உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 ஆற்றல்‌ செலுத்தம்‌

406 ஆற்றல் செலுத்தம் ஒரு பட்ட பல்வேறு செம்பு அல்லது அலுமினியக் கடத்தி களை நடைமுறையில் உள்ள மேனிலை செலுத்தத் தொடர் பெற்றிருக்கிறது. மாறு மின்னோட்ட மின் ஆக்கிகள், மின் ஓடிகள் மின் மாற்றிகள் ஆகியவை வடிவமைப்பில் எளியனவாயிருப்பதால் பொதுவாக மாறுமின்னோட்டத்தொடர்களே பயன்படுத்தப்படு கின்றன. நேர்மின்னோட்டத் தொடர்களினால் மாறு மின்னோட்டத் தொடர்களை விட கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு மிகக்குறைவு எனினும் நேர்மின்னோட்டத் தொடர்களில் இரு முனைகளி லும் பின்னும்,முன்னும் நேர் மின்னோட்டத்துக்கும், மாற்றும் எதிர்மின்னோட்டத்துக்குமாக யுயர்ந்த சாதனங்கள் தேவைப்படும். நேர்மின் னோட்டத்துக்கும், எதிர்மின்னோட்டத்துக்குமாக மாற்ற ஆகும் செலவைக் குறைப்பதும், செலுத்தத் தொடரின் நீளத்தை அதிகப்படுத்துவதும் நேர் மின்னோட்டத் தொடரைப் பயன்படுத்தச் சாதக மாக அமைகின்றன. அமெரிக்க ஒனறிய நாட்டில் உள்ள பொன்னாவில்லி திறன் அமைப்பு ஒரிசாவி லிருந்து தெற்குக் கலிஃபோர்னியா வரையில் 1360 கி.மீ (850 மைல்) நீள முள்ள நேர் மின்னோட்ட மேனிலைச் செலுத்தத் தொடரை நிறுவியது. விலை மின்னழுத்த வரையளவு. செலுத்தத் தொடரில் (அல்லது வேறு மின்சுற்றுவழிகளில்) I'R என்ற பெருக்கற்பலனே (அதாவது மின்னோட்டத்தின் இரு மடி (I), தொடரிலுள்ள மின்தடை (R) ஆகிய இரண்டின் பெருக்கற் பலன்) திறன் இழப்பாகும். இவ்விழப்புகளைக்குறைக்க, குறைவான மின்னோட் டத்தையும் குறைவான மின்தடையையும் பெற்றிருப் பது நலமாகும். இருப்பினும் பெறக்கூடிய திறன், மின் னோட்டம், மின் அழுத்தம், V ஆகியவற்றின் பெருக்கற்பலனாகும். எனவே ஒரு குறைவான மின் னோட்டம் பாயும் தொடர் அதிகத் திறனைக் கொடுக்க அதிக மின்னழுத்தம் பெற்றிருக்க வேண் டும். செலுத்தத் தொடர்கள் ஏன் அதிக மின் அழுத் தம் உடையதாய் இருக்கவேண்டும் என்பதை இது விளக்குகிறது. 1950 ஆம் ஆண்டு 287,000 வோல்ட் ஆகவும், 1960இல் 500,000 வோல்ட் ஆகவும் இருந்த பெரும் மின்னழுத்தம் மேலும் வளர்ந்து இன்று 765,000 வோல்ட் ஆக இருக்கிறது. மேலும் உயர் மின் அழுத்தத் தொடர்கள் வடிவமைக்கப்பட்டு வரு கின்றன. உற்பத்தி நிலையத்தில் மின்மாற்றிகள் 2,000 த்திலிருந்து 30,000 வோல்ட் வரை மின்னழுத் தத்தை அதிகப்படுத்தித் தரப் பயன்படுத்தப்படுகின் றன. செலுத்தத் தொடர்கள் துணைமின் நிலையங்க ளில் முடிவடைகின்றன. அங்கு மின்மாற்றிகள் 10,000 வோல்ட்டிலிருந்து 15,000 வோல்ட் வரை மின்னழுத் தத்தைக் குறைக்கின்றன. பகிர்வுத் தொடர்கள் மின் சாரத்தை வீடுகளுக்கும், மற்ற கட்டிடங்களுக்கும் எடுத்துச்செல்லும்போது அதன் மின்னழுத்தம் 11,000 இலிருந்து 220 வோல்ட்டுக்குக் குறைக்கப்படுகிறது. பகிர்வு. மின்திறன் உற்பத்தி வளர்ந்ததால் செலுத்தத்தொடர் நீளம் மிக வேகமாக அதிகமாகி யிருக்கிறது. 