உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

526 ஆற்றல்‌ நுகர்வு

526 ஆற்றல் நுகர்வு ஆற்றல் வளங்களையே தொழிமயமாகாத சமுதா யங்கள் இன்றளவும் பேரளவில் சார்ந்திருக்கின்றன. இவ்வகைச் சமுதாயங்களில் சமுதாயங்களில் தனிமனித ஆற்றல் நுகர்வு மிகக்குறைவு. அதாவது, வாழ்வதற்குத் தேயைான உணவு ஆற்றலை விடச் சற்றுமட்டுமே அதிகமாக இருக்கும் இதற்கு நேர்மாறாகத் தொழில் வளர்ச்சி பெற்ற சமுதாயங்கள் நிலக்கரி, எண்ணெய் இயற்கைவளிமம் ஆகிய புதைபடிவு எரிபொருள் களையும் மின்சாரத்தையும் பேரளவில் பயன்படுத்து கின்றன. மேலும் அங்கு சராசரியாக ஒருவர் தம் உணவில் அடங்கியுள்ள ஆற்றலை விட ஏறத்தாழ நூறுமடங்கு ஆற்றலைப் பிறபணிகளுக்காகவும் உயர் வாழ்க்கைத்தர நலத்துக்காகவும் நுகர்கிறார். உணவு தீவனம் கழிவு அட்டவணை 1. 1979 இல் பல்வேறு ஆற்றலின் நுகர்வு இந்தியாவின் மொத்த நுகர்வின் விழுக்காடாகக் காட் டப்பட்டுள்ளது. எண் பயன்பாடு வாணிகம் 1.வீட்டுப் பயன்பாடுகள் 2. 3. தொழிற்சாலைகள் 4. பொதுவிளக்குகள் 5. மின் தொடர்வண்டிகள் 6. வேளாண்மை 7. பொது நீரேற்று மற்றும் சாக்கடை நீர் வெளியேற்றம் 8. மற்றவை விழுக்காடு 9.5 6.2 62.5 0.9 3.2 14.5 2.2 1.0 100.00 புதைபடிவ எரிபொருள் நீர்மின் திறன். உணவு தீவனம் கழிவு புதைபடிவ எரிபொருள், நீர்மின் திறன் (அ) தொழில்மயமான நாடுகள் (30% உலக மக்கள் தொகை] (ஆ) தொழில்மயமாகாத நாடுகள் (70% உலக மக்கள் தொகை) 1970 இல் ஒவ்வொரு சதுரமும் ஆண்டுக்கு 291.5 கி.வாட் மணி ஆற்றல் நுகர்வைக் குறிக்கிறது. படம் 1. ஆற்றல் நுகர்வு தொழில்மயமான நாடுகளில் பேரளவில் நுகரப்படும். புதைபடிவ எரிபொருள்கள், நீர்மின் திறன் ஆகிய வற்றின் அளவையும், தொழில் மயமாகாத நாடுகளில் நுகரப்படும் அளவையும் படம் 1. காட்டுகிறது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆற்றல் என்றாலே வெப்பம், ஒளி, மின்திறன் தகவல் தொடர்பு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் ஆற் றலைக் குறிப்பர். உணவு ஆற்றலைக் குறிப்பதில்லை. (இக்கட்டுரையிலும் உணவாற்றல் எடுத்துக் கொள் ளப்படவில்லை). ஒவ்வொரு வருடமும் நிலக்கரி, எண் ணெய், இயற்கை வளிமம், நீர்மின்திறன், அணுக்கரு ஆற்றல், வேறு வடிவ ஆற்றல் வகைகள் நுகரும் அளவைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் மொத்த ஆற்றல் நுகர்வின் அளவு ஓரளவுக்குத் துல்லி யமாகத் தெரிய வருகிறது. தானியங்களுக்கு அளிக்கப் படும் பெட்ரோல், டீசல் அளவுகள் போலச்சில ஆற் றல்கள் நுகர்வுகளுக்குச் சரியான பதிவுகள் கிடைக் கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு ஆற்றல் மின் வடிவில் அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் சமையல், வெப்பம், ஒளி, தொலைக்காட்சி, குளிர்பதனிகள் ஆகியவற்றிற்குத் தனித்தனியாக செலவிடப்படும் ஆற்றலின் விகிதங் களை மதிப்பிட மட்டுமே இயலுகிறது. 13.3 விறகு 1975-76 சாணம் 11-2 1982-83 2000-01 எதிர்கால அளவு வேளாண் கழிவுகள் படம் 2. இந்திய நாட்டு ஆற்றல் நுகர்வின் உட்கூறுகள்