உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 ஆற்றல்‌, நிலக்கரி

456 ஆற்றல், நிலக்கா பல வணிக முறையில் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர், குழாய் வழியில் நீரின் மூலமாக நிலக்கரி யினை அமெரிக்க ஒன்றிய நாட்டின் கிழக்கு மாநிலங் களில் அமைந்த நெடுந்தொலைவு விற்பனை இடங் செல்லும் திட்டங்கள் களுக்குக் கொண்டு காரணங்களால் நிறைவேற்றப்படவில்லை. இத்திட் டங்கள் நிறைவேற்றப்படாததற்கான காரணம் தொழில் நுட்பப் பிரச்சினைகளைச் சார்ந்தன வல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நீர்மக் கலவையான நிலக்கரியினை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற் குக் கொண்டு செல்லும் தீவிர ஆய்வுகள் தொடர்ந் தன. 1957ஆம் ஆண்டில், முதன் முறையாக நிலக் கரியை நீருடன் குழாய்வழியில் நீண்ட தொலைவு கொண்டு செல்லும் தொழில் நுட்பம் முன்னேற்ற மடைந்து நடைமுறையில் இயலத்தக்கதாயிற்று. இதன் விளைவாக ஒருங்கிணைந்த நிலக்கரிக் குழாய்வழி கட்டி இயக்கப்பெற்றது. இக்குழாய்வழியின் குழாய் 25 செ.மீ விட்டம் கொண்டதாயும் 175 கி.மீ.நீளத் தைக் கொண்டதாயும் ஓர் ஆண்டிற்கு1.25 மில்லியன் டன்கள் அளவில் நிலக்கரி ஒஹியோவிலுள்ள கேடிஸ் என்னும் இடத்திலிருந்து, ஈரி ஏரியின் கரையிலமைந்த கிளீவ்லாந்தின் கிழக்கே 16 கி.மீ. தொலைவில் மைந்த மின் இடைவெளியிலமைந்த மின் ஆக்கம் செய்யும் நிலையத்திற்கும் கொண்டு சென்றது. 57 கி.மீ. இடைவெளியிலமைந்த நீரேற்றம் செய்யும் நிலையங்கள் இக்குழாய் வழிக்குத் திறனூட்டி, நிலக் கரி-நீர்க் கலவையின் வெளியேற்றம் செய்யும் அழுத்தம் 67kscm (கி.கி, ஒரு சதுர செ.மீ.க்கு) 8 வலை தர அளவுகளைக் கொண்டதும், 0 50% திண்மப் பொருள் செறிவூட்டத்தைக் கொண்டது மான நிலக்கரி நீர்மக் கலவை கொண்டு செல்லப் பட்டது. ஒஹியோ குழாய்வழி வெற்றிகரமாக இயங்கி 7 மில்லியன் டன்கள் நிலக்கரியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சென்றாலும், இயக்கும்போது தோன்றிய எதிர்பாராத பிரச்சினை களைத் தீர்க்க வேண்டியதாயிற்று. இதற்குப் பல் கூறுகளைக் வேறு வேறுபாடுகளைக் கொண்ட கொண்டு மிகுந்த அளவில் ஆய்வு செய்யப்பட்டது. இத்தகைய ஆய்வினால் கொண்டுசெல்லப்படும் நிலக்கரியின் அளவினை வேறுபடுத்தியும் நிலக்கரியின் நீர்மக் கலவையின் செறிவூட்டத்தை வேறுபடுத்தியும் அவ்வேறுபாட்டின் காரணமாய் நிலக்கரி நீர்மக் கலவையின் நிலைத்த தன்மையின் விளைவு பற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டன. தொகுதி வண்டித் தொடர் கருத்தில் வெவ்வேறு இட அமைப்புக்களில், நிலக்கரியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கான செலவினங்கள் வேறுபடு கின்றன. எப்படி இருப்பினும் எங்கு இருப்பு வழிப் பாதை வசதிகள் அமையவில்லையோ அங்கு நிலக்கரி நீர்மக்கலவையினைக் குழாய் வழியில் செலுத்துவது விரும்பத்தக்கதாகும். இவ்வாறாக இன்று வரை உலகம் முழுதும் 10 குழாய் வழியாக நிலக்கரி-நீர்மக் கலவையைச் செலுத்தும் அமைப்புகள் இயங்கிவரு கின்றன. