உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 ஆற்றல்‌, பெட்ரோலியம்‌

570 ஆற்றல், பெட்ரோலியம் திறனாக்கப்பட்ட எரி அள விமானத்திற்கு தாரையால் குறைந்த உயரத்திலும் உயர்வேகத்திலும் உயர் பருமன் வெப்ப அளவினைக் (high volumetric heat content) கொண்ட எரிபொருள் தேவையாகின்றது. அமெரிக்க ஒன்றிய நாட்டின் விமானப்படையினர், உலோகப் பொருள்கள் கலந்த அரை நீர்மக் கலவை சார்ந்த எரிபொருள்கள் (slurry fuels) உருவாக் கத்தை இத்தகைய மேற்கொண்டுள்ளனர். பொருளை எரிவிக்கும்போது, இதிலுள்ள உலோகப் பொருள்களும் எரிந்து உலோக ஆச்சைடுகள் (metal oxides) உருவாகும் உயர்ந்த வெப்பத்தினால் நன்மை பெறுவது அவர்களது குறிக்கோளாக உள்ளது. மிக்க அளவில் இயலத்தக்க உலோக வினைக் கொண்ட எரிபொருள் உருவாக்கத்திற்கான ஆராய்ச்சி முயற்சிகள் தொடர்கின்றன. இத்தகைய எரிபொருளை,ஏற்றும் போது கிடைக்கும் குறைந்த திறமை சிராய்ப்புத்தன்மையும் குறைந்த எரியும் திறமும் (low combustion efficiency) ஆகிய பிரச்சி னைகளை வெற்றி கொள்ளவும் ஆராய்ச்சி முயற்சி கள் தொடர்கின்றன. மற்றொரு நம்பிக்கையூட்டும் பகுதியாக உயர் அடர்த்தி எரிபொருள்கள் உள்ளன. அவையாவன, அரோமாட்டிக் குறுக்கப்பட்ட பல் வளைய ஹைட்ரோ கார்பன்கள் ஆகும். மிகவும் விரும்பத்தக்க பொருள் ஒரு கேலனுக்கு 150 000 பி. வெ. அலகுகளும் அதற்குக் கூடுதலான வெப்ப மதிப்பைக் கொண்டதாயும், அதனுடைய உறைநிலை (freezing point) - 45.6 செ. அல்லது அதற்குக் குறைவாகக் கொண்டதாயும் இருக்கவேண்டும். அடுப்பு எரிபொருள் எண்ணெய்கள். 1955 ஆம் ஆண்டு, அமெரிக்கப் பெட்ரோலியக் கழகமும் அமெரிக்க நாட்டின் சுரங்கங்களுக்கான செய்திகளை அறிவிக்கும் அலுவலகமும் (U. S. Buseau of Mines ) அடுப்பு எரிபொருள் எண்ணெய்களுக்கான ஆய் வினை (burner fuel oils) முதன் முறையாக வெளி யிட்டன. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் விற்கப் படும் அடுப்பு எரிபொருள் எண்ணெயின் பண்பு களைப் பற்றிய தகவலினை வழங்குமாறு தேசிய எண்ணெய் எரிபொருள் கழகம் (National Oil Fue Institute Inc.,) கேட்டுக்கொண்டதனால் இதற் கான வேலை தொடங்கப்பட்டது. பகுப்பியலான குறிப்புகளை (analytical data), வெப்பப்படுத்தும் சாதனங்களைத் தயாரிப்பவர்களும், ( manufacturers of heating appliances) பயனீட்டாளர்களும், மற்றும் அரசுத்துறையினரும் பல பயன்படுத்துகின்றனர். ஒரு வகையான ஆய்வில் அமெரிக்க ஒன்றிய நாடு களில் முழுவதுமாக உள்ள 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டிலமைந்த தூய்மையாக்கம் செய்பவர்களி லிருந்து, 30 பெட்ரோலியத் தூய்மையாக்கம் செய் பவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்க்கு அடுப்பு எரி பொருள் எண்ணெய் மாதிரிகள் எடுத்துக் காட் டப்பட்டன. இந்த ஆய்வு ஆறுவகையான