314 ஆற்றல், இயற்கை வளிம
314 ஆற்றல், இயற்கை வளிம மிகவும் பரவலாக நடைமுறையில் ஏற்றுக் கொள் ளப்படும் கருத்து கரிமச்சேர்மக் கருத்தாகும். அழி வுறும் தாவரப் பொருளின் விளைபொருளாக மீத் தேன் கிடைக்கின்றது. தேங்கிய நீர் உள்ள சில பகுதிகளில் சதுப்பு நில வளிமமாக மீத்தேன் காணப் படுகின்றது. பல மில்லியன் ஆண்டுகளாகத் தாவரங் கள் மற்றும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகள் மழை யினால் ஏரிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒன்று சேர்ந்தவை சேற்றினாலும் கல்லினாலும் மூடப்பட்ட வென்று அறிவியலார் கருதுகின்றனர். சேறும் கல் லும் இறுதியாகக் கல்லாக்கப்பட்டன என்றும், கரி மப் பொருளானது வெப்பத்தினாலும் அழுத்தத்தி னாலும் பாக்டீரியாக்களாலும், கதிரியக்கத்தினாலும் பல்வேறுபட்ட ஹைட்ரோக் கார்பன்களாக ஆக்கம் பெற்றன என்றும் கருதுகின்றனர். மணல் துகள்களி லும் புரைமிக்க பாறைகளுக்கு (porous rocks) இடைப்பட்ட மிகச்சிறிய இடைவெளிகளிலும் ஹைட் ரோச்கார்பன்கள் அகப்பட்டதால் அவை இயற்கை வளிமமாகவும் பெட்ரோலியமாகவும் மாறின் றும் கருதுகின்றனர். அவ்வாறு ஆக்கப்பட்ட இயற்கை வளிமம் பாறையின் வழியாக வெளிப்பட்டுத் தரையை வந்தடைந்து வளிமண்டலத்திற்குத் தப்பிச் சென்றது. சிலபகுதிகளில் ஹைட்ரோக் கார்பன்கள் அடங்கிய மணலும் புரைமிக்க பாறையும் வளிமம் வெளியே செல்லவிடாத பாறையால் மூடப்பட்டு வேறுபட்ட அளவுடைய அழுத்தத்தில் பெரும் இயற் கை வளிமத் தேக்கங்கள் உண்டாவதற்குக் காரண மாய் அமைந்தன. என் தொடக்கக்கால வரலாறு. 2000 ஆண்டுகட்கு முன் னர் ஆழமில்லாத கிணறுகளில், மூங்கில் கொம்பு களைக் குழாய்களாகப் பயன்படுத்தி இயற்கை வளி மத்தை நில மேல்மட்டத்திற்குக் கொண்டு வந்து அதை எரித்து அதனால் தட்டுப்போன்ற கொதிகலன் களில் (boilers) அல்லது வாணலிகளில் கடல்நீரைக் காய்ச்சி ஆவியாக்கி அதிலிருந்து உப்பைச் சீனநாட்டி னர் பெற்றனர் என்று கூறப்படுகின்றது. ஏறத்தாழ 1802ஆம் ஆண்டு மேற்கு நாட்டில் இத்தாலியில் ஜெனோவாவில் (Genoa) தெரு விளக்குகளுக்காக வணிக முறையில் இயற்கை வளிமம் பயன்படுத்தப் பட்டது. அமெரிக்க நாட்டில் நியூயார்க், பென்சில் வானியா, ஓஹையோ, மேற்கு வர்ஜீனியா ஆகிய பகுதிகளில் எரியும் ஊற்றுகள் காணப்படுகின்றன என்ற செய்தி இயற்கை வளிமப் படுகைகள் கண் டெடுப்பதற்கு ஆதாரமாய் அமைந்தது. 