ஆற்றல், நிலக்கரி 439
பகுதிகள் இதில் அடங்க வேண்டும் என்பதாகும். மேலும் இதில் கீழ்க்கண்டவையும் அடங்கும். கூரை தரைக்கட்டுப்பாடு. எதிர்பாராதபோது இடைவரிகள், முக்கூறு நிலக்கரி போன்றவை விழு வதைத் தடுக்கும் நோக்கத்துடன் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தின் வழியாகத் தரைக் கட்டுப்பாட் டுடன் தொடர்பு கொள்ளுதல் இதில் அடங்கும். அந்த ஆய்வுப் பகுதிகளாவன, செயற்கையான தாங்குதல், அபாயத்தைக் கண்டறிதல், சுரங்கத்திறப்புக்களை வடிவமைத்தல் என்பனவாகும். நிலைப்புத் தன்மை யற்ற கூரை நிலைகளைக் கண்டறிவதற்கு இடை நிலைக் கூரை இழுவிசை காட்டும் கருவிகள் சோதிக் கப்பட்டுள்ளன. நுண்ணிய நில அதிர்ச்சி முறிவினை முன்னறிவிப்புச் செய்யும் அமைப்பும் கூரைக்கான பல்லுறுப்பாக்கப்பட்ட மரையாணிகளும், வேதியியற் பொருட்களுடன் தோய்த்தெடுக்கும் தொழில் நுட்ப மும் மற்ற ஆய்வுத் திட்டங்களில் அடங்கும். தீயினையும் வெடித்தலையும் தடுத்தல். இப்பகுதி யின் ஆய்வில் அடங்குபவையாவன, தீப் பற்றுதல், தீச் சுடர் பரவுதல், தீயினைக் கண்டுபிடித்தல், அதற்கான அபாய அறிவிப்பு. தீபரவாமல் கட்டுப் படுத்துதல், அணைத்தல், மித்தேன் அளவீடு என்பனவாகும். இதற்காகச் சோதனையிடப்பட்ட கருவிகளிலும் தொழில் நுட்பங்களிலும். அடங்குவன வெடித்தல் நிகழாத அறைத் தடுப்புகளும், நிலக்கரித் தூசு பாறை தூசுகளை ஆய்வு செய்யும் கருவிகளும் முதற் கூறுச்சாதனைங்களுக்கான தீப்பற்றுதலைக் கட்டுப்படுத்தும் கருவிகளும் தொலை தூரக் காப்பு முத்திரைத் தொழில் நுட்பமும் ஆகும். தொழிற்சாலை வகைசார்ந்த அபாயங்கள். மின்சாரம் எந்திர வகை ஒளியூட்டம் இவற்றைச் சார்ந்த ஆனால் அவசர நிலை சாராத தகவல் தொடர்புத் துறைகளில் தோன்றும் அபாயத்தைக் கண்டறிய வேண்டும். இதில் கண்ட முன்னேற்றங்களாவன, முன்னேற்றமடைந்த தொலை தூரக் கண்காணிப்பும், தகவல் தொடர்பு அமைப்புகளும் எடுத்துச் செல்லத் தக்க சுரங்கப் பகுதிகளை ஒளியூட்டும் அமைப்புகளும் தள்ளுவண்டியுடன் அமைந்த கம்பியில்லாத் தொலை பேசி அமைப்புகளும் நிலத்தடியில் பயன்படுத்தப் படும் குறைந்த நிலக் கரியினால் இயங்கும் எந்திரங் களின் பயன்பாட்டிற்கான பாதுகாப்பினைக் கொண்ட மேற்கட்டுமானங்களும் ஆகும். மீத்தேன் கட்டுப்பாடு. இது மீத்தேன் நிறைந்த நிலக்கரிப் படுகைகளைச் சுரங்கமிடுவதற்காகப் பாதுகாப்பான முறைகள் உருவாக்குவதைக்குறிக் கோளாகக் கொண்டது. இதற்கான ஆய்வுப் பகுதி களாவன, செறிவூட்டங்களையும், பாய்வினையும் முன் கூட்டியே அறிவிததல், சுரங்கமிடுதலை முன் பாகவே கட்டுப்படுத்துதல், சுரங்கமிடும் போது கட் டுப்படுத்துதல் என்பனவாகும். இதற்கான சோதனை ஆற்றல், நிலக்கரி 439 செய்யப்பட்ட தொழில் நுட்பங்களாவன, முகப்புப் பகுதியில் நீரைப்புகுத்திப் பரவவிட்டு