576 ஆற்றல், பெட்ரோலிய
576 ஆற்றல், பெட்ரோலிய களின் (petro chemical feed stock) தேவை ஓர் ஆண்டிற்கு 10·/. வீதம் அதிகமாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட கருத்துக்கள், தற்போதுள்ள வாழ்க்கைத் தரங்களையும் வாழ்க்கைப் பாங்கினை யும் நீண்டகாலத்திற்கு நீட்டிப்பதன் அடிப்படையில் தோன்றுவனவாகும். திறன் தேவைகளைப் பாதிக்கும் உலகம் முழுவதற்குமான அரசியல் நடவடிக்கை களும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதி முறை களும், பொருளாதாரத்தின் மற்றைய கூறுகளும் இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டனவாகும். பெட்ரோலியப் போக்குவரத்து. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் வயல்களிலிருந்து இயற்கை நிலை எண் ணெயைத் தூய்மைப்படுத்தும் இடங்களுக்குக் கொண்டு செல்வதும், அதே போன்று தூய்மையாக் கப் பட்ட விளைபொருள்களை விற்பனையாகும் மைய இடங்களுக்குக் கொண்டு செல்வதும், ஒரு காலத்தில் இருப்புவழிப் போக்குவரத்தைப் பெரி தும் சார்ந்தனவாக இருந்தன. 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருப்புப் பாதைக்கான தேக்கக் கலங்களின் (rail road tank cars) பயன்பாடு மிகவும் குறைந்து கொண்டு செல்லத் தக்க மொத்தப் பெட் ரோலிய அளவில் 11. அளவே இருப்புப் பாதை வழியாகக் கொண்டு செல்லப்பட்டது. இதன் பிறகு, 1974 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பெட்ரோலியக் கழகம், பெட்ரோலியத்தை இரயில் வழிப்பாதை வழியாகக் கொண்டு செல்லும் உறுப்பினர்களைப் பதிவு செய்தது. இவ்வுறுப்பினர்கள் தங்கள் பெட் ரோலியத் தேக்கக் கலங்களின் தொடர்களில் (petro- leum rail car fleet) 40000 தேக்கக் கலங்களைப் பயன்படுத்தினர். 1900 ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழாய் வழிகள் ஒரே சீராக விரி வாக்கப்பட்டன. குழாய் வழியாகவும் நீர்வழிக் கப்பல்கள் வழியாகவும் (பெரிய விசைப் படகுகளி லும் மற்றும் ஒவ்வொரு கடற்கரைக்குமான எண் ணெய்க் கப்பல்களிலும் (barges and coast wise tankers) பெட்ரோலியத்தைக் கொண்டு செல்வது மிகவும் சிக்கனமுடையதாக அமைந்தது. 1900 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருள்கள் குழாய் வழியாக 6800 மைல்கள் வரையில் கொண்டு செல்லப்பட்டன. இந்த அளவானது 1919 ஆம் ஆண்டில் 24,400 மைல்களாக உயர்ந்தது. அந்தக் காலங்களின் போதுதான் இரண்டு முதன்மையான தொழில் நுட்பப் போக்குகளின் காரணமாகக் குழாய் வழிப் பயன்பாடு உயரலாயிற்று. அவையாவன, (1) பெரிய விட்ட அளவிலான குழாய்கள் பரந்த அளவில் பயன்படுத்தல், தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குழாய் வழிகள் 7.5 செ.மீ முதல் 15 செ.மீ விட்ட அளவினையுடையவையாய் இருந்தன. இதன் பின்னர் 20,25,30 செ.மீ குழாய் கள் பயன்படுத்தப்பட்டன. (2) குழாய் வழி நெடுகி லும் உள்ள நிலையங்களில், நீராவியால் இயக்கப் படும் மாதிரிகளைச் சார்ந்த (steam-driven models) எக்கிகளுக்குப் பதிலாக மிகவும் திறமை வாய்ந்த டீசல் எக்கிகள் நிறுவப்பட்டன. 1906 ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கான குழாய் வழிகள். அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அனைத்து மாநில வாணிகப் பொறுப்புக் குழவின் (Inter State Commerce Commission) ஆட்சி எல்லைக்குள் வந்தது. அந்நாள் முதல் இந்நாள் வரை இக்குழுவே குழாய் வழிகளுக் கான ஆட்சிப் பொறுப்பைத் தன்னகத்தே கொண் டுள்ளது. 1920 ஆம் ஆண்டில் தேசிய இணை அமைப் பில் (national net work), 19872 மைல்கள் அளவில் கூடுதலான குழாய் வழிகள் அமைக்கப்பட்டன. இ பத்தாண்டுக் காலத்தில் பெறப்பட்ட முதன்மையான நன்மைகள் வருமாறு. (1) குழாய் வழிகளை இணைக் கும்போது ஒரு குழாயுடன் மற்றொரு குழாயை இணைப்பின் வழியாக (coupling) இணைப்பதற்குப் பதிலாகப் பற்ற வைத்துப் பிணைக்கப்பட்டது (wel- ded) (2) அனைத்து பற்றவைத்துப் பிணைக்கப்பட்ட குழாய்களுக்குப் (lapwelded pipe) பதிலாக உயர் கார்பன் அளவைக் கொண்ட எஃகுக் (high earbon steel) குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. (3) மின் ஊட்டப்பட்ட எக்கிகள், டீசல் எக்கிகளை மாற்றம் செய்தன. 1930 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு முன் னரும், உள் மாநிலங்களுக்கிடையே, கூடுதலாக 20000 மைல்கள் நீள அளவில் குழாய் வழிகள் நிறு வப்பட்டன. இக் குழாய் பெட்ரோலியம் தூய்மை யாக்கும் அமைப்புக்களுக்குப் பெட்ரோலியத்தை நாடு முழுவதும் கொண்டு சென்றது. 1930 ஆம் ஆண்டில், தூய்மையாக்கப்பட்ட பெட்ரோலிய விளை பொருட்களைக் குழாய் வழியாகக் கொண்டு சென்றதனால், இரயில் வழியாகக் கொண்டு செல் லும் அளவு குறையலாயிற்று. 1937 ஆம் ஆண்டின் விலை ஒப்பீடு, இந்தப் போக்கை நன்கு விவரிக்கும். விலை ஒரு டன் மைலுக்கானது, (cost per ton mile) சரக்கு வண்டிகளில் 4.873 சென்டுகள் (cents) இரயில் வழியாக, 1.640 சென்டுகள், எண்ணெய்க் கப்பல் அல்லது பெரிய விசைப் படகு (tanker or barge) வழியாக 0.063 சென்டுகள், பெட்ரோலியப் பொரு ளுக்கான குழாய் வழியில் 0.527 சென்டுகள் (1 சென்டு டாலர்;1 டாலர் = ரூ.12.00). (cent = 1000 1930 ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான குழாய் வழிகள் தோன்றியமையால் பொருள்களைக் கொண்டு செல் வதற்கான துறையில் குழாய் வழி அமைப்பு ஒரு புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டது. இதன் கார ணமாக விலைபோகும் மைய இடங்களில் அமைந்த