ஆற்றல், பெட்ரோலிய 555
ஆற்றல், பெட்ரோலிய 555 இடைவெளியில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயைக் கழித்து மீதமுள்ள எண்ணெயைக் காலத்தொடக்கத் தின் கையிருப்பாகக் கருதும் போது, இந்தக் கை யிருப்பு வளமும், ஆற்றல் வாய்ந்த வளங்களும் 1960 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,06,000 மெட்ரிக் டன்கள் அளவு இருக்கும். அதாவது இந்தக் கால இடைவெளியில் கையிருப்பு வளங்களிலும், ஆற்றல் வாய்ந்த வளங்களிலும் 19. அளவு பயன் படுத்தப் பட்டுள்ளது. ஆண்டின் ஆக்க அளவு 3,000 மெட்ரிக் டன்களாக இருக்கும்போது, கையிருப்பு வளமும், ஆற்றல் வாய்ந்த வளங்களும் 86,000 மெட்ரிக் டன் கள் அளவில் இருக்குமெனக் கருத்தில் கொள்ளும் போது, நமக்குத் தெரிந்த பெட்ரோலிய மூலங்கள் 30 ஆண்டுகளுக்குள்ளாகவே தீர்வுற்றுவிடும். எண்ணெயே ஆக்கம் செய்யாத பல நாடுகள் உள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அவையாவன, ஆப்பிரிக்காவில் 25 நாடுகளும், ஆசி யாவில் 12 நாடுகளும், ஓசியானியாவில் 1 நாடும், ஐரோப்பாவில் 10 நாடுகளும், வட அமெரிக்காவில் 12 நாடுகளும், தென் அமெரிக்காவில் 2 நாடுகளும் ஆகும். இந்த நாடுகள் சில நேரங்களில் வளரும் நாடு கள் (developing nations ) என வகைப்படுத்தப்படு கின்றன. இந்த நாடுகளின் வளர்ச்சியும் பொருளா தார முன்னேற்றமும், ஏற்கெனவே குறைந்து வரும் வளங்களை மேலும் குறையச் செய்யவே வகை செய் யும். மேலும் பெட்ரோலிய ஆக்கம் மிக மிகக் குறை வாயுள்ள பல நாடுகளும் உள்ளன. அவை அட்ட வணை 8 இல் காண்பிக்கப்படவில்லை. அவையாவன ஆப்ரிக்காவில் 2 நாடுகளும்,ஆசியாவில் 4 நாடுகளும் (குறிப்பாகத் தொழில் துறையில் மிகவும் முன்னேற்ற மடைந்த ஜப்பான்) ஐரோப்பாவில் 6 நாடுகளும் ஆகும். எவ்வாறிருப்பினும், சில ஐரோப்பிய நாடுகள் அதிலும் குறிப்பாக இங்கிலாந்தும், நார்வேயும். பெட்ரோலியம் ஆக்கம் செய்யும் தங்கள் நிலையினை வடகடல் (North Sea) பெட்ரோலிய உருவாக்கங் களினால் மாற்றம் செய்ய வைக்கலாம். அட்டவணை 8இலுள்ள குறிப்புகள், படம் 6 இல் வரையப்பட்டுள்ளன. இப் படத்தில் பெட்ரோலியம் ஆக்கம் செய்யும் முதன்மையான நாடுகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அட்டவணை 8 - ஐ ஆய்வு செய் யும் போது, 120 நாடுகளுக்குள் மொத்த எண்ணெய் ஆக்கத்தில் 26/. அளவு, வட அமெரிக்காவிலிருந்து பெறப்படுவதையும், எஞ்சியுள்ள அளவு, முக்கியமாக ஆசியாவிலிருந்து பெறப்படுவதையும் காணலாம். ஆசியாக் கண்டத்தின் கீழ் சோவியத்து நாட்டில் எண்ணெய் ஆக்கம் அட்டவணைப்படுத்தியுள்ளதால், காண்பிக்கப்பட்டுள்ள போக்கு உறுதியாக மாற்றம் அடையும். சோவியத்து நாட்டின் புள்ளித் தொகுப்பு விவரங்கள் ஆசியாவுடன் சேர்க்கப்பட்டிருப்பதற்கான அடுத்தடுத்துச்சேர்க்கப்பட்ட ஆக்கம் மில்லியன்மெட்ரிக் டன்கள் 6,000- 1971 -40,000 5,000- 1970 -35,000 1969 30,000 4,000~ 1968) 25,000 1967 3,000- 1966 - 20,000 1965 2,000- 1964 1963 1,000-1962 0 1961 1960 அ.நா. வெனீசு வேலா நாடு சௌதி அரேபியா சோவியத்து குவய்த் லிபியா ஈரான் ஈராக் கனடா ஐக்கியஅராபிடி எமிரட்டுகள் -15,000 -10,000 -5,000 பீப்பாய்கள் அளவில் மில்லியன்கள் -42- கேலன் படம் 6 முதன்மையான ஆக்கம் செய்யும் நாடுகளின் அடுத்தடுத்துச் சேர்க்கப் பட்ட எண்ணெய் ஆக்கம் (1960 1970) காரணம்யாதெனில் அதன் முதன்மையான பெட்ரோ லிய ஆக்கமும், நன்கு அறிந்த வளங்களும் ஐரோப்பிய சோவியத் நாட்டின் (European Russia) வோல்கா யூரல்ஸ் மாவட்டத்தில் இருந்தபோதிலும், வோல்கா யூரல்ஸ் மாவட்டத்தின் தற்போதைய முக்கிய பங்கு போகப் போகக் குறைந்து சோவியத்து நாட்டின் மைய ஆக்கப்பகுதி முதன்முறையாக ஐரோப்பிய சோவியத்துப் பகுதியை விட்டு நீங்கும். அண்மையில் பெட்ரோலியம் ஆக்கம் செய்யும் போக்கு வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. பெட்ரோலிய ஆக்கம் இரட்டிப்பாக ஆக்குவதற் கான காலம் அதாவது 1960 ஆம் ஆண் டினை அடிப்படை ஆக்கக் காலமாகக் (base production period) கொண்டு, ஆக்கத்தினை இரட் டிப்பதற்கான தேவையான கால அளவு இதற்குச் சான்றாக அமைகின்றது. பெட்ரோலிய ஆக்கம் இரட்டிப்பாக ஆக்குவதற்கான காலம் ஆப்பிரிக்கா விற்கு 2 ஆண்டுகளாகவும், ஆசியாவிற்கு 7 ஆண்டு களாகவும், ஐரோப்பாவிற்குக் கால வரம்பு அற்றும், ஓஷியானியா (Oceania) விற்கு 2 ஆண்டுகளாகவும், வட, தென் அமெரிக்காவிற்கு 20 ஆண்டுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா