ஆற்றல், நிலக்கரி 419
படுகிறது. உயர்ந்த கார்பன் அளவாலும் குறைந்த ஈரத்தாலும் இதை வேறுபடுத்திக் கண்டறியலாம். வெளிப்படுத்தும் கலோரி வெப்ப மதிப்பிலிருந்து துணைப் பிட்டுமன் இயல்பு நிலக்கரிகளை மேலும் வகைப்படுத்தலாம். இளம் பிட்டுமன் A நிலக்கரி. இது ஒரு பவுண்டிற்கு 10500 அல்லது அதற்கும் மேற்பட்டதும் ஆனால் 13000 பி.வெ.அ. இற்கும் குறைவாகவும் வெப்ப வெளியீட்டைக் கொண்ட, துணைப்பிட்டுமன் பண் பினைக் கொண்ட நிலக்கரியின் வகையாகும். இளம் பிட்டுமன் B நிலக்கரி. இது ஒரு பவுண்டிற்கு 9500இற்கும் அதற்கும் மேலாகவும் ஆனால் 10500பி. வெ. அ.இற்கும் குறைவான வெப்ப வெளியீட்டைக் கொண்ட துணைப்பிட்டுமன் பண்பினைக் கொண்ட ஒருவகை நிலக்கரியாகும். இளம் பிட்டுமன் C நிலக்கரி. இது ஒரு பவுண்டிற்கு 8300இற்கும் அதற்கும் மேலாகவும் ஆனால் 9500 பி.வெ.அ. இற்கும் குறைவான வெப்ப வெளியீட்டைக் கொண்ட துணைப்பிட்டுமன் பண்பினைக் கொண்ட வகை நிலக்கரி ஆகும். பழுப்பு நிலக்கரி. இது பழுப்பும் கருமை யும் கலந்த நிறத்தினைக் கொண்ட நிலக்கரியாகும். நிலக்கரி ஆக்கத்தில் தூள் நிலக்கரிக்கும், துணைப் பிட்டுமன்பண்பினைக் கொண்ட நிலக்கரிக்கும் இடைப் பட்டது. இது கடினமான நிலக்கரியாகும். ஈரம் தாதுப்பொருள் அற்ற அடிப்படையில் இதனுடைய வெப்ப வெளியீட்டுக் கலோரி மதிப்பு ஒரு பவுண் டிற்கு 8300பி.வெ.அ. ஆகும். கலோரி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பழுப்பு நிலக்கரி மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பழுப்பு நிலக்கரி A. இந்த வகை நிலக்கரி ஒரு பவுண்டிற்கு 6300 அல்லது அதற்கும் மேலும் 8300 இற்கும் குறைவாயும் பி, வெ. அ. மதிப்பினைக் கொண்டிருக்கும். இதனைக் கரும் பழுப்பு நிலக்கரி என்றும் கூறுவர். பழுப்பு நிலக்கரி B. இது ஒரு பவுண்டிற்கு 6300 பி.வெ. அ. இற்கும் குறைவான வெளியீட்டு மதிப்பினைக் நிலக்கரி. கொண்ட ஈர வெப்ப பழுப்பு தாவரநொதி (peat). இது தாழ்ந்த சேற்று நிலம், நீர் செறிந்த சதுப்பு நிலம் போன்ற நீர் செறிவுற்ற சூழலில், பாதி சரியாக்கப்பட்ட தாவரக் கழிவுகளின் கெட்டியாக்கப்படாத படிவாகும். மேலும் இது தொடர்ந்து உயர் வினைக் அள (குறைந்தது 0.75%) கொண்டிருக்கும். நிலக்கரி உருவாக்கத்தில், தூள் நிலக்கரியானது ஆரம்ப நிலை யினையும் அல்லது தொடக்கத் தரவரிசையினையும் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இதில் கரி 60 விழுக் அ.