312ஆற்றல் அளவிகள் முத்தறுவாய்
312 ஆற்றல் அளவிகள் முத்தறுவாய் வட்டத்தட்டில் ஏற்படும் இயக்கத் திருக்கமும் ஒன்றுக் கொன்று எதிர்த்திசையில் அமையும். ஆனால் தொகு திருக்கம் இயக்கத் திருக்கங்களின் வேறு பாடாகும். இதேபோல் மற்றோர் உறுப்பின் அமைப் பாலும் இயக்கம் உண்டாக்கப்படுகிறது. எனவே வட்டத் தட்டுச் சுற்றுகிறது. வட்டத் தட்டு, சுற்றுவ தால் அதனுடன் உள்ள சுழல் அச்சும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தொடர்நிலைப் பற்சக்கரங் களும் சுற்றுகின்றன. எனவே இவற்றுடன் இணைந் துள்ள பதிவு செய்யும் அமைப்பும் இச்சுற்றுக்களைப் பதிவு செய்கிறது. மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பில் இதே போல் மூன்று வட்டத் தட்டுகள், ஒவ்வோர் உறுப் புக்கு ஒன்றாக அமைந்திருக்கும். நிறுத்தும் நிலைக் காந்தங்கள் மேலும் கீழும் வட்டத்தட்டினிடையே பொருத்தப்பட்டிருக்கும். தூண்டல்வகை ஆற்றல் அளவியில் ஏற்படும் பிழை களும் அவற்றை ஈடுசெய்யும் முறைகளும். பொதுவாக ணைகாந்தத்தால் ஏற்படும் மின்காந்தப் பெருக்கு அவற்றிற்குக் கொடுக்கும் மின்னழுத்தத்துக்குச் சரி யாக 90° கோணம் பிந்தியிருக்காது. இதனால் திருக் கம் சுழித்திறன்கூறில் (power factor) சுழியாக இருக்காது. இதற்குத் தறுவாய்ப் பிழை என்று பெயர். இதை ஈடு செய்யச் செம்பு வளையம் (copper band) ணை காந்தத்தின் நடுத்தண்டில் (central limb) வைக்கப்பட்டிருக்கும். சுழிப்பு மின்னோட்டப்பிழை. மின் தூண்டுதல் இல் லாதமின் சுமையில் சோதனை செய்யும் பொழுது சுழிப்பு மின்னோட்டப் (eddy current) பிழையை, நிறுத்தும் காந்தத்தைச் சரிசெய்வதால் குறைக்கலாம். தட்டு,சுற்றும் பொழுது அதன் தாங்கியிலும், பதிவு செய்யும் தேவையற்ற அமைப்புகளிலும் நிறுத்தத் திருக்கத்தை உராய்வு ஏற்படுத்துகிறது. இதை பொருத்தப்பட்டுள்ள இணைகாந்தத்தில் இரண்டு மறைவளையங்களின் (shading rings) உதவி யால் ஈடுசெய்யலாம். மின்னழுத்தம் மட்டும் கொடுக் கப்படும்பொழுது சுழல்தட்டு,சுற்றாமல் இருந்தால், அளவிசரியாக ஈடு செய்யப்பட்டது என்பது பொருள். ஊர்தல் பிழை. மின்னழுத்தம் மட்டும் கொடுத் தால்சுழல்தட்டு மெதுவாகத் தொடர்ச்சியாகச் சுற்றி னால், அது ஊர்தல் (creep) என்று அழைக்கப்படும். ஊர்தலை நிறுத்துவதற்கு, இரண்டு துளைகள் வட் டத்தட்டில் ஒன்றுக்கொன்று எதிர்ப்புறத்தில் போடப் பட்டிருக்கும். இவை தேவையான அளவுக்குக் காந் தப்புலங்களைத் தடை செய்வதால், சுழல் தட்டுத் துளை ஒரு முறை