388 ஆற்றல், சூரிய
388 ஆற்றல், சூரிய வேறுபாடுகளிலிருந்து (thermal differences ) மிகுந்த அளவில் ஆற்றலைப் பெறலாம் என எடுத்துரைத் தார். 1930 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டு இயற் பியல் விஞ்ஞானியான ஜார்ஜ் கிளாடு (George Claude) என்பவர், பக்குவநிலை அடையாத கடல் வெப்ப வேறுபாட்டைக் கொண்டு இயங்கும் மின் நிலையத்தை (ocean thermal difference power plant) கியூபாவிலுள்ள மடான் சாஸ் விரிகுடாவின் ஓரத்தில் Madanzos bay) நிறுவி இயக்கினார். தயாரிப்பதற் கான பிரச்சினைகள் தட்பவெப்ப நிலைப் பிரச்சி னை களுடன் கரையோர நிலையத்திலிருந்து விரி குடாவில் 1.6 மீட்டர் விட்ட அளவுடைய 1.75 கிவோ மீட்டர் நீளமான குளிர் நீர்க்குழாயினைக்(cold water pipe) கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர்கள் ஆழத் தில் அமைத்தார். கடல் நீரின் 14° செ. வெப்பநிலை வேறுபாட்டைக் கொண்டு, கிளாடினுடைய சுழலி 22 கிலோ வாட் மின்திறனை ஆக்கியது. திறந்த இராங்கின் சுழற்சி அமைப்புடன் (open Rankine cycle system) நிலையம் இயங்கியது. அதாவது கடல் நீரிலிருந்து உண்டாக்கப்பட்ட தூயநீர் நீராவிச் சுழலி யில் வேலை செய்யும் நீர்மமாக (working fluid) நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது. வழக்கமான நீராவிச் சுழலி அமைப்பு உயர் அழுத்தத்திலும், பேரளவு வெப்பநிலை வேறுபாடுகளிலும் இயங்குகின்றது. ஆனால் கிளாடினுடைய அமைப் பில் ஆவியாக்குவதற்கு மிகவும் குறைந்த அழுத்தம் (வெற்றிடம்) தேவைப்பட்டது. வேகப் பாய்வுக் கொதிகலன்களில் (flash boilers) நீராவியின் அழுத் தம் 0.03 வளிமண்டலமாகவும் (atmosphere) செறி கலன்களில் (condenser) நீராவியின் அழுத்தம் 0.02 வளிமண்டலமாகவும் இருந்தன. இங்கு நீரா வியுடன் மழைபோன்று விழும் குளிர்ந்த நீரினைக் கலந்து நீராக வடிக்கப்படுகின்றது. இந்த அழுத்தங் களில், நீராவியின் தற் பருமன் அளவு (specific volume) (பரு மீட்டர்கள்[கிலோ கிராம் அல்லது பருமன் அடி/பவுண்டு) மிகவும் உயர்ந்த அளவினைக் கொண்டதாய் இருப்பதால் அதே அளவான திற னுக்கு மரபுவழித்திறன் நிலையத்திற்குத் தேவைப் படும் சுழலியைப் போன்று 30 முதல் 50 மடங்கு பெரிய விட்ட அளவினைக் கொண்ட சுழலி தேவை யாயிற்று. இவ்வாறாக 20' செ. வெப்பநிலை வேறு பாட்டில் 5000 சுழற்சிகள் ஒரு நிமிடத்திற்கான, 60 கிலோவாட் மின்திறனை உண்டாக்கும். கிடைக்கக் கூடிய 1 மீட்டர் விட்ட அளவுள்ள சுழலிக்கு ஏற் புடையதாகச் செறிகலனுக்குள் உள்ளிழுக்கப்படும். போது குளிர்ந்த நீர் மிகுந்த அளவில் வெப்பம் அடைவதைத் தவிர்ப்பதற்காக குளிர்நீர்க் குழாயின் குறுக்குவெட்டுப் பரப்பினைப் பத்துமடங்கு பெரிய தாக்கிக் குளிர்நீர்க் குழாயின் அளவைத் தேவையான அளவிற்கும் அதிகமாய்ப் பயன்படுத்தினார். இதன் விளைவாகச் சுழலியிலிருந்து கிடைக்கும் திறனைக் காட்டிலும், அதிகமான திறனை வெற்றிடத்தை உண்டாக்கும் எக்கிக்கு (vacuum pump) வழங்கி னார். எவ்வாறிருப்பினும், குறைந்த பண்புடைய வெப்பத்தை ஆற்றலாக மாற்றம் செய்வது அவரால் எடுத்துக்காட்டப்பட்டது (காண்க படம் 19). 