எரி பொருள்களைக்கொண்டு செய்யப்பட்டது. வட்டார அடிப்படையில் (regional basis) குறிப்புகள் தொகுக் கப்பட்டு வெளியிடப்பட்டன. டிற்கு படும் வீட்டை வெப்பப்படுத்துவதற்கான எண்ணெய். வீட் வெப்பப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப் எண்ணெய் தூய்மையுடையதாய் இருக்க வேண்டும். இத்தகைய எண்ணெயினைத் தேக்கிவைக் கும்போது படிவினை உண்டாக்காததாயும் எரிவித்த பின்னர் சாம்பலையோ, மற்ற படிவுப் பொருள் களையோ, குறிப்பிடத்தக்க அளவில் உண்டாக்காத தாயும் இருக்க வேண்டும். இந்த எரிபொருளைக் குறைந்த வெப்ப நிலைகளில் தேக்கிவைக்க இயலு மாதலால், குளிர்கால மாதங்களில்வெளிப்புற இடங், களில் தேக்கி வைக்கும் போது அது நீர்மமாக இருக்க வேண்டும். புகை வெளிப்பாட்டினைக் குறைப்பதற் காக எண்ணெயின் வேதியியற்உட்கூறினை (chemical composition) கட்டுப்படுத்த வேண்டும். முன்னொரு காலத்தில் முக்கியப் பிரச்சினையாகக் கருதப்படாத உட் பொருளான கந்தகம் தற்போது முக்கியம் வாய்ந்ததாய்க் கருதப்படுகின்றது. 1950 சிறிய வணிக இடங்களை வெப்பமூட்டுவதற் காகவும், வீட்டினை வெப்பமூட்டுவதற்காகவும். மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தும் வெப்பப்படுத்து வதற்கான எண்ணெய்க்கு எரிபொருள் எண்ணெய் தரம் எண் 2 எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பெட்ரோலிய விளைபொருள், வடிக்கப்பட்ட விளை பொருளாகும். இது 177% முதல் 343% செ. வரை கொதிக்கும் இடைவெளியில் (boiling range) பின்ன மாக்கப்படுகின்றது. ஆம் ஆண்டு முதற் கொண்டு, வீட்டை வெப்பப்படுத்துவதற்கான எண் ணெய்களின் பண்பினை மேம்படுத்துவதற்காகவும், அவற்றை ஆக்கம் செய்வதற்காகப் பயன்படுத்தும் தயாரிப்புத் தொழில்நுட்பங்களிலும் குறிப்பிடத் தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக் கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையாக்கும் அமைப்புகளிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட பொருளுடன் கலப்புப் பொருள்களைச் சேர்த்து எரி பொருளின் தேவையினை நிறைவு செய்வதற்கு ஏற்ற வாறு வெப்பப்படுத்துவதற்கான எண்ணெய் எண் 2 இனை உருவாக்கினர். இவ்வாறாகப் பெறப்பட்ட பொருள் நல்ல நிலைத் தன்மையுடையதாயும் (stability) அதன் செயல்திறம் (performance) மிக நன் றாகவும் அமைந்தது. தூய்மையாக்கும் தொழிற் சாலை, உயர்ந்த ஆக்டேன் அளவிற்கு, உந்துவண்டி களுக்கான கேசொலினைப் பெரிய அளவில். ஆக்கம் செய்ய வேண்டியிருந்ததால் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கைவளிய எண்ணெயினை virgin gas oils) குறைந்த கொதிநிலை கொண்ட பொருட்களாக (lighter boiling products) மாற்றம் செய்வதற்குச் சிதைத்தல் முறைகள் (cracking processes) உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக