உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 ஆற்றல்‌, நிலக்கரி

I 462 ஆற்றல்,நிலக்கரி (substitute natural gas)என்ற சொற்றொடர் மிகவும் விரும்பத் தக்கது. லூர்கி செயல் முறை (Lurgi process) டிராவி டானுலாட், ஹப்மேன் (Drawe, Danulat, Hubman) வேலை போன்ற முன்னோடிகளின் அழுத்தத் தால், ஆக்சிஜனுடன் சேர்த்து நிலக்கரியை முழுமை யாக வளிமமாக்கம் செய்யும் கருத்து, செயல்முறைப் படுத்தப்பட்டது. இம்முன்னோடி வேலைகள் செய் யப்பட்ட காலத்தில், வேதியியற் பொறியியலின் மற்ற துறைகளிலிருந்து, எவ்வித உதவியும் பட்டறி வும் பெறாத போது, குறிப்பிட்ட தொழில் நுட்பம் உருவாக்க வேண்டியதாயிற்று. வகையான நிலக்கரி வளிமமாக்கத்தின் வழியாக நகர வளி மத்தை ஆக்கம் செய்யும் புதிய துறை ஜெர்மனியில் தொடங்கப்பட்டபோது, நிலக்கரியின் தரத்தை உயர்த்துவதற்கான முறைகளாக, வெப்பப் படுத் திச் சிதைத்தல், குறைந்த அழுத்தத்தில் காற்றைச் செ சலுத்தி வளிம ஆக்கம் செய்தல், வளிமண்டல அழுத் தத்தில் ஆக்சிஜனைச் செலுத்தி வளிமமாக்கம் செய்தல் (விங்கலர் வளிமமாக்கி ) ஆகியன உருவாகின. உயர்ந்த வேலை செய்யும் திறத்தினைக் கொண்ட வளிம மாக்கி தாழ்ந்த, தரத்தினைக் கொண்ட நிலக்கரி யினை முழுமையாக வளிமமாக்கம் செய்து, நகர பணியாக வளிமத்தை ஆக்கம் செய்தலே முதற் அமைந்தது. இந்த வளிமம் குறைந்த 15% மீத்தேன் அளவினைக் கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் துணைவிளை பொருளான கரியினை அறவே தவிர்க்க வேண்டி இருப்பதாலும், எதிர் பாய்வின் வழி யாக வளிமமாக்கம் செய்தல் ஒரே வழியாயமைந்தது. எதிர் பாய்வுக் கோட்பாட்டினைப் பயன்படுத் தும், காற்றைச் செலுத்தி வளிமம் ஆக்கம் செய்யும் முறையினை ஒரு சோதனை மாதிரி முறையாக எடுத் துக் கொண்டாலும், தற்போதுள்ள லூர்கி வளிம மாக்கியினை உருவாக்குவதற்குப் பல்வேறுபட்ட பொறியியல் துறைகளிலிருந்து இணையான னேற்றங்கள் உருவாக வேண்டியதாயிற்று. முன் ஒரு சோதனைக் கருவியில், கடினமான வேலை செய்யும் நிலைகளில், அழுத்தத்தில் ஆக்சிஜனைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் தற்போதைய தரத் திற்குப் படிப்படியாக உருவாக்கப்பட்டதாகும். நிலக்கரியையும் சாம்பலையும் அடைக்கும் அறை கள் நிலக்கரியைப் பகிர்ந்திடும் அமைப்பு, சுழலும் தீத் தட்டு உலை, அழுத்தித் துடைத்துக் குளிர வைக்கும் அமைப்புப்போன்ற வளிமமாக்கியின் உறுப்புகள் முழு மையாக உருவாக்கப்பட்டு, பின்னர் அம்முறையின் மற்றைய வேதியியல், எந்திரப் பொறியியல் பண்புக் கூறுகளின் உருவாக்கத்திற்கு இணையாகப் புத் துருவாக்கப் படுகின்றன. வளிமமாக்க உருவாக் 17இல் கத்தில் முதன்மையான நிலைகள் படம் காட்டப்பட்டுள்ளன. தனித் தன்மை வாய்ந்த முதல் ஆக்கம் 1936 1954 C₂H₂O பழுப்பு நிலக்கரி 100. இரண்டாம் ஆக்கம் 3-ஆம் ஆக்கம் 1969 இலிருந்து 1965-1952 எல்லா நிலக்கரித் தாங்களும் நிலக்கரித் தரங்கள் கோக் ஆக நிலக்கரி 400-500 180-242- நிலக்கரி உட்செலுத்த கொள்ளவு, வளிமம் எல்லா நிலக்கரித் தரங்களும் 450-570 மி.மீ.பி.வெ.அ. மணி படம் 17 லூர்கி முறையில் பயன்படுத்தும் வளிமமாக்கி உருவாக்கமடைந்த நிலைகள். வேறுபடும் பண்பினைக் கொண்ட மூலப் பொரு ளாக, நிலக்கரி அமைகின்றது. இதன் பண்புகள் நிலக் கரி வளிமமாக்கி வடிவமைப்பிலும் இயங்கும் முறை யிலும் கீழ்ப்பாய் உலையமைந்த தொகுதிகளில் வளி மத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வளிமத்தைத் தூய்மையாக்கம் செய்வதற்கும் நல்ல விளைவினைக் கொண்டிருக்கும். வேறுபட்ட இயங்கு நிலைகளில், பல்வேறுபட்ட நிலக்கரிகளைக் கொண்டு பெற்ற பட்டறிவின் வழியாக, வளிமமாக்கம் செய்யும் கருவியின் இயக்கம் அறியப்பட்டது. உலகம் முழுவதி லிருந்தும் பெறப்பட்ட கோக், ஆந்திரசைட்டு, இளம் ஆந்திரசைட், துணைப்பிட்டுமன், இயல்பு நிலக்கரி, கெட்டியான நிலக்கரி போன்ற 60 தரங்களைக் கொண்ட நிலக்கரிகள் வெற்றிகரமாகச் செயல் முறைப்படுத்தப்பட்டன. நீராலியுடன் ஆக்சிஜன் கலந்த கலவை, காற்று டன் கார்பன்டை ஆக்சைடு கலந்த கலவை போன்ற கலவைகளைப் பரந்த எல்லையைக் கொண்ட வளிம மாக்கம் செய்யும் காரணிகளாகப் பயன்படுத்தி லூர்கி கருவி வளிமமாக்கம் செய்தது. இதனுடன் இக்கருவி, உலர்சாம்பல் நீக்கம் செய்வதற்கு ஏற்ற தாயும், அவ்வாறே நீர்மக் கசடினை நீக்கம் செய் வதற்கு ஏற்றதாயும் அமைந்தது. வளிமமாக்கம் முதன்மையான செயல்முறையா னும் அது வளிமப் பதப்படுத்தல், வளிமத் தூய் மைப்படுத்தல், துணை விளைபொருள் பதப்படுத்தல்,