உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 ஆற்றல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஹைடிரஜன்‌

416 ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் பத்தி செய்யும் உலையை இவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சூரிய வெப்ப அல்லது நிலவெப்ப ஆற்றலிலும் மின்சாரம் உடனடிவிளை பொருளாக இருக்கும்போது மின்பகுப்பு முறையில் குறைந்தது 60. ஆற்றல் திறமையில் ஹைடிரஜனைத் தோற்றுவிக்கலாம். உயர்வெப்பநிலையிலும், அழுத் தத்திலும் இயக்கிடும்போது மின்பகுப்பு முறையின் ஆற்றல் திறமையை (energy efficiency of electrolysis) உயர்த்தலாம்; இதற்கு அதிக முதலீட்டுச் செலவு உண் டாகும். 21 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஆற்றல் மூலமாக அணுக்கருப்பிணைப்பு (nuclear fusion )முறை வேக அப்போது உருவாகலாம்; நியூட்ரானின் ஆற்றல் (fast nuctron energy) வெப்பம் வழங்க வகைசெய்யும்: கே.எம்.எஸ். அணுககருப்பிணைப்புக் கழகம் (KMS Fusion, Inc.) எடுத்துக் கூறியுள்ள மாற்றுமுறையில் நியூட்ரான்களைப் பயன்படுத்தி நீரினை ஹைடிரஜனாகவும் ஆக்சிஜனாகவும் நேரடி யாகவும் பிரிக்கலாம். அணு உலை (nuclear reactor) சூரிய உலை (solar furnace) போன்ற முறைகளில் தோற்றுவிக்கப்பட்ட வெப்பத்தைத் தொடர்ந்து வேதியியல் வினைகளில் பயன்படுத்தி நீரினை ஹைடிரஜனாகவும் ஆக்சிஜனா கவும் பிரித்திடலாம். எடுத்துக்காட்டாக அத்தகைய தொடர் வரிசை, ஜீ.பெனி, சி.மார்செட்டி ஆகிய வர்களால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அட்டவணை 2. ஹைடிரஜன் எரிபொருள் ஆக்கச் செலவுகள் ஆக்கும் முறை நிலக்கரி வளிமமாக்கம் அணுக்கரு மின்னாக்கம் நீர்மமாக்கம் கேசோலீன் செலவு இடைவெளி 10.பி.வெ.அ. $ 1.00-1.70 $ 2.50-5.00 $ 1.20-1.80 $ 2.89 CaBr, + 2H,O → 2HBr Ca (OH), (730 °C) 2HBr + Hg H, + HgBr, (250 °C) Ca(OH), HgBr, → Hgo + CaBr, + 2H,O (200°C) HgO + Hg +10, (600°C) இத்தகைய முறைகளில் ஒட்டுமொத்தமான ஆற்றல் திறமை (over all energy efficiency) 40 முதல் 60 மாறும். இது மின் திறன், மின்பகுப்பு(electric power and electrolysis) வழிகளில் ஹைடிரஜன் ஆக்கத்தின் ஒட்டுமொத்தமான திறமையைக் காட்டிலும் அதிக மாகவே உள்ளது ஹைடிரஜன் எரிபொருள் பொருளாதாரம். (bydro- gen fuel economy) ஹைடிரஜன் பொருளாதாரத் தின் இயங்குவிசையும் (driving force) வேறு பிற ல்கையிலான பிற்கால ஆற்றலும் இந்த வேறுபட்ட ஆற்றல் தேர்வுகளின் ஒப்பீட்டுச் செலவுகளைச் சார்ந்தனவாகும். வெவ்வேறுபட்ட வகைகளில் ஹைடிரஜன் ஆக்கத்திற்கு ஏற்படும் செலவு இடை வெளி மதிப்பீடு (cost range estimates) சுருக்கமாக அட்டவணை 2 இல் காட்டப்பட்டுள்ளது. சூரிய ஆற்றல் அணுக்கருப் பிணைப்பு ஆற்றல் மூலங்கள் வளர்ச்சியடையும் வரை நிலக்கரியிலிருந்து ஹைடிர ஜனைப்பெறுதல் விரும்பத்தக்க இடைநிலை ஏற்பாடு ஆகும். மின்திறன் செலவுடன் நீர்மின்பகுப்பு முறையில் பெறப்படும் ஹைடிரஜன் இயற்கையாகவே நெருக்க மாகப் பிணைக்கப்பட்டுள்ளது. வளிமக் குழாய்த்தொடர் (gas pipeline) வழி யாக ஹைடிரஜனைப் பகிர்ந்து வழங்கலாம்; வணிகப் பகுதி அல்லது வழங்கு பகுதிக்கு அருகாமையில் இதனை நீர்மமாக்கலாம். வளிமக் குழாய்த்தொடர் வழியாகப் பகிர்ந்து ஹைடிரஜனை வழங்கிடும் முறை யில் அதனோடு ஒத்த இயற்கை வளிமத்தைப் பகிர்ந்து வழங்கிடுதலைக் காட்டிலும் 15 % செலவு அதிகமாக இருக்கும். இது மேலும் இதனை ஒத்திருக்கின்ற மின்திறன் பகிர்வீட்டுச் செலவினைக் காட்டிலும் மிகவும் சிக்கனமானது. எப்படியெனில் ஆற்றலைப் பயன்படுத்துபவர்களுக்கு (energy users) குழாய் வழி ஹைடிரஜன் வளிமத்தை மட்டும் வழங்கி அதன் வழியாக எரிபொருள் மின்கலத்தில் மின் சாரத்தை ஆக்கிடலாம். ஹைடிரஜனை வழங்கி அத னால் மைய மின்னாக்கம் செய்திடும் முறையைத்தேர்ந் தெடுப்பது சரிதானா என்பது பொருளாதாரச் சமன் பாட்டு முதன்மையைப் பொறுத்ததாகும். ஹைடிரஜன் எரிபொருள் பொருளாதாரத்தின் நோக்கம் யாதெனில் சுழற்சியுடைய காலவரம்பின்றிப் பெறக் கூடிய வளமிக்க திறன் ஆக்கமாறுபாட்டு அமைப் பைத் (energy metabolism pattern) தேடுவதேயாகும். ஏனெனில் புதைப்படிவு எரிபொருள்கள் முழுவதும் வெறுமையாக்கப் பெற்ற நிலையினை அடைவதால் அவற்றை மீளவும் திரும்பப் பெறுவது பொருளாதார வகையில் விரும்பத்தக்கதாய் இல்லை. புதைபடிவு ஹைடிரோக்கார்பன்களுக்கு நிலக் கரியிலிருந்து தயாரிக்கப் பெற்ற செயற்கை ஹைடி ரோக்கார்பன் நீர்ம எரிபொருள்கள் மாற்றாக, பொருளாதார வகையில் நீண்ட நாளைக்கான மாற்று எரிபொருளாகச் சொல்லப்பட்ட போதி லும் பெட்ரோலியம் தீர்வு அடையும் காலத்திற்கும் அதிகப்பட்ட காலம் வரை நிலக்கரியினைப் பெறும் நிலை இருந்தபோதிலும், அது கிடைக்கும் அளவும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதே ஆகும். இவ் விடத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டியநிலை யில் உள்ளோம். ஏனெனில் வளிமண்டல CO, அதிக