உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, வேதியியல்‌ 599

என்றும் வற்றாது. வருங்கால வழிமுறையினருக்குச் சூரிய ஆற்றல் ஒரு வற்றாத மூலமாய் இருக்கும். பலநூறு நில வெப்ப ஆற்றல் (geothermal energy). நிலப்பரப்பில் மேற்பகுதி குளிர்ந்திருந்தாலும் அதன் உட்பகுதி உயர்ந்த வெப்ப நிலையில் உள்ளது. இந்த வெப்பம் சில இடங்களில் நிலப் பரப்புக்கு அருகில் வந்துவிடும். மீட்டர்கள் ஆழத்திற்குப் பூமியில் துளையிட்டால் நீராவி சில இடங்களில் வெளிவரும். இதுபோன்ற அமைப்பு உலகில் வடக்கு இத்தாலி நாட்டிலும், ஐஸ்லாந்திலும் உள்ளது. இத்தாலி நாட்டில் நிலத்திற்கடியிலிருந்து வரும் நீராவியைக் கொண்டு ஆக்கம் கிறார்கள். மிக்க குளிருள்ள ஐஸ்லாந்தில் நிலத்தடி யிலிருந்து வரும் நீராவியும் வெந்நீரும் அலுவலகங் களை வெப்பமாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. நம் நாட்டில் இவ்வகை வெப்ப ஊற்று இல்லை. மின் செய் காற்றாற்றல் (wind energy). காற்று வீசுவதால் தோன்றும் இயக்க ஆற்றலைக் கொண்டு நீர் ஏற்றுவ தற்கும் மின்சாரம் உண்டாக்குவதற்கும் உரிய கருவி களை இயக்கமுடியும். இவ்வகை காற்றாலைகள் இரண்டு வகைப்படும். ஒன்றில் அச்சு கிடைநிலையில் உள்ளதால் அதை இடைநிலை அச்சுக் காற்றாலை horizontal axle wind mill) என்பர். மற்றொன்றில் அச்சு நிலைக்குத்தாக இருப்பதால் அது குத்துநிலை அச்சுக் காற்றாலை எனப்படும் (vertical axle wind mill). இதில் பிந்தியது மிகக் குறைவான காற்று ஓட்டத்திலும் இயங்கவல்லது. நெதர்லாந்து நாட்டில் எண்ணற்ற அளவில் காற்றாலைகள் பல ஆண்டு களாக நீர் இறைக்கப் பயன்பட்டுவருகின்றன. நம் நாட்டில் தற்பொழுதுதான் நீர் இறைக்கும் காற்றா லைகள் பயன்படத் தொடங்கியுள்ளன. அலை ஆற்றல். (tidal energy) சில சமயங்களில் கடல் பொங்கிக் கொந்திளிக்கும் நேரங்களில் கடல் மட்டம் பல மீட்டர் அளவிற்கு உயருகின்றது. அந்த நீர் பாதுகாப்பான அணைக்குள் நிரப்பப்படுகிறது. கடல் மட்டம் தாழ்ந்துள்ளபோது தேக்கிய நீரை இயக்கி ஆற்றலைப் ஓடவைத்து எந்திரங்களை பெறலாம். இதுபோன்ற அமைப்பு பிரான்சு நாட் டில் லாரன்சு (larance) கடற்கரையில் உள்ளது. இங்கு அலை ஆற்றல் மின் ஆக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது. ஆற்றல், வேதியியல் சி.இ.