினைப் பெறுகிறது. உறை ஈ மைய விலக்குவிசையின் ஆற்றல், ஒவ்வொரு பந்தின் எடை, இணைப்புத் தண்டுகளால் பந்துகளில் ஏற்படும் இழுப்பு (pull) ஆகியவை எடைப்பந்து களைக் குறிப்பிட்ட ஆரத்தில் சுற்றவைக்கின்றன. தண்டின் சுழல்திசை வேகம் அதிகரிக்கும்போது, மையவிலக்கு விசையினால், சுழற்பந்துகள் வெளி நோக்கி விரையும். இதனால் தழுவு உறை நோக்கி நகரும். பொறியின் வேலைப்பளு குறைந் மேல் தாலும் சுழல் வேகம் அதிகரித்து, சுழற்பந்துகளின் சுற்று ஆரம் அதிகமாகி, நழுவு உறை உயரும். நழுவு ஆ2 அர அ2 சூறுவழி அடைப்பிதழ் படம் 2. வாட் ஆளிகை