ஆற்றல், நீர்மின் 519
அமைப்புக்களை வெட்டியெடுத்து ஆற்று நீர்ப்பாய் வினைத் திசை திருப்பிச் சில நேரங்களில் ஆற்றுப்பாய் விற்கு எதிரான திசையிலும் திருப்பி விடப்படு கின்றது. எடுத்துக்காட்டாக, பிரிட்டன் கொலம்பியாவில், ஆரம்பத்தில் கிழக்கே பாய்ந்து கரை ஓர எல்லையின் உயர்ந்த பனி படர்ந்த வயல்களில் வடிந்த நெச்சா கோ ஆற்றில் (nechako river) அணை கட்டப் பட்டுள்ளது. இப்போது இந்த ஆற்றின் நீர் மேற்கே ஒரு சுரங்க வழியாகப் பாய்ந்து பின்னர் பலநூறு மீட்டர் வரை கீழிறங்கி ஆயிரக் கணக்கான கிலோ வாட்டுகள் மின்சாரத்தை ஆக்கம் செய்த பின்னர் பசு பிக் கடலைச் சென்றடைகின்றது. நீர்மின் திறன் ஆக் கத்திற்குப் பின்னர் வடிந்த நீரினை மீண்டும் திருப்பிப் பயன்படுத்துவது வெற்றிகரமாக அமெரிக்க நாட்டில் மட்டுமன்றிப் பிற நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள் ளது.நீர் மின் திறன் ஆக்கத்திற்குப் பின்னர் வடிந்த நீரினை மீண்டும் திருப்பிப் பயன்படுத்துவதற்கேற்ற நிலைய இடங்களாக நியூயார்க்கின் மேற்குப்பகுதி, பென்சில்வேனியாவின் பேன் ஹாண்டில் பகுதி ஓஹியோவின் வடகிழக்குப் பகுதி ஆகிய இடங் களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்றோடொன்று பின்னி இணைக்கப்பட்ட தேக்கங்களின் வழியாக, வழக்க மாக அலெக்னி, ஓஹியே ஆறுகளுக்குப் பாயும் நீரினை வேறு வழியாகத் திருப்பி வடமேற்குத் திசையில் ஈரி ஏரிக்குக் கொண்டு சென்று 250 மீ அளவுள்ள நீரியல் உயரத்தை (hydraulic head) உண்டாக்க இயலும். அத்தகைய திட்டத்தினால் மிகவும் தேவை யான நீர்த் தேக்க அமைப்புகள் உண்டாக்குவதோடு கூடுதலான வெள்ளக்கட்டுப்பாட்டினையும் அலெக்னி ஓஹியோ ஆறுகளில் அடைய இயலும். நீர்மின் நிலையங்களை வகைப்படுத்துதல். நீர்மின் நிலையங்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத் தலாம். 1. நீரினைத் தடுத்து நிறுத்தப்பட்டபருமன் அளவின் இடைவெளியைப் பொறுத்து. (அ) தேக்க நிலையங்கள் (Storage plants) (ஆ) ஓடும் ஆற்றில் அமைக்கப்படும் நிலையங் கள் (run of river plants) 2. மொத்தத் திறன் அமைப்பில் (total power system) நீர்மின் பங்கினைப் பயன்படுத்துவதற்கான நிலை. (அ) உச்சச் சுமை நிலையம் (peak load plant ) (ஆ) அடிப்படைச் சுமை நிலையம் ( base load plant) (இ) தனித்த நிலையம் (isolated plant 3. நீர்மட்ட உயரத்தைப் (head) பொறுத்து (அ) உயர் நீர்மட்ட உயர உருவாக்கம் (படம் 2) உயரழுத்தக் குழாய் அணை ஆற்றல், நீர்மின் 519 மின் நிலையம் சுழலி படம் 2. நீர்மட்ட உயரத்தினைக் கொண்ட ஆற்று நிலையம். (ஹூவர் நயாகரா இடங்களில் நிறுவப்பட் டுள்ளதைப் போன்றது) ஆற்றுப்பாய்வு சுழலி படம் 3. குறைந்த நீர் மட்ட உயரத்தினைக் கொண்ட ஆற்று நிலையம், ( பான்வில்லி புனித லாரன்சு திட்டங் களைப் போன்ற வகையானது) (ஆ) இடைநிலை நீர்மட்ட உயர உருவாக்கம் (இ) தாழ் நீர் மட்ட உயர உருவாக்கம் (படம் 3) மேலும் காண்க, படம் 4. உயர் நீர் மட்ட உயரத்தினைக் கொண்ட ஒரு நிலையத்திலிருந்து, ஒரு தாழ் நீர்மட்ட உயரத் தினைக் கொண்ட நிலையம் எல்லா இன்றியமையாத கூறுகளிலும், வேறுபட்ட தனித்தன்மையான வடிவ மைப்பைக் கொண்டது. இடைநிலை நீர்மட்ட உயரத்தினைக் கொண்ட ஒரு நிலையம் இயங்கும் போது அதன் நீர்மட்ட உயரமானது உயர்ந்த அல் லது தாழ்ந்த நீர்மட்ட உயர எல்லையை நெருங்கும் போது உயர்ந்த அல்லது தாழ்ந்த நீர்மட்ட உயர நிலையத்தின் பண்புகளைக் கொண்டதாய் அமையும். உயர்ந்த, இடைநிலை மற்றும் தாழ்ந்த நீர்மட்ட