உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 ஆளிகை

302 ஆளிகை இந்நிலையில் சுழற்பந்துகளில் விசை ஏற்படும் களை எதிர்க்கத் திறன் இல்லாது போகும். சுழல் வேகம் நடுவன் அளவினை அடையும்போது, நழுவு உறை செயல்படு திறனைப் பெற்று, இயக் தன்மையை அடைகிறது. இந் கத்திற்குள்ளாகும் நிலையில்தான் நழுவுஉறை ஆளிகையின் பயனுக்கு ஏதுவாகிறது. அதுபோலவே நழுவு உறை பெரும் நிலையில் இருப்பதாகக் கொள்வோம். அந்நிலையில் நழுவு உறையின் மொத்த இடப்பெயர்ச்சியும் ஏற் பட்டுவிட்டது. இந்நிலையில் சுழல்வேகம் அதிகரிக் கப்பட்டால் நிலைமைக்கேற்றவாறு பொறியின் திறனைக் குறைக்க இயலாது. ஆகவே ஆளிகை நடு வன் சுழல் வேகத்திற்கு மேம்பட்டும் கீழ்ப்பட்டும் குறிப்பிட்ட வரம்பிற்குள்ளாகவும்தான் திறம்பட இயக்க இயலும். எனவே, ஆளிகை திறம்பட இயங்க நழுவு உறை கீழ்மட்டத்தில் இருக்கையில், கருவி அல்லது பொறி முழு அளவு திறனை வெளிப்படுத் தியும்; மேல்மட்டத்தில் இருக்கையில் எவ்விதத் திற மையையும் வெளிப்படுத்தாதவாறும் வடிவமைப்பு இருக்க வேண்டும். வடிவமைப்பின்போது, ஆளி கையின் தரம், செயல்படு திறம்பற்றி குறிப்பிடுவதற் கும், பிற வகை ஆளிகைகளுடன் ஒப்பிடுவதற்கும் சில குறிப்பீடுகள் அல்லது சிறப்பியல்புகள் பற்றிய விளக்கம் தேவைப்படுகின்றது. அவற்றில் முதன்மை யானவற்றைக் காண்போம். அதாவது நுண்மை அல்லது உணர்திறன் ஆளிகையின் வடி வமைப்பில் நழுவு உறையின் இடப்பெயர்ச்சி முடிந்த அளவில் அதிகமாக இருப்பதாக அமைப்பதே நலம். ஒரு ஆளிகை சிறந்த பதிவு நுட்பமாக இருப்பதை எப்படிக் கணிப்பது? பொருத்தப்பட்டுள்ள கருவியின் சுழல்வேகம் மாறுபட்ட உடனேயே, அதை ஆளிகை உணரும் திறம் பெற்றிருக்க வேண்டும். நழுவு உறையின் குறிப்பிட்ட இடப்பெயர்ச்சிக்குச். சுழல் வேகத்தில் ஏற்பட்டுள்ள வேறுபாடு மிகக்குறை வாக இருக்கவேண்டும். ஆளிகையின் இரு வரம்பு நிலைகளை ஒத்துச் சுழல்வேகம் பெருமச் சுழல்வேகம், சிறுமச் சுழல்வேகம் எனப்படும். ஆளிகையின் இவ் விரு வரம்பு நிலைகளிலும், நழுவு உறை வடிவமைப் பின்படி இரு வரம்புத் தடுப்புகள் (stops) கொண்டு நிலைப்படுத்தப்படும். மேற்கூறப்பட்ட வரம்பு நிலை களுக்கான சுழல்வேகங்களுக்கு உள்ள வேறுபாடே சுழல்வேக இடைவெளியாகும். இவ்வகையான கருத் துகளைக் கொண்டு நிலைப்படுத்தப்படும் ஆளிகை யின் பதிவு நுண்மை அல்லது உணர்திறன் என்பது நடுவன் சுழல்வேகத்திற்கும் வரம்புநிலை சுழல் வேகங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டிற்கும் உள்ள விகிதமேயாகும் எனக் கொள்ள வேண்டும். ஆனால் சுழற்சிகளிடையே ஏற்படும் சமனியக்கச் சக்கரத்தினால் ஆட்கொள்ளப்படக்கூடிய