ஆற்றல், இயற்கை வளிம 327
இயற்கை வளிமத் தேவை அதிவேக வீதத்தில் உயரலாயிற்று. இதன் விளைவாக தற்போது பேரளவில் உண்டாக்கப்பட்ட இயற்கை வளிமத்தை மீண்டும் அவ்வளிமக் கிணற்றிற்கே செலுத்துவதைத் தவிர்த்து இக்கூடுதல் தேவைகளை நிறைவு செய்வ தற்குப் பயன்படுத்தலாம். ஆசியாவிலும், ஆப்பிரிக்கா விலும் இயற்கை வளிம உற்பத்தியின் இலாபகரமான நிலையினை அடையலாம். உலகில் உள்ள மொத்தத் தேங்கிருப்பு ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் அளவு அட்டவணை 7 இல் விழுக்காட்டில் காட்டப்பெற்றுள்ளது. மதிப்பிடப் பட்ட இயற்கை வளிம வளங்களில் காற்பங்கிற்கும் மேலாகச் சோவியத்து நாட்டில் கிடைக்கின்றது. பாதிக்கும் மேற்பட்ட இயற்கை வளிம வளங்கள் சோவியத் நாடு, அமெரிக்கா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் கிடைக்கின்றன. மேற்கூறப்பட்ட ஆற்றல், இயற்கை வளிம 327 3 நாடுகளுடன் அல்ஜீரியா, நெதர்லாந்து குவைத், சவுதி அரேபியா, கனடா ஆகியன சேர்ந்த 8. நாடுகளில் கிடைக்கும் மொத்த இயற்கை வளிம வளங்களில் பங்கிற்கும் மேலாகக் கிடைக்கின்றது. அமெரிக்க நாட்டு இயற்கை வளிமத்தின் பிற்காலப் பயன்பாடு. வளிம உற்பத்திப் பகுதிகளில் பயன்படுத்தும் வளிம அளவினுடன் சேர்த்து அமெரிக்காவில் பயன் படுத்தும் மொத்த வளிம் அளவு 1974ஆம் ஆண்டின் அளவான 22.8 டிரில்லியன் பருமன் அடி. (1 டிரில் லியன் பருமன் அடி = நூறாயிரம் கோடி பருமன் அடி) அளவிலிருந்து 1985 ஆம் ஆண்டில் 20.6டிரில் லியன் பருமன் அடி அளவிற்குக் குறையலாயிற்று. இந்த 11 ஆண்டுக் காலத்தில் இயற்கை வளிமப் பயன்பாட்டின் ஆண்டுக்குறைவுவீதம் 0.9% ஆயிற்று. இயற்கை வளிமப் பயன்பாட்டில் இந்த 11 ஆண்டுக் அட்டவணை 7 இயற்கை வளிம ஆக்க நாடுகளின் மொத்தக்கையிருப்பு வளங்களின் விழுக்காடு எண் நாடு மில்லியன பரு மீட்டர்கள் மொத்தத்தில் லிழுக்காடு (1) (2) (3) (4) I சோவியத் நாடு 15000 29.8 2 அமெரிக்கா 7895 15.6 3 ஈரான் 5700 11.3 அல்ஜீரியா 3000 5.9 5 நெதர்லாந்து 2350 4.6 6 குவெய்த் 1661 3.3 7 சவுதி அரேபியா 1600 3.2 8 கனடா 1570 3.1 9 நைஜீரியா 1120 2.2 10 இங்கிலாந்து 1100 2.2 11 மற்ற நாடுகள் 1066 2.1 12 லிபியா 830 1.6 13 வெனிசுலா 720 1.4 14 ஆஸ்த்திரேலியா 700 1.4 15 பாரெய்ன் 690 1,4 16 ஈராக் 600 1.2 17 பாகிஸ்த்தான் 550 1.1 18 19 ஜெர்மனிக் கூட்டுக் குடியரசு மெக்சிகோ 390 1 க்கும் கீழ் 326 20 ஒன்றிய அராபிய எமிரேட்டுகள் 316 31