உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பு 9

அளவைப் பன்மடங்காக்கவும், அவ்விசையின் திசையை மாற்றவும் ஆப்பு பயன்படுகிறது. ஆப்பு 9 F sin Fo F, cos படம் 1.ஆப்பில் செயல்படும் விசைகள் F என்பது தரப்படும் சிறிய விசை.Q என்பது உருவா க்கவேண் பெரிய விசை. உராய்வு இல்லாத டிய நிலையில் விசைகள் எப்போதும் தளத்துக்குச் செங்குத் தாகச் செயல்படுகின்றன. எனவே, சாய்தளத்தில் செயல்படும் விசை Q அளவினதாக இராது. அது விசையாகும். மிகப்பெரிதான F, என்ற விசைகளையும் கிடை, குத்துத் திசைகளில் பிரித்துக் கூட்டினால் கீழ்வரும் சமன்பாடுகள் கிடைக்கும். F. Sin - F = 0 Q F. Cos @ = 0 எல்லா (1) F, Q ஆகியவற்றின் கோவைகளை (expressions) இணைத்து F என்ற விசையின் மதிப்பைக் கண்டறி யலாம். F = Q tan f (2) கோணம் g சிறிதாக அமையும்போது Qஇன் மதிப்பு, F உடன் ஆப்பின் பரப்புக்கும் அது ஆணிக்கொண்டிருக்கும் பொருளின் பரப்புக்கும் உராய்வு விசையைக் கூட்டிய இடையிலுள்ள தொகைக்குச் சமம். எனவே, Q அளவுவரையிலான பெருவிசைகள் செயல்பட்டாலும் ஆப்பு தன் இருப்பி லிருந்து நகராது. பெரிய மரத்துண்டுகளை உடை, க்கவும் பளுவான பொருள்களைத் தூக்கவும் பேரழுத்தம் செலுத்தவும் ஆப்பு பயன்படுகிறது. கோடரி, கத்தி, உளி, ஆணி, இழைப்புளி போன் றவை ஆப்புகளாகும். நெம்புருளும (cam) சுழலு கின்ற ஆப்பே. பல துறைகளிலும் "ஆப்பு" பல பொருள்களில் ஆளப்படுகிறது. தொலைத் தொடர்பு இயலில் தொலைக்காட்டியின் சோதனை மாதிரியில் (test pattern) பிரிதிறனைக் (resolution) குறிக்கப்பயன் படம் 2. ஆப்புத் தட்டு 1. திருகு 2. ஆப்புத் தட்டு 3. வெட்டி (உளி) படுகின்ற சம இடைவெளியிலுள்ள குவி வடிவக் கருப்பு வெள்ளைக் கோடுகளை இது குறிக்கிறது. வகுதிப் பொறியியலில் (design engineering) குறுங் கோணத்தில் அமைந்த இரு தலைமைப் பரப்புகளைக் கொண்ட தடைப்பொருளைக் (resistant) குறிக்கும். மின்காந்தவியலில் அலைவழிப்படுத்தியில் (wave guide) சரிந்த நீளத்திற்குச் (tapered length) சரிவகம் (trapezoid) போன்ற சிதறு பொருள் கொண்ட அலை வழிப்படுத்தியின் முடிவிடத்தைக் (termination) குறிக் கும். பொறியியலில் புறஒலிச் (ultrasonic) சோதனை யில் புறஒலி ஆற்றல் அலைகளை ஆய்வுத்துண்டிற்குள் ஒரு கோணத்தில் செலுத்தும் கருவியைக் குறிக்கும். ஒளியியலில் (optics) ஒரு முனையிலிருந்து மற்றொன் றிற்குத் தொடர்ந்தோ, படிப்படியாகவோ செலுத் தலைக் (transmission) குறையச் செய்யும் ஒளியியல் வடிப்பானைக் (optical filter) குறிக்கும். வானிலை யியலில் காற்று வீச்சின் உச்சப் புயலெதிர் வளைவுப் பரப்புடன் பெரிதும் தொடர்புடையதும் மிகுந்த சார்பு வளிமண்டல் அழுத்தம் கொண்டதுமான நீட்டப்பட்ட பரப்பைக் (elongated area) குறிக்கும். சில ஆப்புக் கருவிகள். ஓர் அங்குலக் கம்பியைத் துரப்பணத்தால் நிலத்திற்குள் அடித்துச் செலுத்தும் செருமானியக் கண்டுபிடிப்புக் கருவி ஆப்பு எனப் படுகிறது. அவ்வாறு செலுத்துவதால் உண்டாகும் துளையை வெடி வைத்துப் பெரிதாக்கித் தொலை பேசிக் கம்பம் நடுகின்றனர். மின்னியலில் எதிர்ப்பக்கங்களின் பின்னால் மின் கம்பிகள் மடக்கி வைக்கப்பட்ட கண்ணாடிப் பட்டையை அடிப்பாகமாகக் கொண்ட மின்விளக்கு ஆப்பு - அடி விளக்கு (wedge base lamp) ஆகும். எந்திரப்பொறியியலில் காடிகளும் (slots) சாய்வான இடுக்குகளும், உட்பரப்பில் வெட்டப்பட்ட தூக்கு உறைக்குள் (lifting case) அரப்பற்களைக் கொண்ட மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட ஆப்புகளைக் கொண்ட உள்ளகத் தூக்கியே உள்ளக ஆப்புத்