எருதுக் குளம்புக் காந்தத்தின் ஒரு துருவத்தின் கீழ் வரும்பொழுது சுழற்சி முழுதுமாக நின்றுவிடும். ஆற்றல் அளவி சரிசெய்கை முறைகள். வரைறுக்கப் பட்டுள்ள பிழை எல்லைக்குள் ஆற்றல் அளவி சரி யான அளவுகளைத் (precise measurements) தருவதற் குச் சில சரிசெய்கைகள் பயன்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ள அவை தொடக்கத் தாழ் மின்சுமை சரிசெய்கை. முதலில் வட்டத் தட்டிலுள்ள துளைகள் மின்காந்தங்களின் கீழ் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வரையளவு மின் அழுத்தத்தை மின் அழுத்தச் சுருளில் கொடுக்க வேண்டும். மின்னோட்டச் சுரு ளில் மின்னோட்டம் செலுத்தாமல். குறைந்த மின் சுமையில் வட்டத்தட்டுச் சுழலாமல் இருக்குமாறு சரி செய்ய வேண்டும். இது அளவி இயங்கத் தொடங் கும்போது தாழ்மின் சுமையில் ஏற்படும் பிழையைக் குறைக்கும். சரிசெய்கை. ஒற்றைத் திறன்கூற்றில் முழுச்சுமை மின் ஆற்றல் அளவிக்கு வரையறுக்கப்பட்ட முழுச் சுமைக்குரிய மின் அழுத்தத்தையும் மின்னோட்டத் தையும் ஒற்றைத் திறன்கூறில் (u.p.f) செலுத்தி, வட்டத்தட்டு சரியான சுழற்சி வேகத்தில் சுற்றுவ தற்கு நிறுத்தக் காந்தத்தின் நிலையை முன்னும் பின்னும் வட்டத்தட்டு சரியான வேகத்தில் சுழலும் வரை இதைச்சரிசெய்ய வேண்டும். பிந்தல் சரிசெய்கை. மின்னழுத்தச் சுருளுக்கு வரை யளவு மின் அழுத்தத்தைக் கொடுத்து வரையளவு மின்னோட்டத்தைப் 0.5 பிந்தும் திறன்கூறில் வேண்டும். மின்னோட்டச் சுருளுக்குச் செலுத்த வட்டத்தட்டு சரியான வேகத்தில் சுழலும் வரை பிந்தல் சரிசெய்கை அமைப்பை மாற்ற வேண்டும். தாழ்சுமை சரிசெய்கை. வரையறுக்கப்பட்ட மின் அழுத்தம் வரையறுக்கப்பட்ட மின்சுமையில் 20% அளவு மின்னோட்டத்தையும் ஆற்றல் அளவியில் ஒற்றைத் திறன் கூறில் செலுத்தி ஆற்றல் அளவியின் வட்டத்தட்டு, சரியான வேகத்தில் சுற்றுகிறதா என் பதைப் பார்க்க வேண்டும். இதைச் சரிசெய்யத் தாழ்சுமை சரிசெய்கை அமைப்பைத் தேவைக்கேற்ப மாற்ற வேண்டும். ஊர்தல் சரிசெய்கை. வரையறுக்கப்பட்டுள்ள மின் அழுத்தத்தில் 110 விழுக்காடு மின் அழுத்தத்தை மின் அழுத்தச் சுருளில் கொடுக்க வேண்டும். ஆனால் மின் னோட்டச் சுருளில் மின்னோட்டத்தைச் செலுத்தக் கூடாது. மேற்கூறிய நிலையில் தாழ்சுமை சரிசெய்கை தக்கபடிச் சரிசெய்யப்பட்டிருந்தால் ஆற்றல் அளவி ஊராமல் இருக்கும். ந. சுப்பிரமணியன் நூலோதி 1.சுப்பிரமணியன், ஆர்.கே., மின்அளவைக் கருவி கள், முதற்பதிப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975.