மீதேன் அள வைக் குறைத்தலும், செங்குத்தான துளைகளின் வழி யாக வாயுவை வெளியேற்றம் செய்தலும், நிலக்கரிப் படுகைகளை ஊடுருவும் எண்ணெய், வளிமக்கிண றுகளை அடைத்தலும்,இயங்கும் சுரங்கங்களில் முழுமையாக வளிம நீக்கம் செய்தலும் ஆகும். சுரங்க அழிவுக்குப் பின்னர் உய்வும், மீட்பும், இது, ஒரு சுரங்கம் அழிவிற்குண்டானால் உள்ளே சிக்கிய சுரங்கத் தொழிலாளியை மீட்கும் வாய்ப்புகளை மேம்படுத்தும் இடர்காப்பு உதவித் தொழில் நுட் பம், தகவல் தொடர்பு அவசர உயிர் காக்கும் அமைப் புகள் ஆகியவற்றை உருவாக்கும் குறிக்கோளைக் கொண்டது. மேம்பட்ட தொழில் நுட்பத்திற்கு குறிப்பிடத் தக்க எடுத்துக் காட்டுக்களாவன, 1972- ஆம் ஆண்டில் பீளேக்ஸ் வில்லி விபத்து சூரிய ஒளிச் சுரங்கத்தின் விபத்து ஆகியவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்து கவனித்தல், 1972-இல் நடந்த சூரிய ஒளிச் சுரங்க விபத்தில், மீட்புக்குழுவினருக்கு, கம்பியில் லாத் தகவல் தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத் துதல், நேமகோலின் சுரங்கத்தீயிலும் 1991 பிளேக்ஸ் வில்லி சுரங்கத்தீயிலும் (1972) அகப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களைப் பூமி அதிர்ச்சி முறைகளைப் பரிசோதனையாகப் பயன்படுத்திக் கண்டுபிடித்தல், அடைப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களைக் கண்டு பிடிக்க மின்காந்தத் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்துதல் என்பனவாகும். மூச்சுவிடத்தக்க தூசுப்பொருள். நிலக்கரிச் சுரங்க வேலையின் போது சுரங்க வேலையாட்கள் மூச்சு வீடும் போது நிலக்கரிச் சுரங்கத் தூசுப் பொருளி லிருந்து அவர்களைப் பாது காக்க வேண்டும். இதற் கான ஆய்வுகளில் அடங்குவன், தூசு உருவாக்கம், தூசுக்கட்டுப்பாடு, தூசினை அளவிடுதல் என்பன வாகும். இதற்கான சோதனைகளாவன், சுவாசிக்கத் தக்க தூசின் அளவைக் கட்டுப்படுத்த, நிலக்கரிப் படு கைகளில் நீரினைப் புகுத்திப் பரவ விடுதல், முகப் பில் தூசினைக் குறைக்கத் தொடர்ந்து சுரங்கமிடும் எந்திரங்களுடன் இணைத்து நீரினை அடிப்படை யில் உயர் விரிவினைக் கொண்ட நுரைக்கும் அமைப் புகளைப் பயன்படுத்துதல், நிலக்கரியைக் கொண்டு செல்லும் கருவிகளிலும் மாற்றம் செய்யும் புள்ளி களிலும் தூசுகளைக் கட்டுப்படுத்தும் நுரைக்கும் அமைப்புக்களைப் பயன்படுத்துதல் அன்றியும் முன் னோடி மாதிரி வகையைச் சார்ந்த தூசு அளவிடும் கருவிகளைப் பயன்படுத்துதல் என்பனவாகும். ஒலி (sound). தகவல் தொடர்பு, எச்சரிக் கைக் குறிகளின் ஏற்கத் தக்க ஒலி எல்லைகளை மதிப்பீடு செய்வதுடன், ஒலிக்குறைப்பிற்கும் கட்டுப் பாட்டிற்குமான தொழில் நுட்பத்தினை உருவாக் குதல் அடிப்படைத் தேவையாகும். இதற்கான வளர்ச்சியில் அடங்குவன, வழக்கமான் ஒலி