உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, இயற்கை வளிம்‌ 317

மைவுகள் (drilling rigs) பயன்படுத்தப்பட்டன. இத் துளையிடும் கூரமைவுகள் கம்பிவடக் கருவிகளைக் (cable tools) கொண்டே பயன்படுத்தப்பட்டன. இக் கம்பி வடக் கருவி கூரிய முனையைக் கொண்ட பளு வான எஃகு உருளையால் ஆக்கப்பட்டதாகும். இல் வுருளை ரயின் ஒரு முனை எஃகு வடத்தினால் பிணைக் கப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ளது. உருளையின் அடிப்புறமுள்ள கூரிய கடினமான துண்டு தொடர்ந்து கீழே தாக்குவதால் பாறை துளையிடப்படுகிறது. கம்பி வடத்தையும் துளையிடும் கூரிய முனையைக் கொண்ட பளுவான எஃகு உருளையையும், உயர்த்தியும் தாழ்த்தியும் கொடுப்பதற்காக மேலும் கீழும் நகரக் கூடிய நெம்புகோல் அல்லது அசைவை வழங்கும் கையுள்ள எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பல பகுதிகளிலும் வேக மாகவும் ஆழமாகவும் துளையிடுவதற்காகக் கம்பி வடக் கருவிகளுக்குப் பதிலாக சுழல் கூரமைவுகள் (rotary rigs) பயன்படுத்தப்படுகின்றன. சுழல் கூரமைவைத் தூக்குவதற்கான சுமை தூக்கு எந்திரம் (derrick ) 28 முதல் 58 மீ. வரை உயரம் உடையதாக இருக்கும் (காண்க, படம் 2). சுழல் கூரமைவை சுழற்றுவதற்காக அதனுடைய எந்திரம் வட்ட வடிவத் தட்டை மேடையைத் திருப்புகின்றது. இம் மேடை குழாயுடனும், அதனைச்சேர்ந்த துளையிடு வதற்குப் பயன்படும் கயிற்றுடனும் இணைக்கப் பட்டுள்ளது. துளையிடுவதற்குப் பயன்படும் கயிற் றின் ஒரு முனையில் உள்ள துளைமுளை பாறையின் வழியே துளையிடுகின்றது. துளைக்கப்படும் துளை யின் விட்டம் 10 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை இருக்கும். வழக்கமான துளையின் விட்ட அளவுகள் 12.5 முதல் 22 செ.மீ. வரை இருக்கும். சுழல் துளை முளையிலிருந்து வெளிப்படும் பாறையின் சிதைவுகள் துளையின் குழாய் வழியாக உட்புறமாகச் செலுத்தப் படும் தனித்தன்மையுடைய சேற்றுடன் சேற்றுடன் சேர்ந்து மேலே கொண்டு வரப்படுகின்றன. கிணற்றின் மேல் கொண்டுவரப்பட்ட சேற்றினை ஒரு பள்ளத்தில் வடித்தெடுக்கின்றனர். துண்டாக்கப்பட்ட பாறைகள் அடியில் சென்று தங்கி விடுகின்றன. தூய்மைப் படுத்தப்பட்ட சேறு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப் படுகின்றது. பாயும் சேறு துளையிடும் முளையின் உராய்வைக் குறைக்கப் பயன்படுகின்றது. குறிப்பிட்ட ஒவ்வொரு வகையான பாறைக்கும் ஏற்றவாறு துளைப்பிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. துளையிடும் துண்டிற்கு மேலமைந்துள்ள மிகப் பளு வான குழாயின் எடையின் அழுத்தம் காரணமாக துளைமுனை பாறையின் வழியாக அதனுள் செலுத் தப்படுகின்றது. இவற்றின் மொத்த எடை வானது 100 டன்களுக்கும் மேலானதாகும். பாறை யின் கடினத் தன்மையைச் சார்ந்து துளையிடும் கருவி ஒரு மணித்துளிக்கு 50 முதல் 300 சுழல்களைக் கொண்டிருக்கும். முடிந்த ஆழம்வரை துளைப்பி அள ஆற்றல், இயற்கை வளிம 317 துளையிட்ட பின்னர் அவ்வாழத்தின் காரணமாகக் குழாயுடன் இணைக்கப்பட்ட துளையிடுவதற்காகப் பயன்படும் கயிறும் நீட்டப் பெறுவதால், அவ்வாழம் வரை குழாயையும் கிணற்றிற்குள் நீட்ட வேண்டும். துளைப்பிக் குழாய் 10 மீ நிளம் உடையதாய் இருக்கும். 