1956 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் அபிட்ஜா னுக்கு அருகிலுள்ள ஜவரிக் கடற்கரையோரமாகப் பிரான்சு நாட்டினரால் அமைக்கப்பட்ட கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் செய்யும் நிலையம் மற்றொரு நிலையமாக அமைந்தது. தற்காலத்தில் பயன்படுத் தும் சுட்டுப்படுத்தப்பட்ட வேகப் பாய்வு முறையில் ஆவியாக்கும் தொழில் நுட்பத்தைப் (controlled flash evapccation technology) பயன்படுத்தி, திறந்த இராங்கைன் சுழற்சி அமைப்பினை மேம்படுத்தி மின்திறனையும், தூய நீரையும் கிடைக்கச் செய்ய லாம். அடிப்படைச் சுழற்சியினை (basic cycle) மூடிய இராங்கைன் சுழற்சியாக (closed Rankine cycle) மாற்றம் செய்து கடல் வெப்ப ஆற்றல் மாற் றும் நிலையங்களின் உருவாக்கத்தில் நல்லதொரு அணுகுமுறையைக் காணலாம். இத்தகைய அணுகு முறையில் உறையவைக்கும் வகையைச் சார்ந்த அம் மோனியா அல்லது புரோப்பேன் போன்ற வேலை யில் பயன்படுத்தும் நீர்மத்தினைச் (working fluid ) சுழலியை யக்குவதற்கான மூடிய கண்ணிக்குள் (closed loop) தொடர்ந்து ஆவியாக்கவும் மறு படியும் ஆவி செறியவும் செய்யப்படுகின்றது. ஆவி யாக்கக் கலனுக்குத் (evaporator) தேவையான வெப் பத்தை வெப்பக் கடல் நீர் (75 முதல் 80° F வரை ) 297 முதல் 300 கெ.வரை வழங்குகின்றது.மற்றும் குளிர்ந்த கடல் நீர் (40 முதல் 45 Fலரை ) 278 முதல் 281 கெ. வரை செறிகலனைக் குளிர வைக்கின்றது. வேலை செய்யும் நீர்மத்தின் அழுத்தம் அழுத்தத்திற்கும் அதிகமானது. இவ் வாறான நிலைகளில், பொருளாதார வகையில் நடை முறை சார்ந்த அளவில் சுழலிகளைத் தயாரிக்க இயலும். வெப்பப் பரிமாற்றிகள், சுழலிகள், எக் கிகள் ஆகியவற்றின் தற்போது இருந்து வரும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 5 முதல் 25 மெகாவாட்டுகள் மின்திறன் இடைவெளியினைக் கொண்ட திறன் படிம அமைப்புக்களைக் (power modules) கொண்டு, 500 மெகாவாட்டுகள் திறன் கொண்ட நிலையங்களைக் கட்ட இயலும், குளிர் பதனத்துக்கும் காற்றுப் பதனாக்கத்துக்கும் நீர்ம இயற்கை வளிமத்துக்குமான தொழிற் சாலைகளி லிருந்து இதற்கான தொழில் நுட்பத்தைப் பெறலாம். வளிமண்டல செயற்கைக் கோள் ஆற்றல் அமைப்புகள் (satellite energy systems). சூரியத் திரட்டியை விண்வெளியில் அமைப்பதற்கான நன்மைகள் எவையெனில் நிலக் கோளம் மேலமைந்த வட்டணையில் சூரியனை