இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
306 ஆளி விதை
306 ஆளி விதை 1. 2. 5 3 ஆளி விதை 1.முழுச்செடி 2. பூக்கள் (இரு அளவுகளில் காண்க) 3. கனிகள் (இரு அளவுகளில் காண்க) 4. நிலைத்த புல்லி வட்டம் 5. விதைகள இடைவெளி இருத்தல் நல்லது. தொழு உரம், அம் மோனியம் சல்ஃபேட்டு, சூப்பர் பாஸ்ஃபேட்டு, பொட்டாசு உரங்கள் இடுவதால் விளைச்சல் பெருகு கின்றது. நாற்றுப் பருவத்தில் ஒரு முறையும், மலரும் பரு வத்திற்கு முன்பு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுதல் சில இடங்களில் கையாளப்படுகின்றது. களைகளை அகற் றுவது மிக முக்கியம். அறுவடை செய்வதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று செடிகளை வேரோடு அகற்றுவது. மற்றொன்று நிலத்தை ஒட்டிச் செடி களை அறுத்து எடுப்பது. செடிகளில் அடித்தண்டு மஞ்சளாக மாறியதும் அறுவடை செய்வது நலம். மாடுகளின் கால் மிதியினால் விதைகளை அகற்றலாம் அல்லது கம்பினால் அடித்தும், உருளைக் கற்களைச்