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் மிகப் பெரிய குழாய் வழியாக அமைலது பிளேக் மீசோ குழாய் வழியாகும். இக்குழாய் வழி 435 கி.மீ.நீள முடையதாயும், பெரும்பாலும் 45 செ.மீ. விட்ட முடைய குழாய்களைக் கொண்டதாயும், சில இடங் களில் 30 செ.மீ. விட்டமுடைய குழாய்களைக் கொண்டதாயும் உள்ளது. இக் குழாய்வழி யானது ஓர் ஆண்டிற்கு 5 மில்லியன் டன்கள் அளவில் பிட்டுமன் இயல்பு நிலக்கரியினை 1580 மெ.வா. மின் ஆக்கம் செய்யும் நிலையத்திற்குக் கொண்டு செல்கின்றது. பிளேக் மீசோ நிலக்கரிச் சுரங்கங்களின் நடுப்பகுதியில் அரிசோனாவின் வட கிழக்குப் பகுதியில் 2200மீ உயரத்திலிருந்து இக் குழாய் வழி தொடங்கித் தூளாக்கப்பட்ட நிலக்கரி யுடன் இணைந்த நீர்மக் கலவையினை நெவாடா வின் தெற்கு முனையில் 250மீ உயரத்திலமைந்த மோஹேவ் மின் ஆக்க நிலையத்திற்கு வழங்குகின்றது. மேற்கு வர்ஜீனியா நிலக்கரிவயல்களிலிருந்து நியூ யார்க் நகரத்திற்கும் பால்டிமூர் நகரப்பகுதிக்கும், 560 கி.மீ நீளத்தில் குழாய்வழி அமைப்பது (50 செ.மீ விட் டம்) திட்டமிடப்படும் நிலையிலேயே உள்ளது. இதற் கான நீரேற்றம் செய்வதற்கான திறன் சோவியத்து நாட்டில் ஓர் ஆண்டிற்கு 10×10 டன்கள் ஆகிறது. சோவியத்து நாட்டில் நோவோ வோலின்ஸ்காயா சுரங்கத்திலிருந்து 60 கி.மீ நீளம் வரையில் (30 செ.மீ (விட்டம்) குழாயில் நிலக்கரி நீர்மக்கலவை கொண்டு செல்லப்படுகின்றது. போலந்து நாட்டு, மையச் சுரங்கமிடும் தொழிற்சாலை 200 கி.மீ நீளம் வரை யில் (25 செ.மீ விட்டம்) குழாய் வழியை இயக்கி வருகின்றது. பிரான்சு நாட்டில் 81 கி.மீ நீள முடைய (40 செ.மீ விட்டம்) குழாய் வழி 1952ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, ஒரு மணிக்கு 250 டன்கள் அளவில் ஏற்றம் செய்யப்படுகின்றது. பிரிட்டன் கொலம்பியாவிலுள்ள கிழக்குக் கூடி டினேலையும் வான்கூவரையும் இணைக்க 800 கி.மீ நீளக் குழாய் வழி திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரி நீர்மக் கலவையைக் குழாய் வழியாகக் கொண்டு செல்வதற்கான தன்மை பலவித வேறு பாடுகளைத் தீர்வுறச் செய்யும். இவற்றில் நீரியலாக முக்கியமாக அமைவது கீழ்க்கண்ட காரணங்களால் ஆகும். அவை, கொண்டிருக்கும் நிலக்கரியின் உருள அளவு, நீரின் வேகம், செறிவூட்டம், என்பனவாகும். செயல் நுட்பம் வாய்ந்த இயங்கிடும் வேகங்களில், ஒருமித்த பாய்வினை அடைய நிலக்கரியின் சரியான அளவினைத் (தரத்தினை) தேர்ந்தெடுப்பது முதன்மை யானதாகும். நிலக்கரி நீர்மக் கலவையில் இவ்வாறு இருப்பதற்கு 8 வலை தர அளவுகளைக் கொண்ட துல்லியமான 0.25 செ.மீ துகள் அளவு(தூசியுடன் ஒப்