உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌,. நிலவெப்ப 507

கரைந்துள்ள கனிமப் பொருள்களும் (minerals) உப்புக்களும் வெப்படுத்தப்படுவதனால், அவற் றின் அடர்த்தி குறைகின்றது. ஊடுருவும் பாறை மேலமையும் போது, ஒரு வெப்பச்சுழல் அறை அல்லது அமைப்பு (covection cell or system) உரு வாக்கப்படுகின்றது. ஓர் உள்ளடங்கிய பகுதி தேவையாகும்போது, ஊடுருவாப் பாறை, (impe- rvious rock) அமைப்பின் மீது அது அமைய வேண்டும். இவ்வாறு அமையும்போது, நீர்ப் புறப் பரப்பிற்குத் தப்பிச் செல்வது தடுக்கப்படுகின்றது. மூடியுள்ள பாறையின் வெப்பச் சரிமானம் (thermal gradient) உயர்ந்த அளவில் காணப்படுகிறது. இவ் வெப்பச் சரிமானம், நிலவெப்ப அமைப்பின் மேற் பகுதிக்குள் வேகமாகக் குறைகின்றது. இப்பகுதியில் வெப்பச் சுழல் (convection) மிக்க அளவில் காணப் படுகின்றது. இதன் பின்னர் ஆழம் அதிகரிக்கும் போது, வெப்பநிலை வேறுபடுகின்றது. இவ்வெப்ப நிலை அடிப்படை வெப்பநிலையென (base temper- ature) அழைக்கப்படுகின்றது. அமைப்பின் இந்தப் பகுதி தேக்கமாக அமைகின்றது. தேக்கத்திலிருந்து புறப் பரப்பிற்கான ஒழுக்குகள், நீராவித் துளைக ளாகவும் (steam vents) வெப்ப நீரூற்றுக்களாகவும் (hot springs), நீராவி வெப்ப நீர்த்தாரைகளாகவும் வெளியேறும். இவை வெந்நீரூற்றுக்களாகவும் உயர் வெப்ப நிலையில் வளிமங்களையும் ஆவிகளையும் வெளிவிடும் எரிமலைப் பகுதியிலுள்ள துளைகளாக வும் (fumaroles) வெளிப்படுகின்றன. பிள கொண்ட ஆவி செறிந்த அமைப்புகள். இந்த வகையிலான அமைப்பில் தெவிட்டிய நீராவி முதல் சிறிதளவிலான மிகை வெப்ப நீராவி (வெப்பநிலை 250° செ; அழுத் தம் 30 முதல் 35 பார் (bar) வரை) (1 பார் - 108 நியூட்டன்/சதுர மீட்டர்) வரை உண்டாக்கப்படு கிறது. தேக்கமானது பொதுவாக, மிகவும் வுடைய அல்லது நுண் துளைகளைக் பாறைகளைக் கொண்டதாய் அமைகின்றது. 1000 முதல் 2500 மீட்டர் ஆழம் வரையில் ஒரு மணிக்குச் சில ஆயிரம் கிலோகிராமிலிருந்து 2,50,000 கிலோ கிராமுக்கும் மேலாகக் கிணற்றின் பாய்வு இடை வெளி அமைகின்றது.நீராவியில் நீர்மமாகாத வளிமங் கள் நீராவியின் 1. அளவிற்கும் குறைவான அளவு முதல் 5 அல்லது அதற்கும் மேலான அளவில் அமைகின்றன. தொடக்கக் காலங்களில் நீர்மமாகாத வளிமங்களின் அளவு மிகுந்த அளவில் காணப் படுகின்றது. ஆக்க அளவு அதிகமாக அதிகமாக இவ்வளவு குறைகின்றது இந்தத் தேக்கங்களில் நிலைத்த நீர்ம அழுத்தம் (hydrostatic pressure) மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. நில நீர் ஊடுருவுவதிலிருந்து (groundwater, infiltration ) இத்தேக்கங்கள் காப்பி டப்பட்டுள்ளன என்பதையே குறைந்த