உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, பெட்ரோலிய 561

னங்களின் (petroleum fractions) கலப்பினைக் கொண்டதாகும். இதனுடன் ஒப்பிடும்போது, தற் காலத்திலுள்ள எரிபொருள்கள் வினையூக்கிச் சிதைத் தல் (catalytic cracking), ஆல்கைலேற்றம் (alkylation), வினையூக்கி மாற்றியமைத்தல் (catalytic reforming). பல்லுறுப்பாக்கங்கள் (polymerizations), சமமாற்றாக் கங்கள் (isomerizations) ஹைட்ரஜன் முன்னிலையில் சிதைத்தல் (hydro cracking) ஆகியவற்றின் வழியாகப் பெறப்படும் கலப்புக்களின் சிக்கல் வாய்ந்த கலவை (complex mixture of blends ) யாகும். இதனுடன் உள் கனல் பொறியின் (internal combustion engine) ஒட்டு மொத்தமான திறமையையும், நம்பத் தகுந்த தன்மையையும் மேம்படுத்துவதற்காகச் சிறிய அளவு களில் சேர்க்கைப் பொருள்கள் (additives) சேர்க்கப் படுகின்றன. 1925 ஆம் ஆண்டு முதற்கொண்டு 1950 ஆம் ஆண்டு வரை, பொறி அமைப்புகளின் அமுக்க விகிதம் (compression ratio) மெதுவாகவும், ஒரே சீராகவும் உயர்ந்து வந்துள்ளது. 1950 ஆம் ஆண்டின் போது இத்தகைய உயர்வு மிக உயர்வாக அமைந்து, 1960ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்தில் இவ்வுயர்வு சம நிலை அடைந்தது. ஒட்டுமொத்தமான எந்திரத் தின் செயல் திறத்தையும் அதன் திறமையையும் மேம் படுத்துவதற்காகவே இவ்வமுக்க விகிதம் உயர்த் தப்படுகின்றது. அமுக்க விகிதத்தை உயர்த்து வது எரிபொருள் உட்கூறில் நேரடியான விளைவு களைக் கொண்டுள்ளது. ஏனெனில் அமுக்கவிகிதத்தை உயர்த்தும்போது, உள் வெடிப்பினைத் (knocking) தடுப்பதற்கு, எரிபொருளின் ஆக்டேன் எண்ணை (octane number) உயர்த்துவது தேவையாகின்றது. காரீய ஆல்கலைகளைச் (lead alkyls) Cen தனால், பகுதி அளவில் ஆக்டேன் எண்ணை உயர்த்த இயலும். ஆனால் பெரும்பாலும், பெட்ரோலியம் தூய்மைப்படுத்தும் முறைகளில் மாற்றங்கள் செய்து ஆக்டேன் எண் உயர்த்தப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் இல்லாதிருக்கும்போது, ஒரு பீப்பாய் இயற்கை நில எண்ணெயிலிருந்து கிடைக்கக்கூடிய கேசொலினின் அளவு. மிகக் குறைவாய் இருக்கும். செயல்திறக் குறிக்கோள்களை அடைய உதவு பயன்படுத்தும் உருக்குலைவு தானியங்கிகளுக்குப் வதற்காகத் கேசொலினில் (automotive gasoline) மற்ற மாற்றங் களும் 1950 ஆம் ஆண்டிலும், 1960 ஆம் ஆண்டி லும் செய்யப்பட்டன. காற்று எரிபொருட் கலப்பியில் (carburetor) பனிக்கட்டி உருவாவது உண்டாவது (Icing and fouling) கட்டுப்பாட்டிதழ் களிலும் பொறிகளிலும் படிவுப் பொருள்கள் படிவது தீப்பொறி உண்டாக்கு அமைப்புகளில் உருக்குலைவு (spark plug fueling) எரிபொருள் அமைப்புக் கரிப்பு fuel system corrosion) குறைந்த எரிபொருள் பகிர் வீடு (poor fuel distribution) போன்ற பிரச்சினை