உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌ மாற்றிகள்‌ 593

Y வெட்டு X வெட்டு படம் 4. படிகத்தின் இயக்கம் பயன் முடியாதாகையால் ரேடாரை நீரினுள் படுத்த முடியாது. ஆனால் ஒலி அலைகளைப் பொறுத்தவரை நீர் ஒரு சிறந்த கடத்தியாக அமைகிறது. சோனார் என்ற சொல் ஒலி முறையில் கலம் ஓட்டுதலும் தொலைவறிதலும் எனப் பொருள்படும் sound navigation and ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும். சோனார் கருவியானது ஒலியை உருவாக்கவும் (generation), செலுத்தவும் (transmission), பெற்று உணரவும் (receiving) கூடும். கப்பல் ஒன்றிலுள்ள சோனார் கருவியிலிருந்து ஒலியலைகளின் துடிப்பு ஒன்று நீரின் வழியே செலுத்தப்படுகிறது. இத்துடிப்பானது அதன் பாதையில் திண்பொருள்களுடன் மோதுமாயின் அதே அதிர்வெண் கொண்ட எதிரொலி ஒன்று உருவாக் கப்பட்டுச் சோனர் கருவியினால் ஏற்கப்படுகிறது. இந்த எதிரொலி வரும் திசை பொருள்கள் இருக்கும் திசையைக் குறிக்கும். துடிப்பு ஒன்று பரப் பப்பட்ட கணம் முதல் அதன் எதிரொலி ஏற்கப் படும் கணம் வரை உள்ள கால அளவை மதிப்பிடு வதன் மூலம் பொருளின் தொலைவு கணக்கிடப்படு கிறது. போர்க்காலங்களில் இம்முறையானது நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கறியப் பயன்படுத்தப் படுகின்றது. காண்க, ஆழ்கடல் கலம் செலுத்தும் முறை. கடலின் ஆழம் காண்பதிலும் மாலுமிகளுக்குச் சோனார் கருவி உதவுகிறது. கடலின் அடிப்பரப்பை நோக்கிச் செவியுணரா ஒலிக்கற்றை ஒன்றைச் செலுத்தி அதன் எதிர்பலிப்பைப் பெறுவதன் மூலம் கடலின் ஆழத்தைக் கணக்கிட முடிகிறது. மிகவும் நுட்பமான சோனார் அமைப்புகளைக் கொண்டு மீன் திரளின் அளவையும் அவை நீந்தும் ஆழத்தை யும் காண்பதன் மூலம் மீன்களை இனங்கண்டறிய வும் முடியும். ஆற்றல் மாற்றிகள் 593 நீருக்கடியில் ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் மற்றொருவகை மின்கருவி நீரியல் ஒலி வாங்கியாகும் (hydrophone). இயல்பான ஒலிவாங்கி (மைக்ரோ ஃபோன் ) போலவே இவை நிலையான வையாயும் (stability), அலைவிலாத்தன்மை உடைய னவாயும், அதி நுண்ணுணர்வு உள்ளனவாயும் (sen- sitivity) நேரியல்புத் துலங்கலுடனும் (linear response) இருக்கும். இவை நீரின் மிக அதிக ஆழத்திற்கும் வளைந்து கொடுக்காத தன்மையுடையனவாகவும், வெப்பத்தினால் தாக்கப்படாதனவாயும், மிக அதிக அளவு திறனை (power) உடையனவாகவும் அதிகப் பரப்பளவு கொண்டனவாகவும் இருக்கும். நீரடிநிலை ஒலியியல் (underwater acoustics). இவ்வாறான வெவ்வேறு ஆற்றல் மாற்றிகள் நீருக்கடியில் செயல்படும்போது அவை எதிர்கொள் ளும் விளைவுகளை நீரடிநிலை ஒலியியல் விளக்கு கிறது. நீருக்கடியில் ஒலிஅலை செலுத்துகையை ஒலி யாக்கிச் செலுத்துகை இழப்பு (transmission loss), ஒலி ஏற்பு (reception), ஒலி உட்கவர்தல் (absorption), ஒலி வழித்திரும்புதிறன் (divergence), ஒலி எதிர் பலிப்பு (reflection), ஒலி விலகல் (refraction), ஒலி எதிர் முழக்கம் (reverbaration) முதலியவை தாக்கு கின்றன. ஒலி விலகல் என்பது ஒலி அலைகளின் பாதை மாற்றத்தைக் குறிக்கின்றது. நீரின் வெப்பம், அழுத் தம் இவற்றின் வேறுபாட்டினால் ஒலி அலைகளின் திசைவேகம் மாறுபட்டு ஒலிவிலகல் ஏற்படுகிறது. கடலின் வெப்பம் அதன் ஆழத்திற்கு ஏற்ப மாறு படுவதால் ஒலியலையின் ஒளிவிலகல் கீழ்நோக்கி ஏற் படுகிறது. இத்தகைய கீழ்நோக்கிய ஒலிவில கலினால், ஒலி கடலின் மேல் மட்டத்தை எட்டாது. கடலின் கீழ்ப்பாகத்தை ஒலியின் நிழல் மண்டலம் (shadow zone) என்கிறோம். ஆழம் அதி கரிக்க அதிகரிக்க வெப்பம் மாறிலியாகி (constant ) அழுத்தம் மாறுபடத்தொடங்கிவிடும். இந்த மாதிரி யான அழுத்தத்தின் வேறுபாட்டின் விளைவு ஒலி அலையினை மேல் நோக்கிய வட்டப் பாதையில் விலக்கும். ஒலியலை இவ்வாறாக மேலும் கீழும் பாதை மாறும்போது ஆழ்நிலை ஒலிக்கால்வாய்கள் (sound channels) தாமாகவே உண்டாகின்றன. இக் கால்வாய்கள் மூலம், ஒலி, கடலுக்கு அடியில் மிகத் தொலைவிற்குச் செல்ல முடிகிறது. நீரினுள் செலுத்துகைக்கு உட்பட்ட ஒலி அலை வழியில் எந்த ஒரு பொருளையும் எதிர்ப்படாமல் நீரியல் ஒலிவாங்கிக்கு வந்தடைவதை ஒலியின் எதிர் முழக்கம் என்கிறோம். இது ஒரு விரும்பத்தகாத வழக்கமாகும். பொருளை எதிர்ப்பட்டு, அதனைத் தாக்கித் திரும்பிவரும் மற்றுமோர் எதிரொலியுடன் இந்த எதிர் முழக்கம் குறுக்கிட்டு அப்பொருளின் இருப்பிடத்தையும், தன்மையையும் சரியாக அறிய வொண்ணாமல் செய்து விடுகிறது.