உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஆம்பர்‌

16 ஆம்பர் எலும்புமுறிவு. சாதாரணமாகக் கால்நடைகளுக்கு எலும்பு முறிவு அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு, இதன் சிகிச்சை முறை இடத்திற்கு ஏற்றாற்போல் கால், வால் மாறுபடுகின்றது. முதலியவற்றில் முறிவு ஏற்பட்டால் உடனே அடிபட்ட எலும்பு சரியாக வைத்து நான்கு முனைகளைக் கூடியவரை சீவிய மூங்கில் குச்சிகளால் புறமும் நன்றாகச் எலும்பு முனைகளுக்கு மேலும், கீழும் வைத்து எலும்புகள் அசையாமலிருக்கும்படி நன்றாகக்கட்ட வேண்டும். எலும்பு முறிவில் ஏதாவது காயம் ஏற் பட்டு நிலைமை மோசமாக இருந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். கொம்புகள், கால் குளம்புகள் நழுவுதல், பாதிக்கப் பட்ட இடத்தை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தில் போரிக் அமிலக் கரைசலில் பஞ்சை நனைத்துச் சுற்றிவிட வேண்டும். வேப்பெண்ணைய் அல்லது மீன் எண்ணெய் முதலிய வற்றில் சல்ஃபானிலாமைடு (sulphanilamide) பொடி கலந்து தடவி வர வேண்டும். நாளடைவில் மெல்லிய தாகக் கொம்பு வளரத் தொடங்கியவுடன் தாரை மேல் தடவிவிட நன்றாகக் காய்ச்சி கொம்பின் வேண்டும். கண்களில் ஏற்படும் சேதம். இதை மிகுந்த பாது காப்போடு கவனிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் உப்பைக் கலந்து கண்களை நன்றாகச் சுத்தம் செய்து அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை செய்ய வேண்டும். மூட்டு நழுவுதல். கால்நடைகளுக்கு இடுப்பு எலும்பு, தொடை எலும்பு மூட்டு, முன்னங்கால் மூட்டு நழுவுதல் முதலியன சாதாரணமாக ஏற்படக் கூடும். கூடுமானவரை விலங்குகளை அசையாமல் இருக்கும்படிச் செய்ய வேண்டும். இவை ஏற்பட்ட உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறுவது நல்லது. தொண்டை அடைத்தல், அசைபோடும்போதோ கிழங்கு, எலும்புத் துண்டுகள், கொட்டைகள், பழ சில முதலியவற்றைச் சமயங்களில் வகைகள் சரியாகப் பற்களால் துண்டாக்காமல் அப்படியே விழுங்கும்போதோ அதிகமாக வயிறு உப்புதல் அதிக உமிழ்நீர் சிந்துதல், உண்டவுடன் வாந்தி ஆகியன ஏற்படும்போதோ அருகில் உள்ள கால் நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும். கூர்மையான ஆயுதங்களால் ஏற்படும் புண்கள். சில சமயங்களில் கால்நடைகளுக்குக் கூர்மையான ஆயு தங்கள் சிலவற்றால் (கத்தி, அரிவாள், துப்பாக்கிக் குண்டு துளைத்தல்) காயங்கள் ஏற்படலாம். அச் சமயம் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தவிர்க்க நன்றாகப் பஞ்சினால் அழுத்தி அந்த இடத்தில் கட்டுப்போட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு உடனே எடுத்துச் சென்று சிகிச்சை ஆர்ச்சிபால்ட் டேலிட் செய்ய வேண்டும். ஆம்பர் ஹைடிரோக்கார்பன் சேர்மக் கனிமத் தொகுதி யில் அமைந்த ஒரு கனிமமே இது. ஊசியிலை மரங் களிலிருந்து உருவான புதை படிவப் பிசின் கட்டியே ஆம்பர் (amber) ஆகும். இதன் வேதியியல் உட்கூறு முற்றிலும் ஹைடிரோ கார்பன் ஆகும். பிசின் இயற்பியல் பண்புகள். இது குறைவிலை மணிக்கற் கள் வகையில் அடங்கும். ஆம்பர் படிக வடிவமற் றது (amorphous). சங்கு முறிவுடையது; போன்ற மிளிர்வுடையது. இதன் ஒளிவிலகல் எண் 1.54; இதன் அடர்த்தி எண் 1.05 முதல் 1.10 வரை மாறுபடும்; கடினத்தன்மை 2 முதல் 2.5 வரை அமை யும். இது 150°C வெப்பநிலையில் இளகத் தொடங்கி 250°C முதல் 300°C வரையில் உள்ள வெப்பநிலையில் முழுமையாக உருகிவிடுகிறது. ஆம்பர் பயன்பாடு. ஆம்பர் பண்டைய காலங்களிலிருந்து அழகு சாதனப் பொருள் செய்யப் பயன்பட்டு வந்தி ருக்கிறது. வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு நிற ஆம்பர் அணிகலன்களாகப் பயன்படு கிறது. ஒளி ஊடுருவல் முதல் ஒளிக் கசிவு வரை மாறு படும் ஒளியியல் பண்புடையது. ஆம்பர், சிறிய பெட்டிகள், குழாய்கள் ஆகியவற்றை அலங்கரிக்கப் பயன்படுகிறது. பரவல். ஆம்பர் அதிகமாகக் கிடைக்கும் இடம் பால்டிக் கடலின் தெற்குக் கடற்கரையில் உள்ள பிரஷியா பகுதியாகும். இது சுவீடன், டென்மார்க் கடற்கரைகளிலும், பர்மா, சிசிலி, ருமேனியா ஆகிய நாடுகளிலும் கிடைக்கின்றது. அ.வே.உடையனப்பிள்ளை