உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஆற்றல்‌

308 ஆற்றல் கிடைக்கின்றன. இவையும் சூரிய வெப்பத்தின் ஆற் றலைத்தான் தம்மிடம் சேமித்து வைத்திருக்கின்றன. நிலத்தடி வெப்பம், கடலலை ஆற்றல், காற்றாற்றல், நீர் வீழ்ச்சியின் நிலையாற்றல் ஆகியவையும் சூரிய ஆற்றலின் பகுதியே ஆகும். அணுவில் அளப்பரிய ஆற்றல் உறைந்திருக்கின்றது என்பது, அணுவைப் பிளப்பிற்கும், பிணைப்பிற்கும் உட்படுத்தியபோது தெரிய வந்தது. சூரியனுக்கு அடுத்து, இன்றைக்கு அணுவும் ஆற்றல் தரும் மூலமாகக் கருதப்படுகிறது. ஆற்றலின் பயன்கள். பொதுவாக மின்சாதனங் களை நாம் அதிகம் பயன்படுத்துவதால் மின் ஆற் றல் மற்ற வகை ஆற்றல்களைவிட அதிகப் பயனுள் ளதாக உள்ளது. கிடைக்கும் இடத்திலிருந்து நெடுந் தொலைவு கம்பி மூலம் கொண்டு செல்லக் கூடியது. ஒளி விளக்குகள், கோடையில் லெப்பந் தணிக்கும் மின் விசிறி, காற்றுப் பதனி காற்றுப் பதனி (air-conditioner), குளிர் பதனாக்கி (refrigerator), தொலைக் காட்சி, வானொலி, தொலை பேசி, நாடாப் பதிவை (tape recorder), தண்ணீர் இறைக்கும் எந்திரம் (water-pump), கப்பலில் பளு தூக்கும் ஓந்தி (crane), மாவரைக்கும் எந்திரம், மின் சலவைப் பெட்டி, மின் அடுப்பு இவை யாவும் மினசாரம் நமக்குத் தந்த பயன்கருவிகள். மருத்துவத்துறையிலும் பலவகை யான மின்சாரக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். எக்ஸ்கதிர், மின்நெஞ்சலை வரைவி முதலியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மின்சாரம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு அது நம் முன்னேற்றத்தில் பங்கேற்றுள்ளது. வெப்ப ஆற்றலினால், பயனுள்ள மின்சாரத்தைப் பெறமுடியும். வெப்பமின் உலைகள், அணுமின் உலைகள் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. வெப்பம் உணவுப் பொருள்களைச் சமைத்துண்ணப் பயன்படுகின்றது. போக்குவரத்திற்குப் பயன்படும் ஊர்திகளின் எந்திரங்கள் வெப்ப ஆற்றலைக் கொண்டே இயங்குகின்றன. பொதுவாக ஒரு வேலையைச் செய்ய ஆற்றல் தேவைப்படுகின்றது. ஆற்றலின் அளவை வரை யறுக்க, ஒரு நொடியில் செய்யப்படும் வேலையின் அளவை ஆற்றல் எனக் குறிப்பிடுகின்றார்கள். ஆற்றல் அலகு ல் (joule) ஆகும். 1 ஜூல் என்பது, 1 நியூட்டன் விசையுடன் செயல்படும் புள்ளி ஒரு மீட்டர் தொலைவு நகர்த்தப்படத் தேவைப்படும் ஆற்றலின் மதிப்பாகும். ஆற்றலில் பலவகைகள் உள்ளன. அவை இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒலி ஆற்றல், ஒளி ஆற்றல், மின்னாற்றல், பொருள் ஆற்றல் என்பனவாகும். இயக்க ஆற்றல், நிலை ஆற்றல் (potential energy), இயங்கு ஆற்றல் (kinetic