உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌ மாற்றம்‌ 585

-+E +m, c2 -moC2 -E அழிவு ஆக்கம் துளை பாசிட்ரான் படம் 4. இரட்டைத் துகளாக்கமும் அழிவும் நேர் ஆற்றல் நிலையிலுள்ள ஓர் எலக்ட்ரான் எதிராற்றல் நிலையிலுள்ள வெறுமையை அடைக் கத் தாவும்போது, எலக்ட்ரானும், பாசிட்ரானும் சந்திக்கின்றன. அவை உடனே ஒன்றையொன்று அழித்துக்கொண்டு மறைந்துவிடுகின்றன. அப் பொழுது 2mc அளவு ஆற்றல் தோன்றும். இச் செயல் இணைத்துகள் அழிவு (pair annihilation) எனப்படும். இதுவும். இணைத்துகளாக்கமும் ஐன்ஸ்ட்டைனின் பொருண்மை ஆற்றல் இணை மாற்றுத் (mass energy equivalerce) தத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. கீழ்க்காணும் படம் இவற்றை விளக்குகின்றது. நூலோதி ஏ.நடராஜன் 1.A.Beiser, Concepts of Modern Physics, McGraw Hill International Book Company, New York. 1973. 2.H.D.Young, Fundametals of Waves, Optics and Modern Physics, McGraw-Hill International Book Company, New York, 1976. ஆற்றல் மாற்றம் ஆற்றலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத் திற்கு மாற்றும் செயல்முறை ஆற்றல் மாற்றம் ஆகும். இயற்கையில் எண்ணிறந்த முறைகளில் ஆற்றல் மாற்றம் நடைபெறுகிறது. சூரிய ஆற்றல் நீரை ஆவியாக்குகிறது. மேலும் அது புதைவு எரி ஆற்றல் மாற்றம் 589 பொருளின் வெப்ப ஆற்றலாகத் தேங்குகிறது. தொழில் நுட்ப உலகில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரியை எரித்து வேதியியல் ஆற்றல் மின்னாற்ற லாக மாற்றப்படுகிறது. தானியங்கிப் பொறிகளில் எரிபொருளின் வேதியியல் ஆற்றல் பொறியின் ஊர்தி ஓட்ட ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஏவூர்தி உந்து எரிபொருள்கள் எரிவதால் ஏவூர்திகளுக்கும் இயக்க ஆற்றல் கிடைக்கிறது. அடிப்படையான ஆற்றல் மாற்றத்திற்கான அறிவியல் கோட்பாடுகள் பல உள்ளன. அவை யாவன, ஆற்றல் அழியாமை விதி, லெப்ப இயங்கிய லின் இரண்டாம் விதி, பெர்னெளலி கோட்பாடு, கிப்சின் கட்டிலா ஆற்றல் உறவு ஆகியனவாகும். மாற்றுதற்கியன்ற ஆற்றல் வகைகளாவன, வேதி யியல் ஆற்றல், அணு ஆற்றல்,மின் ஆற்றல், எந்திர இயக்க ஆற்றல், ஒளி ஆற்றல், நிலை ஆற்றல், அழுத்த ஆற்றல், இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றல், என்பனவாகும். சிலவகை ஆற்றல் மாற்றங்களில் 100% திறமை கிடைக்கிறது. சிலவகைகளில் கோட் பாட்டியலான திறமையும் கூட 100 விழுக்காட்டுக்கு மிகத்தொலைவிலேயே அமைகிறது. உ நடைமுறை மின்னாக்கியில் காந்தப்புலத்தில் லோகக் கடத்திகள் இயங்கி இயக்க ஆற்றலை மின்னாற்றலாக 95% முதல் 99% வரையிலான திறமையுடன் மாற்றுகின்றன. ஒரு தானியங்கிப் பொறியில் 20% திறமை மட்டுமே கிடைக்கிறது. இவ் வகையில் அடைய முடிந்த கருத்தியலான திறமை 60% மட்டுமே ஆகும். காண்க, கார்னோச் சுழற்சி நீராவி அனல் மின் நிலையங்களில் எரிபொருளின் வேதியியல் ஆற்றல் மின்னாற்றலாக மாறுவதற்குள் பலவகை மாற்றங்களை அடைகின்றது. முதலில் கொதிகலன் அடுப்பில் எரிபொருள் எரிந்து வெப்ப ஆற்றலைத் தருகின்றது. இந்த வெப்ப ஆற்றல் கொதி கலனில் நீராவியின் வெப்ப ஆற்றலாக மாறுகிறது. நீராவியின் வெப்ப ஆற்றல் சுழலியில் நீராவித் தாரை களின் இயக்க ஆற்றலாக மாறுகிறது. தாரைகளின் இயக்க ஆற்றல் சுழலிகளின் இயக்க ஆற்றலாகவும் சுழலிகளின் இயக்க ஆற்றல் பிறகு மின்னகத்தில் மின் ஆற்றலாகவும் மாறுகின்றது. இது ஒரு சிக்கலான பன்மைச் செயல்முறை ஆற்றல் மாற்றத் தொகுதியாகும். காண்க, மின் திறன் நிலையங்கள், மின் திறன் ஆக்கம். மேற்கூறிய ஆற்றல் மாற்ற முறைகளில் உள்ள சில படி நிலைகளைக் குறைக்கும் முயற்சி வானியக் கவியலிலும் செயற்கைக்கோள், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் தற்காலத்தில் நடைபெறுகின்றன. இவற்றில் சூரிய ஆற்றலும், அணு ஆற்றலும், மின் ஆற்றலாகவும், இயக்க ஆற்றலாகவும் மாற்றப்படுகின் றன. ஆற்றல் மாற்றத்தின் முதன்மைப் போக்கு ஆற் றல் மூலங்களாகிய புதைப்படிவு எரிபொருள், அணுக்