க. 3-27 அ . ஆற்றல், நிலக்கரி 419 காடும் ஆக்சிஜன் அளவு 30 விழுக்காடும் இருக்கும். தாவரப் பொருளின் கட்டமைப்புக்களை இதில் காணலாம். உலர்த்திய பின்னர், தூள் நிலக்கரி கட்டற்று எரிகிறது. தாவரநொதி நிலக்கரி (cannel). இச்சொற்றொடர் இரு பொருள்களைக் குறிக்கும். அவை, (அ) தூள் நிலக்கரிக்கும் பழுப்பு நிலக்கரிக்கும் இடைப்பட்ட மாறு நிலையைக் கொண்ட நிலக்கரி, (ஆ) செயற்கை யாகக் கரியாக்கப்பட்ட தூள் நிலக்கரி என்பனவாகும் இது எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. கேனல் நிலக்கரி (cannel coal). இந்த நிலக்கரி செறிந்த திண்ணிய கட்டுறுதியான நிலக்கரி ஆகும். இது மங்கலானது முதல் மெழுகுபோன்ற பளபளப் பும் சங்கு முறிவும் கொண்டு திண்ணியநிலையில் காணப்படுகின்றது. இது அரைப்பதற்கேற்ற தன்மை யைக் கொண்டும் எளிதில் ஆவியாகும் தன்மையைக் மிகுதியாகக் கொண்டும் இனங்காணப்படும். அமெரிக்க நாட்டின் தரங்களின்படி இந் நிலக்கரி 5% க்கும் குறைவான ஆந்திராசைலானைக் கொண் டிருக்கும். இந்நிலககரிக்குக் கீழ்க்கண்ட இணையான பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன மெழுகு நிலக்கரி (causle coal) கெர்னல் நிலக்கரி (kernalocal), கேன்னல் (cannel), கேன்னலைட்டு (cannelite), கிளி நிலக்கரி (parrot coal) கர்லி கேன்னல் (curley cannel) என்பனவாகும். நிலைத்த நீர் நிலைகளில் எஞ்சிய கரிமப் பொருள்களிலிருந்து நேர்த்தியாகப் பிரிக்கப்பட்ட தாவரப் பொருளி லிருந்தும் ஸ்போர்களிலிருந்தும் பாசிகள் போன்றவை களிலிருந்தும், இந் நிலக்கரி பெறப்படுகின்றது.தூள் நிலக்கரி ஆக்கம் போன்றன்றி, காற்றற்ற நிலை களில் வாழும் உயிரினங்கள் அழுகுவதன் காரண மாய் இந்நிலக்கரி உருவாகின்றது. களை நிலக்கரியின் தர வரிசைகள் (ranks of coal). இன மாகக் குறிப்பிடுவதற்கேற்றவாறும், எரிக்கும் சாத னத்தைத் தேர்ந்தெடுப்பதற்கேற்றவாறும் வெப்பப் பரிமாற்றப் பரப்புகளின் வடிவமைப்பிற்கும் அதன் அமைவிற்கும் ஏற்றவாறும் (தேவையான குறிப்பு வழங்குவதற்கேற்றவாறும்), இறுதிப் பயன் பாட்டுக்கேற்றவாறும், நிலக்கரிகள் பலவகைகளில் தரப்படுத்தப்படுகின்றன. மேலும் உருமாற்ற அள விற்கு ஏற்றவாறும் அல்லது பழுப்பு நிலக்கரி முதல் ஆந்திரசைட்டு நிலக்கரி வரையிலுள்ளபடிப்படியான மாற்றத்திற்கேற்றவாறும், நிலக்கரியின் அடுக்கு வகைப்படுத்தப்படுகின்றது. எளிதில் ஆவியாகும் பொருளும் நிலைத்த கார் பனும், இயல்பான ஈரமும் அல்லது படுகையில் அமைந்த ஈரமும் நடுநிலைப்படுத்தப்பட்ட ஈரமும், 30° செ.இலும், 97% ஈரப்பதத்திலும் உள்ள ஆக்சி ஜனும் இவையாவும் நிலக்கரியைத் தர வரிசைப்படுத் தக் காரணமாகின்றன. ஆனால் எந்த ஓர் இனமும்