ஆற்றல், பெட்ரோலிய 553
பொருளாதார இயக்க நிலைகளில் மீட்க இயலாத இயற்கை நில எண்ணெயின் மதிப்பீடு ஆகிய இரண்டையும் சேர்ந்ததாகும். இறுதியாக மீட்கத்தக்க வளங்கள். இது தற் போதுள்ள நிலஇயல் தொழில் நுட்பக் குறிப்பு களின் ஆய்வின் வழியாக ஒரு எண்ணெய் வயலி லிருந்து இறுதியாக உண்டாகக் கூடிய இயற்கை நில எண்ணெயின் மொத்த அளவு ஆகும். மீதமுள்ள வளங்கள். நிறுவப்பட்ட அல்லது இருக் கக் கூடிய வளங்களாக மதிப்பிடப்பட்ட இயற்கை நில எண்ணெய் அளவுகளிலிருந்து மதிப்பிட்ட நாளி லிருந்து கணக்கிடப்படும் நாள் வரையில் ஆக்கம் செய்த அளவினைக் கழித்த பின் கிடைப்பது மீத முள்ள வளத்தின் அளவாகும். உலகப் பெட்ரோலிய வளங்கள். அமெரிக்க ஒன்றிய தவிர உலகின் நாடுகளும் கனடாவும் மற்ற பகுதிகளில் இயற்கை நில எண்ணெய், அதனுடன் இணைந்த இயற்கைப் பொருள்களின் புள்ளித் தொகுப்பு தொடர்ந்து நம்பத் தகுந்த அடிப்படை யில் கிடைப்பது அரிதாக உள்ளது. தொகுத்து வழங் கும் மைய அமைப்பு இல்லாததும், அத்தகைய தகவல் களை இரகசியமாகச் சில நாடுகள் வைத்திருப்பதும் இதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும். நாடு களின் பாதுகாப்புப் போக்கிற்குப் பெட்ரோலிய வழங்கீடு முக்கியமாக இருப்பதோடல்லாமல் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியுடன் பெட்ரோலியத்தை வழங்க முன் வருகின்றன. அதேபோன்று அண்மை யில் சில நாடுகள் பெட்ரோலியத்தை வேற்று நாடு களிடம் முயன்று பெறுகின்றன. இவ்வாறாக, பெட் ரோலியத்தைப் பற்றி எளிதாகக் கிடைக்கும் புள்ளி விவரங்கள் பல்வேறுபட்ட பெட்ரோலியத் தொழில் நடைமுறைச் செயற்பாட்டிற்கு எல்லாநேரங்களிலும், தொடர்புடைய எல்லா நாடுகளிலும் விரும்பத்தக்க வாறு அமைவதில்லை. உலகம் முழுவதற்குமான மேம்பட்ட சார்பற்ற, புள்ளி விவரச் சுருக்கம், அமெரிக்க ஒன்றிய நாடு களின் நில இயல் அறிக்கைத் துறையின் நிலஇயல் ஆய்வறிக்கை 817 இல் கூறப்பட்டுள்ளது. இவ்வறிக் கையில் 120 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக் கைக்கான அடிப்படைத் தகவல்கள் அ. நாட்டின் மாநிலத்துறையினரது (U.S. Department to State) தகவல்களிலிருந்தும், ஒன்றிய நாடுகளின் அறிக்கை களுடன் (United Nations Reports) சேர்ந்தமற்ற பல் வேறுபட்ட வெளியிடாத அறிக்கைகளிலிருந்தும், சுரங்கங்களுக்கான செய்திகளை அறிவிக்கும் அமெ ரிக்க ஒன்றிய நாடுகளின் அலுவலகத்திலிருந்தும் (U.S. Bureau of Mines) இப்பொருட்களுக்கான வல் லுநர்களிடமிருந்தும், மற்றம் பல லான வெளியிடப்பட்ட குறிப்புகளிலிருந்தும், பெறப் எண்ணிக்கையி ஆற்றல், பெட்ரோலிய 553 பட்டவையாகும். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அட்டவணைச் சுருக்கங்கள் மெட்ரிக் டன்கள் அள வில் கூறப்பட்டுள்ளன. பீப்பாய்களிலிருந்து (barrels) மெட்ரிக் டன்கள் அளவிற்கான மாற்றுக் கூறு எண் conversion factor) ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபட்டாலும், சராசரிக் கூறாக (average factor) 7.3 பீப்பாய்கள் 1 மெட்ரிக் டன்னிற் குச் சமப்படுத்தப்படுகின்றன. அட்டவணை 8 இல் 1960 ஆம் ஆண்டு முதற் கொண்டு 1971 ஆம் ஆண்டு வரையில் 120 நாடு களின் வருடாந்திர எண்ணெய் ஆக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வகையைச் சார்ந்த பரந்துபட்ட விவரங்கள் கிடைப்பதில் மிகுந்த கால தாமதம் ஏற் பட்டாலும், கணிபொறி (computer) வழியாக விவரங்கள் தொகுக்கப்பட்டாலும், 2 இலிருந்து 4 ஆண்டுகள் வரை பெற்ற குறிப்புகளைக் கொண்டு, முழு அறிக்கையினைத் தயாரிப்பது அரிதாகவே தோன்றுகின்றது. படம் 5 இல், அட்டவணை 8 இன் மில்லியன்கள் மெட்ரிக்டன்கள் 2,000 2:400 2,000 1,600 1,200 800 0 தென் அமெரிக்கா ஐரோப்பா. வட அமெரிக்கா 20,000 16,000 12,000 சியா 8,000 உள்ள தீவுத் தொகுதி பசுபிக் பெருங் கடலிலும் அதற்கு அண்மையிலும் 1960 1982 1964 1966 1968 ஆப்பிரிக்கா 1970 1972 4,000 பீப்பாய்கள் அளவில் மில்லியன்கள்-42- கேலன் படம் 5. கண்டம் எண்ணெய் ஆக்கம். (1960-1971) குறிப்புகள் கண்டங்கள் குறிப்பிட்டு வரையப்பட டுள்ளன. இந்த வரைபடம், பல்லாண்டுகளில் பெட் ரோலிய ஆக்கம் உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றது. 12 ஆண்டுக் காலமாகப் படிப்படியாக ஆக்கம் செய் யப்பட்ட எண்ணெயின் அளவான 20334.8 மெட்ரிக் டன்களுடன் 86000 மெட்ரிக் டன்கள் அளவிற்கும் சிறிது குறைந்த, உலகம் முழுவதற்குமான நிறுவப் பட்ட வளங்களுக்கும், ஆற்றல் மிக்க எண்ணெய் வளங்களுக்குமான மொத்த மதிப்பீட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது விரும்பத்தக்கது, இந்தக் கால அளவை