சூரியமூர்த்தி வேலை செய்வதற்கு வேண்டிய திறன், ஆற்றல் எனப்படும். ஒரு மண்டலத்தின் (system) மீது வேலை செய்ய இன்னெரு மண்டலத்திற்குத் தேவைப் படும் திறமை திறன் எனப்படுகிறது. ஆற்றல் பல வகைப்படும். அவையாவன. ஆற்றல், வேதியியல் 599 புதையுண்ட தாவர, விலங்கு எச்ச வேதியியல் ஆற்றல், சூரிய ஒளி ஆற்றல், அணுஉலை (reactor ) யில் இருந்து கிடைக்கும் அணுக்கரு ஆற்றல் (nuclear energy), ஒரு வணிக நிறுவனத்திலிருந்து கிடைக்கும் மின் ஆற்றல், நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் ஆகிய வைகளாகும். ஆற்றலைக் குறிக்கும் அலகுகள் எர்க் (ergs) ஜுல் (joules) கிலோ வாட் (kW) வாகும். என்பன வேதியியல் ஆற்றல். ஒரு பொருளில் உள்ளார்ந்த ஆற்றல், அப்பொருள் ஒரு வேதிவினைக் குள்ளாகும் போது வெளிவிடப்படுகிறது. அவ்வாறு வினை ப் பொருள் வேதிவினையில் ஈடுபட்டு வேறு பொருளா கும்போது ஆற்றல் வெளிவிடப்படுகிறது. நிலக்கரி ஆக்சிஜனுடன் வேதிவினையில் ஈடுபட்டுக் கார்பன் டை - ஆக்ஸைடை அளிக்கும்போது வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகக் கிடைக்கிறது. பெரும்பாலான வேதிவினைகளிலும் வெப்பம் வெளிவிடப்படுகிறது அல்லது உட்கொள்ளப்படு கிறது. ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி, வெப்ப ஆற்றலில் ஏற்படும் ஏற்றம் அல்லது குறைவு மற்று மோர் ஆற்றலில் ஏற்படும் குறைவு அல்லது ஏற்றத் தின் விளைவாகும். வேதியியல் சேர்மங்களில் உள்ள பிணைப்புகள் வேற்றுமை அடையும்போது வேதியி யல் ஆற்றலிலும் மாறுதல் ஏற்படுகிறது. அப்படி ஏற் படும் மாறுதலால் வெப்பம் வெளிவிடப்படுகிறது. அல்லது உட்கொள்ளப்படுகிறது. இவ்வுலகத்திற்குத் தேவையான பெரும்பாலான ஆற்றல் கரியை எரிப்பதன் மூலமாகவோ பெட் ரோலிய ஹைட்ரோக்கார்பன்களை எரிப்பதன் மூலமாகவோ கிடைக்கின்றது. ஒரு குறிப்பிட்ட எடை அளவு எரிபொருளை எரிக்கும் போது கிடைக்கும் வெப்ப அளவிற்குக் கலோரி மதிப்பு எனப்படும். ஒரு வினையின் ஆற்றல் மாற்றம், அந்த வினை மாறா அழுத்தத்தில் நடைபெறுகிறதா அல்லது மாறா பருமன் அளவில் நடைபெறுகிறதா என்பதனைப் பொறுத்து அமையும், ஒரு வினை மாறா அழுத்தத் தில் நடைபெறும்போது வினையில் தோன்றும் விளை பொருள்களின் (products) மொத்த வெப்ப உள்ளடக் கத்திற்கும் (heat content) வினைப் படுபொருள்களின் (heactants) மொத்த வெப்ப உள்ளடக்கத்திற்கும் உள்ள வேற்றுமை அவ்வினையின் வெப்பம் (heat of the reaction) எனப்படும். Hp என்பது விளை பொருள்களிடம் அடங்கிய ஆற்றல் எனவும் Hr என்பது வினைப்படு பொருள்களின் வெப்ப ஆற்றல் எனவும் கொண்டால் இவ்வினையின் மொத்த வெப்ப ஆற்றல் மாற்றம். AH = Hp - Hr ஒரு வினை மாறாப் பருமன் அளவில் நடைபெறும் போது வினையில் தோன்றும் விளை பொருள்களின் அக ஆற்றலுக்கும் வினைப்படு பொருள்களின் அக