உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலவெப்ப 489

நீர் அமைகின்றது. அழுத்தம் குறையும் போது, உயர் வெப்பநிலையிலும் உயர் அழுத்தத்திலும் கொதித்து நீராவியாகின்றது. இம்முறை நீரா வித் துளைகளிலும் கிணற்றின் பிரிக்கும் அமைப்புகளிலும் (well separators) நடைபெறுகின் றது. பிரிக்கும் அமைப்பிலிருந்து - வெப்ப நீர் அழுத்தத்துடன் வெளியேறி, பக்க வழிக் குழாயி லுள்ள கட்டுப்படுத்தும் துளையின் வழியாக அமை தியாக்க அமைப்பிற்குச் (silencer) செல்கின்றது. (படங்கள் 3,4). அழுத்தம் வளி மண்டல அழுத் தத்திற்கு அருகின் குறையும் போது, அதிகப் பருமன் அளவுள்ள நீராவி ஆக்கப்படுகின்றது. நீர் கழிவு நீராக வெளியேற்றப்படுகின்றது. நீராவி கோபு ரங்களின் உச்சிகளிலிருந்து வெளியேறுகின்றது. இத்தகைய நீராவி வெளியேற்றம் கழிவு நீராவியாக, அமைந்து இவ்விடங்களைக் காண வருபவர்கட்குத் தடுமாற்றத்தினை உண்டாக்குகின்றது. இத்தகைய நீராவி வெளியேற்றம் நீராவித் துறை முழுவதற்கும் மிகவும் சிறப்பியல்புடையதாய் அமைகின்றது. அதிக அளவு ஆற்றல் இழப்பாக இந்த நீராவி வெளியேற் றம் காணப்பட்டாலும் உண்மையிலே, இந்நீராவி எவ்விதப் பயன்பாட்டிற்கும் உதவுவதில்லை. உயர் அழுத்தக் கிணறுகளில், வெப்ப நீரின் அழுத்தத்தைத் திடீரெனக் குறைக்கும்போது, இடைப்பட்ட அழுத்த அமைப்பிற்கான நீராவியை உருவாக்க இயலும். வெப்ப நீரை ஓரளவிற்குப் பயன்படுத்துவதற்கேற்ற வாறு இம்முறை அமைகின்றது. வைரகி வயலில் முதன்மையான நீராவிக்குழாய் வழிகளின் (main steam lines ) மொத்த நீளம் 20 கி.மீ இற்கும் அதிகமானது. இக்குழாய்களின் விட்ட அளவு 50 செ.மீ. முதல் 75 செ.மீ வரையாகும். இத்துடன் கிளைக்குழாய் வழிகள் பல கி.மீ. கூடுதலாக அமைக் கப்பட்டுள்ளன. வைரகி வயலும் அதற்கு அருகேயும், நில வெப் பத் திறனைப் பெறுவதற்கான வேலைகள், நியூசிலாந் தின் நில வெப்ப மூலத் தேவைகளில் ஒரு சிறிய பகுதியினையே கொண்டதாகும். நியூசிலாந்தின் நில வெப்பத்திறன் தேவை 2000 மெகா வாட் என மதிப் பிடப்பட்டுள்ளது. வைரகி வயலில் நில வெப்பத் திறன் வழியாக மின் ஆக்கம் செய்வதோடல்லாமல் கலீரா (Kawerau) என்ற இடத்தில் மரக் கூழ் மற்றும் காகித ஆலைத் தொழிலுக்கு இத்திறன் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் இத்திறன் ரொட்டாரா (Rot- orua) என்ற நகரத்திலும், மற்ற வெப்பப் பகுதிகளி லும் வீட்டிற்கான பயன்பாட்டிற்கும், வணிகத் தொழிற்சாலைப் பயன்பாட்டில் சிறிய அளவிற்கும் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. அண்மை ஆண்டுகளில், மற்ற பல்வேறுபட்ட நில வெப்ப வயல்களில், ஆய்விற்கான துளைகள் போடப் பட்டன. இவற்றில் ஒன்றான பிராடுலாந்து என்ற ஆற்றல், நிலவெப்ப 489 படம் 3. அடிப்புறச் சுழல் காற்று வெளிவழியினைப்பயன் படுத்தும் ஒரு வகையான கிணற்றுத் தலைப்புற அமைப்பு. இடப் புறமாக இருக்கும் இரட்டைக் கோபுர ஓசை பரவாது இருக்கச் செய்யும் அமைப்பின் வழியாக நீரை முழுமையாகக் கட்டுப்படுத்துவதுடன் ஒலியை ஏற்கத் தக்க அளவிற்குக் குறைக்க வும் செய்கின்றது. நிலத்தின் முற்புறமாகக் கிணறு அமைந்துள்ளது. இக்கிணறு. பிரிக்கும் அமைப்புடன் அகன்ற வளைந்த குழாயின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. நீராவியும் நீரும் சாதாரண மையளிலகு விசை இயக்கத்தினால் பிரிக்கப்படுகின்றன. சுழல் காற்று அமைப்பிலிருந்து பாயும் நீராவியானது, சுழல் காற்று அமைப்பின் இடப்புறமாக அமைந்த பந்து வடிவான தடுத்து நிறுத்தக் கூடிய கொள்கலத்தில் சென்ற பின்னர் நிழற்படத்தின் வலப் புறமாகக் காணப்படும் கிளைக் குழாய் வழியாக முதன்மை யான நீராவிக் குழாய் வழியை அடைகிறது. தொடுகோட்டு நீர் வெளியேறு வழி நீர் உருள்கலனுடன் இணைக்கப்பட்டு அதன் பீன்னர் அமைதியாக்க அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இடத்தில் அமைந்த துளையான 150 மெகா வாட் வெளியீட்டிற்கு ஏற்றவாறு துளையிடப்பட்டுள்ளது. ஓரகைகோரக்கோ, ரிப்போரோவா. ரோட் டோக்காவா, டஹாரா,டிக்கோபியர், வையோட் டாபு, நகாவா (Orakeikorako, Reporoa, Roto Kawa, Tauhara, Tekopia, Waiotapu, and Ngawha) ஆகியன. மற்ற ஆய்விற்கானது துளைகள் இடப்பட்ட இடங்களாகும். நெடுந்தொலைவு வடக் கிலமைந்த நகாவாவைத் தவிர்த்து, இப்பகுதிகள் யாவும், வடக்குத் தீவின் வெப்பப் பகுதியில் அமை கின்றன. நியூசிலாந்தில் இதுவரை துளையிடப்பட்ட நில வெப்ப வயல்கள் யாவும், வெப்ப நீர் வயல்கள் (hot water fields) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அமையும் வெப்ப நிலைகளும் (formation tempera- tures) அதன் காரணமாக வெளியேற்றத்தின் தொகு வெப்ப அடக்கமும் (enthalpy of discharge) ஒரு