1626 ஆம் ஆண்டிலேயே வட மேற்கு நியூயார்க்கில் இருந்த இந்தியர்களைக் கண்டு சமயப்பணி ஆற்ற வந்த ஃபிரான்சு நாட்டவர்கள் ஆழமற்ற நீர் நிலைகளில் வெளியெழும்பும் வளிமங்களைத் தீப்பற்றவைக்க இயலும் எனத் தங்களது குறிப்பில் எழுதி வைத்துள் ளனர். ஈரியென்னும் ஏரியின் கரையோரங்களிலும் அவ்வேரியில் செல்லும் நீரோடைகளிலும் இயற்கை இருப்பதாகத் வளிமம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஹையோ ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் கலிபோர்னி யாவில் பசுபிக்கடலின் கரையோரங்களிலும் எரியும் ஊற்றுக்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 1775 சார்ல்ஸ்ட்டன் ஆம் ஆண்டு மேற்கு வர்ஜீனியாவில் அருகிலுள்ள கனாவா பள்ளத்தாக்கில் இருந்த ஓர் எரியும் ஊற்றைக் கண்டு படைப்பெருந்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) கவரப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டிற்கு முதலில் குடியேற்றம் செய்தவர்கள் நீரைப் பெறு வதற்காகக் கிணறுவெட்டியபோது இயற்கை வளிமம் சிறிய அளவில் காணப்பட்டதாகத் தெரிவித்தனர். அமெரிக்க நாட்டில் இயற்கை வளிமத் தொழிற் சாலையின் பிறப்பிடமாக நியூயார்க்கிலுள்ள ஃபிரிட் டோனியா அமைந்தது. 1825 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ட் என்பவர் ஒரு கிணற்றினைத் தோண்டி அதிலிருந்து போதிய அளவில் இயற்கை வளிமத்தைப் பெற்று அவரது இரு கிடங்குகளையும் இரண்டு கடைகளையும் ஓர் அரைவை ஆலையையும் ஒளியூட் டுவதற்காகப் பயன்படுத்தினார் என்றும் கூறப்படு கின்றது. அவர் உள்ளீடற்ற மரத் திம்மைகளைக் குழாயாகப் பயன்படுத்தினார். பகற்பொழுதில் அக் கிணற்றிலிருந்து போதிய அளவில் மேலெழும்பி வந்த வளிமம் பொழுது சாய்ந்ததும் வளிம விளக்குகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. 1829 ஆம் ஆண்டு ஈரி ஏரியின் ஓரமாக இயற்கை வளிமத்தைப் பயன்படுத்தி முதல் கலங்கரைவிளக்கத்தைக் கட்டு வதற்கு ஹார்ட் காரணமாயிருந்தார். இக்கலங்கரை விளக்கத்தில் இரண்டு அடுக்குகளில் 13 வளிம விளக்குகள் ஒளிக்கதிர் எதிர்பலிப்பிகளுடன் (reflec tors) அமைந்து 1859 ஆம் ஆண்டுவரை பயன்பட் டன. அமெரிக்க நாட்டில் 1858 ஆம் ஆண்டு முதல் இயற்கை வளிம நிறுவனம் (Natural Gas Company) அமைக்கப்பட்டது. அதன் பெயர் ஃபிரிட்டோனியா வளிமவிளக்கு நிறுவனம் என்பதாகும். வேகமாக க இயற்கை வளிமத்தின் பயன்பாடு விரிவடைந்தது. ஒரு தலைமுறையில் அதாவது 1940 முதல் 1970 க்குள் இயற்கை வளிமத்தினை ஓர் ஆண்டிற்குப் பயன்படுத்தும் அளவு 730 விழுக்காடாக உயர்ந்தது. இந்தத் தேவையினை நிறைவு செய்வதற் காக இந்த வளிமத்தைக் கையாளும் தொழிற்சாலை அந்த முப்பது ஆண்டுகளில் 313 டிரில்லியன் பருமன் அடி இயற்கை வளிமத்தை உண்டாக்கியது. பயன் படுத்தும் அளவு மிகவும் கூடியதால் இவ்வளிம வயலில் உள்ள வளிமம் தீரும் நிலையை அடைய லாயிற்று. அடிப்படை வேதியியல் மூலப்பொருள் களுக்கு மேன்மையான இருப்பிடமாக இயற்கை வளிமம் உள்ளதால் இவ்வியற்கை வளிமத்திற்கு மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்கு வித்து அதன் வழியாக இவ்வியற்கை வளிமம் வேதி