உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 ஆற்றல்‌, சமநிலை

364 ஆற்றல், சமநிலை கூட்டு முயற்சி. பல இடங்களில் சிறுசிறு காற்று விசை ஆலைகளை அமைப்பதைவிட, ஒரே இடத்தில் பல எந்திரங்களை அமைத்துக் கூட்டாக இயக்கி ஆற்றலைப் பெருக்குவதே சிறந்தது. ஆலைகளைக் காற்றிலிருந்து மின்சாரம். எங்கெல்லாம் காற்றோட் டத்தின் சராசரித் திசைவேகம் பேரளவில் நிலவுகி றதோ அங்கெல்லாம் காற்றாற்றலை மின்னாற்றலாக மாற்றி, மின்தேக்கக்கலங்களுடன் பயன்படுத்தலாம். தனியாகக் காற்றுவிசை கொண்டு மின்னாற்றலைப் பெறுவதைவிட, மற்ற மின் ஆக்க நிலையங்களோடு இணைத்துச் செயல்படுவது சிறந் தது. முதன் முதலில், நம் நாட்டில் பெங்களூரிலுள்ள தேசிய வான் பயணத் துறை ஆய்வு நிலையம், காற் றிலிருந்து மின் ஆக்கம் செய்யக்கூடிய மின்னாக்கி யைத் தயாரித்தது. 20 முதல் 30 வரை வோல்ட் - ஆம் பியர் மணிகள் அளவு ஆற்றலை இது உற்பத்தி செய் தது. பாரத மிகுமின் நிறுவனம், 1 கிலோவாட் மின் திறன் வழங்கக்கூடிய குத்துநிலைக் காற்றுச்சுழலியைத் தயாரித்துள்ளது. காற்றுவிசை ஆலைகளின் வகைகள் காற்றுவிசை-2 (wp-2) வகை. நீர் இறைப்பதற் ருப் பயன்படுத்தப்படும் இந்த வகைக் காற்றுச் சுழலி யின் விட்டம் 4.9 மீட்டர். இச்சுழலியில் விசிறி இலை வடிவ இதழ்களின் எண்ணிக்கை 12. அவை இரும்புத் தகட்டினால் வட்ட ஆக்கப்பட்டு, வடிவமான சுழலிச் சக்கரத்தின் மேல் பொருத்தப்படுகின்றன. காற்றின் வேகம் உச்ச வரம்புக்கு மேற்பட்டாலும், எந்திரத்தின் உறுப்புகள் அழிவடையாதிருக்கப் பாதுகாப்புகள் உள்ளன. தன பல இதழ்வகை விசிறி ஆலை. இந்த வகை நீரேற் றும் காற்றுச் சுழலியின் விட்டம் 5 மீட்டர். சுழலி மெல்லிய உலோகத்திலான 12 விசிறி இலை இதழ்களினால் ஆனது. இவை வட்ட வடிவமான சுழலிச் சக்கரத் தொகுப்பின் மேல் பொருத்தப்பட் டுள்ளன. இவற்றின் மூழ்கு தண்டு அல்லது உலக்கை கட்டையாலானது. அதன் ஊடாட்ட எக்கியின் உருளை (reciprocating pump cylinder) பாலிவீனைல் குளோரைடினால் ஆனது. பாய், கித்தான் வகை (sall type) விசை ஆலை. இதன் சுழலியின் விட்டம் 10 மீட்டர். இதில் பாய், கித்தான்கள் உள்ளன. இக் கித்தான்கள் எஃகுக் குழாய்க் கழிகளின் மேல் நைலான் கயிறுகளினால் பிணைக்கப்பட்டு இருக்கும். மிகக் குறைந்த காற்றின் வேகத்தினைப் பயன்படுத்தும் பொருட்டு விட்டமுடைய சுழலிகளைப் பயன்படுத்த வேண்டி யுள்ளது. விசை ஆலை, பயன்பாட்டில் இல்லாத போது கித்தான்களைச் சுற்றி வைத்துக் கொள்ள லாம். காற்றோட்டத் திசைவேகம் மணிக்கு 12 கி.மீ. அளவாக இருக்கும்பொழுது 9 மீட்டர் உயரத்தில் உயர் 9000 லிட்டர் தண்ணீரை ஒரு மணி நேரத்தில் இது இறைக்கும். சென்னையிலுள்ள முருகப்பச் செட்டியார் ஆய்வு மையம், தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதியில் அணிலா (anila), போகில் (poghil) என இருவகை காற்றுவிசை ஆலைகளை நிறுவியுள்ளது. அணிலா ஒரே திசையில் இயங்கக்கூடியது. மற்றது எல்லாத் திசையிலும் இயங்கக்கூடியது. இரண்டு வகை ஆலை களும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டவை. உள்ளூர் மக் களாலேயே பராமரிக்கப்பட்டும் வருகின்றன. உள்ளூரில் இந்தியாவில் இன்னும் 2 முதல் 3 மில்லியன் கிணறுகளுக்கு மின்சாரம் அளிக்கப்படவில்லை. இவற்றில் சுமார் 25 விழுக்காடு காற்றோட்டப் பகுதிகளில் அமைத்துள்ளன. குறிப்பாக வேளாண்மை வீட்டுப் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நீர் இறைக் கும் எக்கிகளைக் காற்றாற்றலைக் கொண்டு இயக்க லாம். ஏனெனில், இத்தகைய நீரேற்றத்திற்குத் தொடர்ச்சியான காற்றோட்டம் தேவையில்லை. அவ்வப்போது வீசும் வன்காற்று (gust), இடை விட்ட காற்று வீச்சு இருந்தாலே போதுமானது. மேலும், நெடுந்தொலை ஊர்களுக்கு இந்த மின் அமைப்பின் மூலம் எளிதில் ஆற்றலை வழங்க முடியும். கி.பி. இரண்டாயிரத்தில் நம் ஆற்றல் ஆக்கத்தில் கணிசமான பங்கு காற்று ஆற்றலாக இருக்கும். இத னால், எதிர்கால ஆற்றல் பற்றாக்குறையினை ஓரள வுக்குச் சரிக்கட்டலாம் என உறுதி கொண்டு, காற் றாற்றல் துறை வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும். எல்.கே. இராமலிங்கம் ஆற்றல், சமநிலை தாவரங்கள் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிர் கட்கும் உணவைக் கொடுக்கின்றன. இவை சூரிய ஆற்றலை உறிஞ்சி உணவுப் பொருள்களைத் தயாரிக் கின்றன. ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்னும் புறநிலை வேதி முறை தன் அடிப்படையாக விளங்கு கின்றது. தாவரங்கள் பச்சையத்தின் (chiorophyll) மூலம் நீர், கார்பன்டை ஆக்சைடு (CO) இவற்றைக் கொண்டு சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்று கின்றன. இவ்வினைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர் சூரிய ஒளி கார்பன்டை ஆக்சைடு + நீர் மாவுச்சத்து ஆக்சிஜன் பொதுவாக, ஒளிச்சேர்க்கை, பச்சையம் உள்ள இலை, தண்டு, காய்களின் மேல்தோல் ஆகியவற்றில் நடக் கின்றது. உலகத்திலுள்ள மொத்த ஒளிச் சேர்க்கை யின் பரப்பளவு (photosynthetic surface) 510×10" சதுர கிலோ மீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.