உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 ஆற்றல்‌. சூரிய

374 ஆற்றல் சூரிய ஆற்றல் சுமையினை (energy load) நிறைவு செய்யத் குளிர்விக்கும் துணை உலை இயக்கப்படுகின்றது. சுழற்சி (cooling cycle) இயக்கப்படும்போது, அவ் வியக்கத்தால் உண்டாக்கப்பட்ட குளிர்ச்சி குளிர்கால வெப்பத் தேக்கத்திற்குப் பயன்படுத்தும் ஆதே தேக்க அமைப்பிற்குக் (storage system ) கொண்டு செல்வப் படுகின்றது. வெப்பமூட்டும், குளிர்விக்கும் குழாய்ச் சுருள் வழியாக வீட்டின் தேவைகளுக்கு ஏற்றாற் போன்று தேக்க அமைப்பிலிருந்து குளிர்ச்சி எடுக்கப் படுகின்றது. இந்த வகையான இயக்கத்தில் குழாய்ச் சுருளினையுடைய மூவழி இதழ்கள் தேக்க அமைப் பிற்குத் திறந்தும், குளிர்விக்கும் சுழற்சியின் நேரடி யான குளிர்விப்பிற்கு மூடியும் இயங்குகின்றன. தேக்க அமைப்பு தேவையான குளிர்விப்பினை வழங்க இயலாமற் போகும்போது, தேக்க அமைப்பிற்கு இந்த இதழ்கள் மூடப்பட்டு, நேரடிக் குளிர்விப்பிற் காகத் திறக்கப்படுகின்றன. கோடை காலத்திற்கான இயக்க வகையில் குளிர்ந்த இரவுகளில், துணை உலையைப் பயன்படுத்தி வீடு வெப்பப்படுத்தப் படுகின்றது. பொதுக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கூறப்பட்ட அமைப்புகள் வடிவ மைக்கப்பட்டிருக்கின்றன. இறுதியான வடிவமைப் பினையோ அல்லது மிகவும் உகந்த தேவைகளைக் கொண்டதாயோ, இவை அமைந்துள்ளனவென்று கூற இயலாது. இறுதியான அமைப்பின் மைப்பு, துணை வெப்பமூட்டுவதற்காக (auxiliary heating ) எரிபொருள் (fuel) பயன்படுத்தப்படு வடிவ கின்றதா அல்லது மின்சாரம் பயன்படுத்தப்படு கின்றதா என்பதைச் சார்ந்து அமையும். வரப் போகும் அருகிய காலங்களில், மின்சார முறையில் வெப்பப்படுத்துவதற்குப் பதிலாக இயற்கை வளி மத்தையோ (natural gas) எரிபொருள் எண்ணெ யையோ (fuel oil) பயன்படுத்தலாம். நீண்ட நாள் நோக்குடன் காணும்போது சூரிய வெப்ப ஆற்றலைத் திரட்டுவதற்கான முன்னேற்றமும் வெப்பத் தேக்கத் திற்கான முன்னேற்றமும் அடையும்போது தேவைப் படும் துணை வெப்ப அளவு குறைந்துவிடும். மேலும், வெப்பத்தினைச் செலுத்தும் தொழில் நுட்பத்தில் (heat pump technology) முன்னேற்றம் காணும்போது, மின்சாரம் மிகவும் விரும்பத்தக்க தாய் இருக்கும். கட்டிடக் கலையும் கட்டுமானக் கூறுகளும். சூரிய ஆற்றல் வழியாகத் தட்பவெப்ப நிலைக் கட்டுப் பாட்டினைச் செய்யும் அமைப்புகளை வேறுபட்ட கட்டிட வடிவமைப்புக்களுடன் ஒன்று வேண்டும்.சூரிய ஆறறல் வழியாகத்தட்பவெப்பநிலைக் கட்டுப் பாட்டினைச் செய்யும் அமைப்பின் தேவை களுக்கு ஏற்றாற் போன்று புதிய கட்டிடங்களை வடிவ சேர்க்க மைக்க வேண்டும்.அதேபோன்று தற்போது இருக்கும் கட்டிடங்களில் சூரியஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாற்றங்கள் செய்வதைத் தனித்தனியாகத் தீர்மானிக்க வேண்டும். கட்டிடங்களின் தட்டை யான கூரைகளின் மீது சூரிய ஆற்றல் திரட்டிகளை நிறுவலாம். அல்லது பல்வேறுபட்ட கட்டிடங்களின் சரிவான கூரைகளில் பொருந்துமாறு இத்திரட்டி களை வடிவமைக்கலாம். திரட்டிகள் தனித்த கட் டிடத்திற்கோ பல கட்டிடங்களுக்கோ பயன்படும். முன்னர்க் குறிப்பிட்டவாறு, திரட்டி நிறுவலின் வடிவியல் அமைப்பு அதன் (geometry of the colle- ctor installation) இருப்பு அகலாங்கைச் (location latitude) சார்ந்து வேறுபடுகின்றது. தொடர்ந்து சூரிய வெளிச்சம் கிடைப்பதைச் சார்ந்து, சூரிய ஆற்றல் பொருளாதாரம் பெரும் அளவில் தர்மானிக்கப்படுகின்றது (காண்க, படம் 8). முதன் மைக் கட்டிட அமைப்பிற்கு அருகில் சூரிய ஆற்ற லைத் திரட்டும் திரட்டிகளின் வரிசையினை அமைக் கலாம். ஆனால் அவ்விடம் நிழல் படாததாய் இருக்க வேண்டும். 400 2600 -$200 3200 2300 3000 Regi 2200 முதல் 2600 வரை 2600 முதல் 2800 வரை 20 ந்தி 72800 2800 முதல் 3000 வரை 3400 படம் 8. ஓர் ஆண்டின், சூரிய ஒளிவீசும் சராசரி மணிகளின் எண்ணிக்கை சூரிய ஆற்றலைக் கோபுரத்தின்மேல் திரட்டுதல்- சூரிய ஒளி நிலைகள் (heliostats) தாமாகவே ஒழுங்குபட இயங்குகின்ற எந்திர அமைப்பினால் தட்டையான கண்ணாடிகளைத் திருப்பிச் சூரியக் கற்றையைத் தொடர்ந்து ஒரு திசையில் செலுத்தும். சூரிய ஒளி நிலைக் கருவி வரிசைத் தொடர்கள் ஒளியியல் வழி யாக ஒரு சதுரமைல் பரப்பளவும் அதற்கு மேலுமான பகுதியில் பெறும் செறிந்த சூரிய ஆற்றலை அதைப் பெறும் மையக்கருவிக்குச் (central receiver ) செலுத்து கின்றன. எடுத்துக்காட்டாகக் கூறும்போது அமெ ரிக்க ஒன்றிய நாடுகளின் தென்மேற்குப் பகுதியில் 2200