உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆமை

38 ஆமை டெஸ்ட்டுடோ (testudo). இந்தப் பொதுவினத் தைச் சேர்ந்த நில ஆமைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் வெப்பப் பகுதி களிலும் மிதவெப்பப் பகுதிகளிலும் வாழ்கின்றன. இவை பகல்நேரங்களில் நடமாடுபவை; தாவரங் களை உணவாகக் கொள்பவை. ஆனால், சில வேளைகளில் புழு பூச்சிகளையும் உண்பதுண்டு, குளிர்காலத்தில் பூமிக்கடியில் குளிர் உறக்கம் கொள் கின்றன. இவை ஏறக்குறைய நூறு ஆண்டுகள் வாழ்வதாகத் தெரிகிறது. இவற்றின் உடல் வட்ட மாகக் குவிந்த மேலோட்டுடன் உள்ளது. மேல் தோல் தகடு நன்கு வளர்ச்சியுற்று அதில் பல மஞ்சள் நிறச் சதுரப்பரப்புகளும், அப்பரப்புகளில் பல கருங்கோடு களும் காணப்படுகின்றன. கழுத்து நீளமாகவும், உள்ளிழுக்கப்படும்போது 'S' போல மடித்து வைக் கப்பட்டுமுள்ளது. கால்கள் தரையில் நடப்பதற் கேற்ப அமைந்துள்ளன; வால் நுனியில் கூர்நகங்கள் உள்ளன. நட்சத்திர ஆமை (Starred tortoise) எனப் படும் டெஸ்ட்டுடோ எலெகென்ஸ் (Testudo elegans) இந்திய, இலங்கைப் புல்வெளிகளில் வாழ்கிறது. படம் 1. நட்சத்திர ஆமை இது நீண்டகாலம் நீரின்றி வாழக்கூடியது. கோடையில், நீர்நிலைகளுக்குச் செல்கிறது. குளிர், காலத்தில். பூமிக்கடியில் குளிர் உறக்கம் மேற்கொள் கிறது. முழுவளர்ச்சியடைந்த ஆமை ஏறக்குறைய 30 செ.மீ. நீளத்திற்கு வளர்கிறது. ஆண் ஆமை பெண் ஆமையை விடச் சற்றுச் சிறியது. அதன் காரப்பேஸ் நன்கு குவிந்த அமைப்புடையது. அதற்குப்பிடரித் தகடு (nuchal plate) இல்லை. மேல்தோல் தகடுகள் நன்கு வளர்ச்சியுற்றுப் பல சதுரக் கூம்புப் பரப்பு களாகத்தோற்றமளிக்கின்றன. இவற்றில் பல மஞ்சள் ஆரக்கோடுகள் காணப்படுகின்றன. பிளாஸ்ட்ரான் உட்குவிந்துள்ளது. டெஸ்ட்டுடோ டிராலன் கோரிக்கா (Testudo travancorica) என்னும் சிறப்பினம் திருவனந் தபுரக் காடுகளில் வாழ்கிறது. ஜியோனமடா டிரைஜுகா (Geomyda trijuga) தென்னிந்தியாவில் காணப்படும் நன்னீர் ஆமை. இதே இனத்தைச் சேர்ந்த மற்ற நாட்டு ஆமைகள் யாவும் பெருமளவு அல்லது முழுமையாக நிலத்தில் வாழ்கின்றன. படம் 2. ஜியோமைடா டிரைஜூகா ஜியோமைடா டிரைஜூகா. இது 20 முதல் 40 செ.மீ. வரை நீளமானது. இதன் கால்கள் சற்றுத் தட்டையா கவும் விரல்கள் விரலிடைச் சவ்வினால் இணைக்கப் பட்டும் உள்ளன. காரப்பேசின் மேற்பக்கம் கடினத் தகட்டினாலும், தலையின்மேற்பக்கம் மென்தோலா லும் மூடப்பட்டுள்ளன. இதன் கழுத்து முழுமையாக ஓட்டினுள் இழுக்கப்படும்; வால் மிகக்குட்டையானது இந்த ஆமை தாவரவுண்ணியாகும். லிஸ்ஸிமிஸ் பங்க்ட்டேட்டா (Lissemys punctata), புள்ளியுடை மெல் ஆமை (spotted soft shell) எனப்படுகிறது. இதன் உடல் எலும்புத் தகடுகள் மிகக் குறைந்தும் உடல் மேற்பரப்பு, தடித்த தோலால் மூடப்பட்டும் உள்ளன. காரப்பேசின் விளிம்புத்தகடுகள் கிட்டத் தட்ட முழுதும் மறைந்துவிட்டன. பிளாஸ்ட்ரானின் எலும்புத்தகடுகள் வலுப்படுத்தும் தகடுகளாக உள் ளன. முகமுனை கூர்மையாகவும் சதைப்பற்றுள்ள உதடுகளுடனும் உள்ளது. உதடுகளுக்குக் கீழே கடி னமான கொம்புப்பொருளாலான தாடைகள் இருக் கின்றன. கால்கள் தட்டையாகத் துடுப்புப்போலவுள் ளன, முன்கால்கள் பின்கால்களை விட நீளமானவை, கால்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கூர்நகங்கள் உள் ளன. இது விரைவாகவும் தேவையானால் நீளமான கழுத்தைப் பின்பக்கம் வளைத்தும் கடிக்கும். ஆகை யால் இதைப் பிடிப்பது எளிதன்று. சிறு விலங்கு களை உணவாகக்கொள்ளும் இது தாவரங்களையும் உண்பது உண்டு. மென்மையான மேல்தோல், உண வுக்குழாய்க் கூம்பு நீட்சிகள், மலப்புழைப்பைகள் ஆகி யவற்றின் வழியாகவும் சுவாசம் நடைபெறுகிறது. முட்டையிடுவதற்காக மட்டுமே இவை நீர்நிலைகளை விட்டு வெளிவருகின்றன. இவை ஏறத்தாழ 25 செ.மீ நீளம் வளர்கின்றன. டிரையானிக்ஸ் கேஞ்சட்டிக்கஸ் (Trionyx gange- ticus). நன்னீர் ஆமை, 70 செ.மீ. வரை வளரும். இதன் ஒவ்வொரு காலிலும் 3 விரல்கள் உள்ளன. காரப்பேசில் மேல்தோல் தகடுகள் இல்லை. எலும்