களைக் குறைப்பதற்கு உதவுவதற்காக, கூட்டுப் பொருட்கள் (additives) உருவாக்கப்பட்டுள்ளன. ஆற்றல், பெட்ரோலிய 561 இக்கூறுகள் யாவும், தற்காலத்தில் மிகவும் சிக்கல் வாய்ந்த கேசொலின் உருவாக்கங்களைச் (gasoline formulation) செய்யத் தூண்டுகின்றன. 1960 ஆம் ஆண்டு முதற்கொண்டு, சுற்றுச் சூழல் பற்றிய பிரச் சினைகள் (ecological problems) கேசொலின் பயன் பாட்டுடன் இணையத் தொடங்கின. உட்கனல் பொறியில் கேசொலினை எரியவைக்கும்போது எரியாத ஹைட்ரோக் கார்பன்களுடன், சிறிய அளவு களில் கார்பன் மோனாக்சைடும், நைட்ரஜன் ஆக்சை டும் உருவாக்கப்பட்டு வளிமண்டலத்திற்கு வெளி யேற்றப்பட்டன. எரிந்தபின் தோன்றும் பேரளவுப் பொருள்கள் கார்பன்-டை-ஆக்சைடும் நீரும் ஆகும். 1970 ஆம் ஆண்டின் நடு முதற் கொண்டு அதன் இறுதிவரை எரிபொருள் தொழில் நுட்பத்தில் (fuel technology ) புதிய முறைகளைக் கண்டறிய தூண்டல் ஏற்பட்டது. புதிய எரிபொருள் தேவையினைக் கொண்டு புதிய தானியங்கிகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தினாலும் பழைய வகையைச் சார்ந்த தானியங்கிகளுக்குத் தேவையான எரிபொருள்களை உருவாக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது. தற்போதுள்ள கேசொலின் தரங்களின் (grades of gasoline) தேவையுடன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதியதரங்களைக் கொண்ட கேசொலின் களும் தேவைப்படலாம். 1965 உண் எதிர் உள் வெடிப்புப்பண்பு. ஊடாட்டப் பொறி யின் (reciprocating engine) தீப்பொறியை டாக்கும் அமைப்பின் வழியாக (spark ignition) எரி பொருளைத் தீப்பற்றவைக்கும் முறையில், மிகவும் திறமையான பயன்பாட்டினைப் பெறுவது நீண்ட நாள் போக்காக உள்ளது. இத்தகைய போக்கு முதல் வரையிலான உச்ச ஆண்டுகளில் நிலையை அடைந்தது. 1971 ஆம் ஆண்டிலும் 1972. ஆம் ஆண்டிலும்,அமெரிக்க நாடுகளின் பயணிகளுக் கான வண்டிகளின் பொறிகளின் அமுக்கவிகிதம் குறைக்கப்பட்டது. பெட்ரோலியம் தூய்மையாக்கும் அமைப்புகளால், மிக்க அளவில் ஆக்கம் செய்த நல்ல ஆக்டேன் பண்பினைக் கொண்ட காரீயம் கலக்காத கேசொலினைக் கொண்டு (unleaded அமுக்கவிகிதம் gasoline) இயக்குவதற்கேற்றவாறு, ஆய்வு குறைக்கப்பட்டது. இத்தகைய பண்பு, ஆக்டேன் எண் (ஆ. ஆ. எ.) (research octane number RON) 91 எனவும், உந்துவண்டி ஆக்டேன் எண் (உ.ஆ.எ) (motor octane number MON) 83 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. (ஆக்டேன் எண் என்பது பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது.) காரீயத்திற்கு மிக்க உணர்வினைக் கொண்ட வினையூக்கப் பொருள்களைக் (catalytic reactors) கொண்ட புதிய வண்டிகளுக்காகக் காரீயம் கலக்காத கேசொலின்களை வழங்கும் தேவையுடன், தானியங்கி பொறிகளில், காரியப் பேருந்துகள்கள் வெளிப்பாட்டி