energy) என இரு வகைப் படும். நிலையாற்றல் என்பது ஒரு பொருள் தன் நிலையின் காரணமாகப் பெற்றிருக்கும் ஆற்றலாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை உயர எடுத்துச் சென்றால், அதன் நிலையாற்றல் அதன் உயரத்திற் கேற்ப மாறுபடுகின்றது. இயங்கு ஆற்றல் என்பது, பொருளின் இயக்கம் காரணமாகப் பெற்றிருக்கும் ஆற்றலாகும்.m என்பது பொருளின் பொருண்மை எனவும், V என்பது இதன் இயக்க வேகம் எனவும் கொண்டால், அதன் இயங்கு ஆற்றல் 4 mv? ஆகும். க் வெப்ப ஆற்றல். வெப்ப ஆற்றலுக்குக் காரணம் பொருள்களில் உள்ள மூலக் கூறுகளின் இயக்கம்தான். ஒரு பொருளின் வெப்ப ஆற்றல் அதன் வெப்பநிலை யோடு தொடர்புடையது. அதிக வெப்ப நிலையில் உள்ள பொருள் அதிக வெப்ப ஆற்றலைத் தரக கூடியது. நாம் தொடர்ந்து வேலை செய்ய நமக்கு ஆற்றல் தேவை. இவ்வாற்றலை உணவுப் பொருள் களை உட்கொள்வதின் மூலம் பெறுகின்றோம். உணவுப் பொருள்கள் செரிக்கும்போது கிடைக்கும் வெப்பமே நமக்கு வேலை செய்யத் தெம்பூட்டு கின்றது. ஒலியாற்றல். ஒரு பொருள் அதிர்வுறும்போது ஒலி அலை ஏற்பட்டு அது காற்றில் பரவிச் செல் கின்றது. தன் ஆற்றலுக்கு ஏற்ப அலை ஊடகத்தை ஊடுருவிச் செல்கின்றது. அதனால்தான் நாம் ஒலி யைக் கேட்டு உணர முடிகின்றது. ஒளியாற்றல். ஒளியாற்றல் என்பது மின் காந்த அலைகளின் ஆற்றலாகும். ஒளியும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை ஒளி மின் விளைவுகளி னால் அறியலாம். Y என்பது அதிர்வெண் ஆனால் ஒளியின் ஆற்றலை hy என்று குறிப்பிடலாம்.h என்பது பிளாங்கின் மாறிலியாகும். இதன்படிக் குறைந்த அதிர்வெண்ணுடைய அலைகள் குறைந்த ஆற்றலையும், அதிக அதிர்வெண்ணுடைய அலை கள் அதிக ஆற்றலையும் பெற்றிருக்கின்றன நிறுவலாம். மின்னாற்றல். கம்பியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு மிக வேகமாக எலெக்ட்ரான் கள் செல்லும்போது அவற்றிற்கு எதிர்த் திசையில் மின்சாரம் பாய்கிறது என்கிறோம். ஒரு மின் சுருள் (coil of wire) காந்தப் புலத்தில் (magnetic field ) சுழ லும்போது கம்பியில் மின்னழுத்தம் ஏற்படும். இந்த மின்னழுத்தத்தை நீர்வீழ்ச்சியின் நிலையாற்றல், நிலக் கரியின் வெப்ப ஆற்றல், அணுவின் பிணைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டு பெற இயலும். பொருள் ஆற்றல். ஐன்ஸ்டைன் (Einstein) என்பார் ஒவ்வொரு பொருளிலும் பேரளவு ஆற்றல் உறைந்துள்ளது என்பதைக் கண்டு தெரிவித்தார். m என்பது பொருளின் பொருண்மை எனக் கொண்டால் அதில் உறைந்திருக்கும் ஆற்றல் Mca ஆகும். இதில் c என்பது ஒளியின் விரைவாகும். அணுக்கரு ஆற்றலுக்குக் காரணம் இப்பொருள் ஆற்றல்தான். பொதுவாக ஆற்றலை ஆக்கவோ