சிறு ஏற்ற இறக்கங்களுக்குக் கட்டுப்படுத்தும் வகையில் ஆளிகை கச் நுண்மையதாக இருக்க வேண்டியதில்லை. அதாவது, சுழற்சிகளால் ஏற்படும் வேறுபாடுகளைச் சமனியக் சக்கரமே கட்டுப்படுத்திவிட முடியும். அத் தகைய நிலைமைகளிலோ கருவிகளிலோ பொருத்தப் படும் ஆளிகை அதிக உணர்திறனுடன் இருக்க வேண்டியதில்லை. ஒரே சீர் ஆளிகை-சரி சமகால ஆளிகை. அதி நுட்ப ஆளிகை, அமைக்கப்பட்டிருக்கும் இரு தடுப்பு களுக்கிடையே எந்நிலையில் நழுவு உறை நிறுத்தப் பட்டாலும், குறிப்பிட்ட சுழல்வேகத்திலேயே சுற் றும் நுண்மை (sensitivity) இருந்தால் அதனை ஒரே சீர் ஆளிகை என்று கூறுவர். இவ்வகையான ஆளி கையில் சுழல் வேகத்தில் கடுகளவு மாறுதல் இருந் தால்கூட, அதிமிகு நுண்மையுடன் நழுவு உறை. வரம்பு நிலைகளுக்குத் தள்ளப்பட்டு விடும். ஆனால் இவ்வகையான ஆளிகைகள் சிறந்த பயனைத்தரா. சுழல்வேக மாறுதல் சரிசெய்யப்பட்டபின் நழுவு உறையும் ஆளிகையும் பழைய நிலையினை விரை வில் அடைவதே முக்கிய நோக்கமாகும். இதில் எவ் விதமான உராய்வு இருந்தாலும் சரிசம நீர்மைநிலை பாதிக்கப்படும். கூடி ஆளிகையில் முயற்சி. சுழல்வேகத்தில் ஏற்படும் விகித மாறுதலுக்கு ஏற்றவாறு நழுவு உறை நகர வேண்டும். அவ்வாறு நகருவதற்கு ஆளிகை தன் ஆற்றலை ஈடுபடுத்த முனையும் அல்லது ஏற்படுத்தும் விசையே முயற்சி எனப்படும். பொறியுடன் ஆளிகையில் சுழல்வேகமும் ஒரே அளவாக இருக்கை யில், இம்முயற்சி சுழியாகத்தான் இருக்கும். நழுவு உறையின் மீது ஏற்படும் கூட்டு வினையாக்கம் (resultant) என்பதே முயற்சி எனவும் கொள்ளலாம். சுழல்வேகத்தில் மாறுதல் ஏற்படும் போதுதான் நழுவு உறையில் விசை ஏற்படும். அதன் வினை யாக்கத்தினால் ஆளிகையில் முயற்சி ஏற்படுகின்றது. ஆளிகையின் நிலைப்பு. வடிவமைப்புச் செய்கை யில் சுழல்வேக வரம்பு எல்லைகளுக்கிடையே, ஒவ் வொரு சுழல்வேகத்திற்கும் குறிப்பிட்ட நிலையான தோர் இடப்பெயர்ச்சியினையே அடைவதற்கு ஆளி கையின் நிலைப்பு (stability) என்பது பெயர். முன்னர்க் குறிப்பிடப்பட்ட ஒரே சீர் ஆளிகை இதற்கு எதிர்மறையானது. அதாவது ஒரே சீர் ஆளிகையில் நழுவு உறை வரம்பிற்குள்ளாக ஒரே சுழல்வேகத்தில் எவ்வித நிலையிலும் இருக்கும். அப் படிப்பட்ட ஒரே சீர் ஆளிகைகள் மாறுபடா வேகத் தில் சுற்றும். நல்ல பயன்தரு இயக்கத்திலிருக்கும் ஆளிகைகள் திறமான நிலைப்புப் பெற்றிருக்க வேண்டும். அதாவது ஆளிகையின் பெரும வரம்பு எல்லைகளுக்குட்பட்டு, நடுவன் சுழல்வேக அளவி லிருந்து சுழல் வேகம் சிறிதளவேனும் வேறுபடக் கூடியதாக அமைவதே நலம். இதிலிருந்து நிலைப்பு நுண்மைக்கு (sensitivity) எதிர்மறையானது என்பது புலனாகும்.