ஆற்றல் மூலங்கள் 597
இந்த எண்ணெய் உள்ள இடங்களில் இயற்கை வளிமமும் தேங்கி நிற்கும். பெட்ரோலியம் இருக்கு மிடத்தைக் கண்டுபிடித்து அதனை எடுப்பது எளி தான வேலையன்று. ஓரிடத்தில் எண்ணெய் இருப் பதைக் கண்டுபிடிக்கப் பல இடங்களில் தோண்ட வேண்டியிருக்கும். இன்று தரையடியில் எண்ணெய் இருக்குமிடத்தைக் காணப் பல அளவாய்வுகள் (survey) செய்கிறார்கள். முதலில் வான ஊர்திகளில் புவியீர்ப்புமானி (gravity meter), காந்தமானி (magneto meter) முதலியவற்றை எடுத்துக் கொண்டு தரைக்கு மேலாகப் பறப்பார்கள், பண்படா எண் ணெய் ஏராளமாக உள்ள இடங்களில் புவியீர்ப்பு விசையும், காந்தவிசையும் இயல்பான அளவிலிருந்து மாறுபடும். பின் அந்த இடங்களில் தரையில் வெடி களை வெடித்து அதில் நில அலைகள் பரவும் தன்மை களைப் பார்ப்பார்கள். இது மேலும் துல்லியமாக எண்ணெய் வளம் உள்ள இடங்களைக் காட்டும். பின் அந்த இடங்களில் துளையிடும் கருவிகளைக் கொண்டு பல் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்குத் துளைகள் இடுவார்கள். அத்துளைகளில் குழாய்களை இறக்குவார்கள். பெட்ரோலிய எண்ணெய் இருக்கும் இடத்தைக் குழாய் அடைந்தவுடன் உட்புறத்தில் வெளியே மிகுதியான அழுத்தத்தால் எண்ணெய் பீறிட்டுக் கொண்டு வரும். துளையிடும் எல்லா இடங்களிலும் எண்ணெய் வருவதில்லை. புதிய கணிபெறிகள் துணை கொண்டு எண்ணெய் வளத்தைத் தேடுகையில் தோல்விக்கான வாய்ப்புக் குறையும். இத்தகைய தற்காலத் தேடு கருவிகளால் கடலுக்கடியிலும் பேரளவில் எண்ணெய் வளங்கள் உள்ளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் நாட் டில் பம்பாய்க்கருகில் கடலடியில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டு எண்ணெய் வெளிக்கொணரப்படுகிறது. இங்கிலாந்து நாட்டுக் கருகிலும் வடகடலில் இது போன்ற வளம் உள்ளது. பெட்ரோலியத்தில் அடங்கியிருக்கும் வெவ்வேறு பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுப் பதற்குப் பல முறைகளைக் கையாளுகிறார்கள். இதில் வடித்துப் பகுத்தல் என்ற முறை (fractional distilla- tion) சிறப்பானது. நம் நாட்டில் இது போன்ற தூய்மைப்படுத்தும் ஆலைகள் பம்பாய்க்கு அருகி லுள்ள டிராம்பேயிலும், சென்னைக்கு அருகிலுள்ள மணலியிலும், ஆசாம் மாநிலத்தில் கௌஹாத்தி, திக்பாய் என்ற இடங்களிலும், பீகார் மாநிலத்தில் பரூனியிலும், அமைக்கப்பட்டுள்ளன. டன் நம் நாட்டிற்கு ஆண்டு ஒன்றுக்கு 310 இலட்சம் பெட்ரோலியப் பொருள்கள் தேவைப் படுகின்றன. இதில் 110 இலட்சம் டன் பொருள்கள் மட்டுமே இந்தியாவிலேயே எடுக்கப்படுகின்றன. இயற்கை வளிமம். பூமிக்கடியில் நிலக்கரியுடனோ, A ஆற்றல் மூலங்கள் 597 சில இடங்களில் தனியாகவோ அதிக அழுத்தத்தில் அடைபட்டிருக்கும் இயற்கை வளிமம் ஒரு சிறந்த தூய்மையான எரிபொருள் ஆகும். இது உண்மையில் பல வளிமங்களின் கலவை ஆகும். அவற்றில் சிறப் பானவற்றின் பெயர்களும் கலப்பு விழுக்காடுகளு மாவன : மீதேன்-85%, ஈதேன்- 10%, புரோபேன்3-%. ஆகவும் பியூட்டேன், பென்டேன், எக்சேன், எப்டேன், ஆக்டேன் முதலியன சிறிய அளவாகவும் உள்ளன. இன்று பல வீடுகளில் சமையல் அடுப்புகளில் எரிவது இந்த வளிமமே ஆகும். இயற்கை வளிமத்தை அதிக அழுத்தத்தில் இரும்பு உருளைகளில் அடைத்து, வீடுகளுக்கு வழங்குகிறார்கள். அதிக அழுத்தத்தில் இந்த வளிமம் நீர்மமாக இருப்பதால், இந்த எரி வளிமத்தை நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வளிமம் என அழைக்கிறார்கள் (liquefed petroleum as - LPG), இது எரியும்போது எந்த வகைப்புகையும் உண்டா காது. இதற்கு இயற்கையில் மணம் கிடையாது. ஆனால் இரும்பு உருளைகளில் வீட்டிற்கு வரும் இயற்கை வளியுடன் ஒரு மணத்தைப் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாகச் சேர்க்கிறார்கள். இயற்கை வளிமத்திலிருந்து சுமார் 2000 இற்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் சிறப்பான சில செயற்கை ரப்பர், செயற் கைப் பெட்ரோல், ரேயான் துணி, வேதியியல் உரங் கள் என்பனவாகும். விறகுக்குப் பதிலாக இது சமை பலுக்குப் பயன்படுவதால் பெரிய அளவில் மரக காடுகள் அழிவது தவிர்க்கப் படுகின்றன. இயற்கை வளிமம் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் மிகப் பேரளவில் கிடைக்கிறது. கனடா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ருமேனியா, சீனா, சோவியத் நாடு முதலிய நாடுகளிலும் இது கிடைக்கின்றது. நிலக்கரி. பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு அப்படியே பயன்படுத்தப்படும் இயற்கை எரிபொருள் களில் சிறந்தது நிலக்கரி ஆகும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நில நடுக்கத்தால் புதையுண்ட பெரிய மரக் காடுகள் வெப்பத்தாலும் அழுத்தத் தாலும் செறிவெய்தி நிலக்கரியாக மாறுகின்றன, அவை இதுவரை அடைந்த நிலைகளைப் பொறுத்து நிலக்கரி பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை முற்றா நிலக்கரி (peat), பழுப்பு நிலக்கரி (lignite), புதை நிலக்கரி (bituminous coal), அனல் நிலக்கரி (anthracite), கேனல் நிலக்கரி (canel coal) என்பன. அரைகுறையாகக் கரியாக்கப்பட்ட தாவரப் பொருள் முற்றா நிலக்கரியாகும். இது பஞ்சுபோல் மெதுவாக ஈரப்பசையுடன் இருக்கும்.மேல்நாடுகளில் சமையலுக்காக வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. சிறிது முற்றிய நிலக்கரியே பழுப்பு நிலக்கரியாகும். இது பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் இருக்கும். புதை நிலக்கரி விளைந்த கரியாகும். ஆனால் இதிலும் இது