உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 ஆற்றல்‌, காற்று

$62 ஆற்றல், காற்று (fluid சேர்த்து 1019செ. வெப்ப நிலை உண்டாக்கப்படு கின்றது. நீர்க்குழாய் அமைந்த சுவரால் தொதிகலன் கட்டப்பட்டுள்ளது. கொதிகலன் வழயாகச் சென்ற பின்னர் இந்த வளிமங்கள் சிக்கனப்படுத்தும் பிரிவு (economizer section) வழியாகச் சென்று அதன் பின்னர் அவற்றிலுள்ள துகள்களை நீக்குவதற் காக, நிலை மின்படிவி வழியாகச் செல்கின்றன. நாளுக்கு 1000 டன்கள் கொள்ளளவுடைய ஒரு நீர்க் குழாய்ச் சுவர் உள்ள எரிசாம்பலாக்கி ஒரு மணிக்கு 300000 பவுண்டுகள் நீராவியினை உண்டாக்குகின்றது பாய்மப் படுகைச்சுழலி அமைப்புக்கள் bed turbine systems) பாய்மப் படுகை எரிக்கும் அமைப்பில் (fuid bed combustor) திண்மக் கழிவு களை எரித்தல், இதனால் உண்டாக்கப்பட்ட வளிமங்களை வளிமச் சுழலி (gas turbine) வழியாக விரிவாக்கம் செய்தல், ஆகியவை அடங்கிய அமைப் புகள் பலவித வேறுபாடுகளைக் கொண்டவை யாய்க் கிடைக்கின்றன. அத்தகைய அமைப்பு படத் தில் காட்டப்பட்டுள்ளது. உடைக்கப்பட்டும், காற் றினால் வகைப்படுத்தப்பட்டும் உள்ள கழிவுகளுடன் {shredded and air classified waste) நீர்மக் கழிவு களைச் (liquid waste) சேர்த்துப் பாய்மப்படுகை எரிப்பு அமைப்பில் (fluidized bed combustor) எரித்து அதனால் கிடைக்கும் வெப்ப வளிம் விளை பொருள்கள் (hot products of combustion) வளிமச் சுழலியில் (gas turbine) விரிவடையச் செய்யப்படு கின்றன. சுழலி அமுக்கி (turbine compressor) எரிப் பதற்குத் தேவையான அழுத்தப்பட்ட காற்றினை (pressurized air) வழங்குகின்றது. மேலும் இவ் வமுக்கியால் வழங்கும் அழுத்தப்பட்டகாற்றின் உதவி யால் முன்னரே உடைக்கப்பட்ட கழிவானது (shredded waste) சுழல் காற்றுத் தடுப்பு ஊட்ட இதழ்களின் (rotary air lock feeder valves) அடிப் புறத்திலிருந்து, எரிப்பிக்கு (combustor) கொண்டு செல்லப்படுகின்றது. வளிமச் சுழலியில் வெப்ப வளி மத்தைச் செலுத்துவதற்கு முன்னர் அவ்வளிமத்தி லுள்ள பறந்து செல்லும் சாம்பலை (fly ash) நீக்கு வதற்கு, மூன்று கட்டங்களில் சுழல்காற்றுகள் (three stages of cyclones) பயன்படுத்தப்படு கின்றன. கூடுதலாக மின்சாரத்தை ஆக்கத் தேவை யான நீராவியினை உண்டாக்க ஒரு கழிவு வெப்பக் கொதிகலன் (waste heat boiler) பயன்படுத்தப்படு கினறது. முதன்மைக் கட்டுப்பாட்டுக் கண்ணி (primary control loop) சுழலி வெப்பநிலைகளுக்கு (turbine temperatures) ஏற்றாற்போல எரிபொருள் ஊட்ட வீதத்தினை (fuel feed rate) கட்டுப்படுத்து கின்றது. நீர்மக் கழிவு எரிப்பு தேவையற்றதாகும். எனினும் நீர்மக் கழிவை எரித்தல் தேவையாகும் போது இதற்கான கூடுதல் சாதனங்கள் கிடைக் கின்றன ஏனெனில் அமைப்பில் நீரினைச் சேர்க்கும் போது மிகுந்த அளவில் திண்மக் கழிவு கொள்ளப் பட்டு அதே அளவுள்ள சாதனத்தில் (same size of equipment)வழக்கமான நுழைவழிவெப்பநிலையினும் குறைந்த வெப்ப நிலையில் (lower than mormai inlet temperature), மிகுந்த அளவில் மின்சாரம் உண்டாக்கப்படுகின்றது, நீரினைச் சேர்க்கும்போது அமைப்பின் இயங்கு திறமை (system efficiency) ஓரளவிற்குக் குறைக்கப்படுகின்றது. நீரினை ஆவி யாக்குவதற்குச் செலவு செய்யப்படும் ஆற்றல் இந்த நீராவி வளிமச் சுழலியில் (gas turbine) விரி வடையும்போது ஒரு பகுதி மீட்கப்படுகின்றது. எரிவிக்கும் எரிபொருளின் வகைக்கு ஏற்றாற்போன் றும் (நீர் 6u% அளவில்) நீராவிக் கலவைக்கு ஏற் றாற் போன்றும், ஆக்கப்பெறும் மின்சாரத்திற்கு ஏற்றவாறும், கையாளத்தக்கவாறும் இவ்வமைப்பு வடிவமைக்கப்படுகின்றது. ஆற்றல், காற்று ஜெ.சு. ஆற்றல் வகைகளில் காற்றின் ஆற்றல் (wind energy) ஒன்றாகும். காற்று விசை ஆலைகள் (wind mills) காற்றடிக்கும்போது கிடைக்கும் இயங்கு ஆற்றலைக் கொண்டு, எந்திரப் பொறிகளைச் சுழலச் செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காற்று ஆற்றலைப் பயன்படுத்தி, நீர் இறைத்தல், மாவு அரைத்தல், பாய்மரக் கப்பல்களைச் செலுத்து தல் போன்ற பணிகளைச் செய்துள்ளனர். அக்காலத் தில் வழக்கில் உள்ள ஆற்றல் முறைகள் மலிவாகவும் காரணத்தால், அதிகமாகவும் கிடைத்த காற்று ஆற்றல் வழிமுறை புறக்கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது எஞ்சியுள்ள எரிபொருள்கள் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வெறுமையாகும் நிலையினை அதிவிரைவில் அடையாமலிருப்பதற்காக, காற்று ஆற்றல் துறைக்குத் தற்போது மீண்டும் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகள். சூரிய வெப்பம் உலகெங்கிலும் உண்டாக்கும் காற்றோட்டத்திலிருந்து நூறு கோடி மெகாவாட் ஆற்றல் கிடைக்கும் என்றும், காற்று விசை எந்திரங்களைக் கொண்டு இங்ஙனம் கிடைக்கும் காற்று ஆற்றலிருந்து 50% மின்திறன் ஆக்கம் செய்தாலும், உலக ஆற்றல் தேவையில் ஐம் பதில் ஒரு பங்குதான் நிறைவு செய்ய முடியும் என்றும் கணக்கிட்டுள்ளனர். எனினும் வளர்ந்து வரும் தேவையினை ஓரளவுக்கு ஈடு செய்யும் வகை யில் இவற்றினைச் செயல்படுத்துவதிலுள்ள சிறந்த தொழில் நுட்ப முறைகள், முதலீட்டுச் செலவு. ஆக்கச் செலவு முதலியவற்றைக் குறைப்பதற் கான வழிமுறைகளில் இன்றைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நெதர்லாந்து, டென்