அளவிலான் நிலைத்த நீர்ம அழுத்தம் காட்டுகின்றது. இத் தேக் ஆற்றல், நிலவெப்ப 507 கங்கள் உயர் வெப்பநிலையுடன் கூடிய நீர்மம் மிகுந்த அமைப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டன் வென்று நம்பப்படுகிறது. இவ்வமைப்புகள் காலப் போக்கில் அவற்றின் குளிர்ந்த எல்லைகளில் கரைந்துள்ள பொருளான சிலிக்கா வீழ்படிவதால் காப்பிடப்படுகின்றன. நில மேற்பரப்பிலிருந்து கீழாக மெதுவாக நீர் சென்றடைவதால், நீராவி இடமும் (steam space) ஆழமான நீர்ம நிலையும் (deep liquid phase) அதன் காரணமாக மிகுந்த வெப்ப உவர்நீரும் (hot brine) உருவாகின்றன. அமைப்பின் கீழேயுள்ள மூலத்திலிருந்து வெப்பம் பெறப்படுகின்றது. இவ் வெப்ப மூலம் பாறைக் குழம்பு உட்புகுவதால் கிடைப்பதாக இருக்கலாம். கலிபோர்னியா, லார்டரல்லோ, இத்தாலி, ஜப்பானிலுள்ள மட்சுகாவா ஆகிய இடங்களிலுள்ள நீராவி, வெப்பநீர்த் தாரை வெளிப்படும் நீரூற்றுக் களமைந்த நீராவி வயல்கள், ஆவி செறிந்த அமைப் பிற்கு எடுத்துக்காட்டுக்களாகும். எல்லாத் தேக்கங் களின் பண்புகளும் ஒன்றாகவே இருக்கின்றன. நீராலி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற் றுக்களைக் கொண்ட தேக்கப் பாறைகள் கடினத் தன்மை மிகுந்து, மிகவும் முறிவடைந்த உருண்டை யான கூழாங்கற்களும் மணலும் சேர்ந்து உருவான கலவைப் பாறையையும் எரிமலைப் பாறைகளையும் கொண்டிருக்கும். லார்டரல்லோப் பகுதியில் நுண் துளைகளைக் கொண்ட சுண்ணாம்புக் கற்களும் டோலமைட்டுப் பாறை வகைகளும் (dolomite) கொண்ட தேக்கப் பாறைகள் உள்ளன. மட்சுகாவா வில், முறிவடைந்த எரிமலைப் பாறைகள் (volcanic rocks) தேக்கப் பாறைகளாக உள்ளன. நீர்மம் செறிந்த முத நீர்மம் செறிந்த அமைப்புகள்: அமைப்புகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். லாவதாக கிராமிற்கு 200 கலோரிகட்கும் அதிகமான உயர் தொகு வெப்ப அடக்க நீர்மங்களெனவும் இரண்டாவதாக இந்த அளவுக்கும் கீழமைந்த குறைந்த தொகு வெப்ப அடக்க நீர்மங்களெனவும் அவை பிரிக்கப்படுகின்றன. இத்தகைய பிரிவினால், மற்ற தேவைகளுக்கு மிகவும் பயன்படும் நீர்மங் களிலிருந்து, மின்திறன் ஆக்கத்திற்குப் பயன்படும் நீர்மங்களை வேறுபடுத்தலாம். நீர்மம் செறிந்த அமைப்புகளுக்கிடையேமைந்த முக்கியமான இயற்பியல் வேறுபாடு யாதெனில், நீர்ம அமைப்புகளிலுள்ள தேக்க அழுத்தங்கள், நிலைத்த நீர்ம அழுத்தங்களுக்கு அருகில் அமையும், அதாவது 1 மீட்டர் ஆழத்திற்கு 0.1 பார் அழுத் தத்தைக் கொண்டிருக்கும். நீர்மம் செறிந்த அமைப்பு களில் 1000 முதல் 25,000 மீட்டர் ஆழம் வரையில் 100 முதல் 250 பார் அளவில் அழுத்தங்கள் காணப் படும். ஆனால் இதனோடு ஒப்பிடும்போது ஆவி