1970 இல் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் 69,000 வோல்ட் மின்னழுத்தம்கொண்ட 480,000 கி.மீ தொடர்கள் இருந்தன. 1990க்குள் அது 800,000 கி.மீ அளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது செலுத்தத்தொடரின் உரிமை வழிக் காகப் பயன்படும் நிலம் மிகப் பெரியதாகும். அது ஏறக்குறைய 8,000,000 ஏக்கர் (32,370கி.மீ) ஆகும். ஒரு 138,000 வோல்ட் தொடருக்கு 100 அடி (30 மீ) அகலப்பாதை (12 ஏக்கர்/மைல் அல்லது 3034 மீவு |கி.மீ) தேவைப்படுகிறது. அதுபோல 765, 000 வோல்ட் தொடருக்கு 200 அடி (60 மீ) (24 ஏக்கர்]மைல்) அகலப்பாதை தேவையாயிருக்கிறது. உரிமை வழியில் தாவரக் கொல்லிகளைப் பயன்படுத்தித் தாவர வளர்ச்சி நீக்கப்படுகிறது. உரிமை வழி வகைமைப் படி வாங்கியே பெறப்படுகிறது. அல்லது பயன்பாட்டு சாதனங்களின் முதல்தர அதிகாரத்தைப் பயன் படுத்தித் தண்டனை, சட்ட நடவடிக்கை மூலமாகவும் பெறப்படுகின்றது. சுற்றுப்புறத்தின் விளைவுகள். செலுத்தத் தொடர் கள் சுற்றுப்புறத்தில் சில விளைவுகளை ஏற்படுத்து கின்றன. இது உயர்ந்த மின் அழுத்தத் தொடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அந்த உயர்ந்த மின் அழுத்தம் தரையிலும் தொடருக்கு அருகில் உள்ள வேறு பொருள்களிலும் மாறு மின்னோட்டத் தைத் தூண்டக்கூடும். உயர்ந்த மின்னழுத்தத் தொடருக்கு அருகில் அமைந்துள்ள சாதாரண ஒளி ரும் குமிழ்விளக்கு மின்கலங்களோ மின்சாரக் கம்பிகளோ இல்லாமல் ஒளியைக் கொடுககும். குமிழ் விளக்கு பல நூறு அடிகள் தொலைவிலிருந்தால் கூட இதுபோல் நிகழ்கிறது. மாறு மின்காந்தப்புலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாக மருத்துவச் சான்றுகள் கூறுகின்றன. ஆயினும் அந்தத் தீங்குகள் முழுமையாக அறியப்பட வில்லை. செலுத்தத் தொடர்களின் அருகிலமைந்த மின் காந்தப்புலங்கள் வானொலி மற்றும் தொலை நோக்கி அலைவாங்கிகளில் குறுக்கிடக்கூடும். செலுத்தத் தொடரின் கீழ் இயங்கும் வானொலியில் பொதுவான நிலைமின் இரைச்சல் கேட்கும். உயர்ந்த மின்னழுத்தத் தொடருக்கருகில் வாழும் குடும்பங்களுக்காக, சில நேரங்களில் தனியாக உணர்சட்டங்களைக்கட்டிப் பயன்பாட்டுச் சாதனங் களின் அலைபெறுந் திறனை அதிகப்படுத்து கிறார்கள். ஒளிவட்ட மின்னிறக்கம். செலுத்தத் தொடர் களில் உள்ள கீறல்களின் பக்கம், தொடர்களிலுள்ள அழுக்குத் துகள்கள் போன்ற உயர் மின் புலப் பகுதிகளில் நீலச்சுடர் ஏற்படுகிறது. செலுத்தத்