10 மீ ஆழம் வரை துளையிடப்பட்டதும் துளையிடுவதை நிறுத்தி இக்கயிற்றுடன் மற்றுமொரு குழாயின் பகுதி இணைக்கப்படுகின்றது. இயற்கை வளிமப் படிவினை மூடியுள்ள பாறையின் கடைசி அடுக்கைத் துளைமுனை துளைத்து உட்செல்லும் போது வளிமம் பேராற்றல் மிக்க விசையுடன் கட்ட விழ்த்து விடப்படுகின்றது. தேக்கத்தில் வளிமம் இருக்கும்போது அவ்வளிமத்தின் அழுத்தம் மிக அதிக அளவான 720 கி.கி/சதுர செ.மீ வரை இருக்கும். எனவே, துளையிடும் பணியைச் செய்யும் பணியாட் கள் வளிமக் கிணற்றையோ (gas well) வளிம எண் ணெய்க் கிணற்றையோ (gas oil well) வெற்றி கர மாக முடித்துவிட்டதற்கு அடையாளங்கள் கிடைத்த வுடனே எச்சரிக்கையுடன் இருப்பார்கள். பற்ற வளிமத்தைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரு வதற்காகத் துளையிடும் குழாயைச் சூழ்ந்து உயர் வலிவிக் குழாய் மேலுறையாக (casing) மூடப்பட் டிருக்கும். இக்குழாய் 50 செ.மீ. விட்டம் உடைய தாக ஒவ்வொரு குழாயும் ஒன்றுடன் ஒன்று வைத்துப் பிணைக்கப்பட்டோ வேறுமுறையில் இணைக்கப்பட்டோ இருக்கும். இந்த மேலுறையின் அடிப்பகுதி கிமென்ட்டினால் தாங்கப்பட்டுள்ளது. மேலுறையின் தலைப்பகுதியில் பணியாளர்கள் கையாளுவதற்கான முதன்மைக் கட்டுப்பாட்டிதழ் (master control valve) ஒன்று பொருத்தப்பட்டுள் ளது. வளிமப்பாய்வினை வேகமாக மூடுவதற்கு இந்தக் கட்டுப்பாட்டிதழ் பயன்படுகின்றது. இந்தக் கட்டுப்பாட்டிதழ் கிருத்துமஸ் மரம் என்றழைக்கப் படும் குழாய்களாலும் இதழ்களாலும் ஆன பூட்ட மைப்பு (assembly) உள்ளது. வளிமம் திரட்டும் வழி களுக்கு இக்குழாய்களின் வழியாக வளிமம் கொண்டு செல்லப்படுகின்றது. இக்குழாய்கள் பல கிணறு களிலிருந்து வெளிப்படும் இயற்கை வளிமத்தை நக ரின் குறுக்காகச் செல்லும் குழாய் வழிகளுடன் இணைக்க எடுத்துச் சென்று வளிமத்தின் நெடுந் தொலைவுச் செலுத்தத்திற்கு வகை செய்யப்படுகின் றது. கிணற்றினை முடித்த பின்னர் மேலுறைகளி லிருந்து துளையிடும் குழாயும் கூரமைவும் இழுக்கப் பட்டு மற்ற துளையிடவேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. க இயற்கை வளிமத்தேக்க இருப்பு. அமெரிக்க நாட் டில் உள்ள மாநிலங்களில் மதிப்பிடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்ட இயற்கை வளிம மொத்தத் தேக்க இருப்பு வளங்களின் அளவுகள் அட்டவணை 2 இல் கொடுக்கப்பட்டுள்ளன. இயற்கை வளிமத்தைத்