உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 ஆற்றல்‌, நீர்மின்‌

522 ஆற்றல், நீர்மின் கெப்ளான் சுழலியினை (kaplan turbine) அமெ ரிக்க நாட்டவர் தேர்ந்தெடுத்தனர். இக் கெப்ளான் சுழலிக் கதவிற்கான அதே கட்டுப்பாடுகளைக் கொண்டதாகத் தானியங்கி முறையில் அதன் அலகு கள் சரிசெய்யப்பட்டன. தூண்டு விசைச் சுழலியிலும், எதிர் வினைச் சுழலியிலும் தாக்குவிசைச் சுழலியினுடைய செயற் பாட்டினை எளிதில் புரிந்து கொள்ளலாம். தாக்கு விசைச் சுழலியில், அழுத்த மட்டு (pressure head) மூக்குக்குழலில் (nozzle) வேக மட்டாக (velocity head) மாற்றமடைவதை எளிமையாக அறியலாம். அதே போன்று நீர்ப்பாய்வினால் (stream of water) சுழலியின் வாளிகளுக்குத் தள்ளுதல் அல்லது தாக்கு விசையினை வழங்குவதை யும் நம்மால் புரிந்து கொள்ள இயலும். நீர்த் தாரையானது (jet) தொடுவரையாகச் சுழலகத்தின் (rotor) மீது செலுத்தப்படுகின்றது. எனவே இவ் வகையான சுழலி தொடுவரைச்சுழலகம் (tangential turbine) என்றும் அழைக்கப்படுகின்றது. செயல் விளைவுடையh என்ற உயர அளவில் கட்டற்ற மதகு வாயிலுள்ள வேகத்தைக் (spouting velocity) காட்டிலும் நீர்த்தாரையின் (jet of water) வேக மானது சிறிது குறைவானது. ஒரு பிரிக்கும் அமைப்பி னால் (splitter ) தூண்டு விசை வாளிகள் (impulse buckets) இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்பினால் அச்சுத் தள்ளுவிசைகள். (axial thrusts) தனித்தன்மை வாய்ந்த தாங்கிகளால் (special bearings) தாங்கப்படுவது தவிர்க்கப்பட்டு சமப்படுத்தப்படுகின்றன. தூண்டுவிசைச் சுழலிக்கும், எதிர் வினைச் சுழ லிக்குமிடையேயமைந்த முக்கிய வேறுபாடு யாதெ னில், தூண்டு விசைச் சுழலியில், சக்கரத்தில் பெறப் படும் முழுமையான திறனும் வேக வடிவில் அமைந் துள்ளது. ஆனால் எதிர்வினைச் சுழலியின் சக்கரத் தில் பெறப்படும் முழுமையான திறனும் பகுதி அளவிலே வேக வடிவிலும், அழுத்த வடிவில் பெரும் அளவிலும் காணப்படுகிறது. எதிர்வினைச் சுழலியில் சுழலகம் எஞ்சியுள்ள அழுத்தம் வேகமாக மாற்றமடைவதால், எதிர்வினைச் சுழலகத்துக்கு மிகுந்த அளவில் திருக்கம் (torque) கிடைக்கின்றது. நிலைத்த நிலையில் சுழலி நகரவொட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் கதவுகள் திறக்கப்படும் போது, குழாய் மூக்கிலிருந்து (nozzle) நீர் வெளி வரும் வேசுத்திலேயே சுழலியிலிருந்தும் நீர் வெளியே றும். இத்தடையினை நீக்கியும் குழாய் மூக்குகள் (nozzles) சுழலத் தொடங்கும்போது இவற்றிலிருந்து வெளியேறும் நீரின் தனி முதல் விரைவு (absolute velocity) குறைவடைவதைக் காண நேரிடும். இந் நிலையில் சுழலகத் (runner) திறனை உட்கவர்கின் றது. நல்லதொரு விரைவில் நீரினுடைய இறுதியான விரைவு, நீரானது சுழலகத்தைச் சுழல வைப்பதற் கேற்றதாய் அமையும். இந்த நேரத்தில், சுழலகத்தின் கதவுகளை அடைப்பதற்குச் சற்று முன்னர் அழுத்த வடிவில் நீரால் பெற்ற திறனின் 90% முதல் 95% வரை திறனைச் சக்கரம் உட்கவர்ந்து கொண்டிருக்கும். பிரான்சிஸ் சுழலியில் நீர்உட்புறமாகப் பாய்ந்து பின்னர்க் கீழ்ப்புறமாகப் பாய்ந்து பின்னர் இழுவைக் குழாய்க்குள் (draft tube) செல்கின்றது (காண்க. படம் 5). இயக்கத்தாங்கி திரும்பு முதன்மைக் கட்டுப்பாட்டு இயக்கவலுக்குறைந்த விசைத்திறன் உலோகப் புறணி சுருள் இயக்கி சுழலகம் வளையம் முதன்மைத்தண்டு- குழியின் உள்வரி நுழைவாயிற் கதவு வேக Nd வெளியேற்ற வளையம் வளையம் இழுவைக் குழாய் படம் 5. பிரான்சிஸ் சுழலியினுடைய உள் உறுப்புப் பகுதிகளைக்காட்டும் குறுக்குவெட்டு நீரியற் சுழலிகளைக் கீழ்க் கண்டவாறு வகைப் படுத்தலாம். 1) எதிர்வினைச் சுழலி (சுழலிகளைச் சுழலகத்துக்கு நுழைவதற்கு முன்னர் அழுத்த நிலையிலுள்ள நீர் பகுதியளவிலே வேகமாக மாற்றம் செய்யப் படுகின்றது.) அ) பிரான்சிஸ் சுழலகம் ஆ) முற்செலுத்து வகை சார்ந்த சுழலகம் (propeller turbine) 1. நிலைத்த அலகு வகை 2. சரி செய்யக் கூடிய அலகு வகை (எடுத்துக் காட்டாக, கெப்ளான் சுழலி) அச்சியல் பாய்வு வகை (எடுத்துக்காட்டாக, டேரியஸ் சுழலகம்) 4. மூலைவிட்டப் பாய்வு வகை (diagonal flow) 2. தாக்குவிசைச் சுழலி. (எடுத்துக்காட்டாக, பெல்ட்டன் சக்கரம், (pelton wheel). சுழலியின் சுழ